சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1 கோடி பேருக்கு சாலை பணியாளர் வேலை.. ஸ்டாலின் பேச்சால் சலசலப்பு

ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    MK Stalin Erode Speech: ஈரோடு பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் -வீடியோ

    சென்னை: உண்மையிலேயே திமுக தலைவர் முக ஸ்டாலின் இதை தெரிந்து சொன்னாரா, அவரையும் அறியாமல் சொல்லிவிட்டாரா என்று தெரியவில்லை.

    நேற்று ஈரோடு ஆனைக்கல் பாளையத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் பேசும்போது, "திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர்கள் பணி வழங்கப்படும்" என்று பேசியதில் இருந்து எல்லோரும் கிறுகிறுத்து போய் உள்ளனர்.

    இந்தியாவிலுள்ள பெரிய நகரங்களில் சென்னையில் மட்டும் தான் வேலைவாய்ப்பு விகிதம் மிக மோசமாக குறைந்திருக்கிறது. நாடு முழுவதும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவது ஒரு பக்கம் இருந்தாலும், தமிழகத்தில் இதன் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

    மு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு.. கோவை போலீஸ் அதிரடிமு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு.. கோவை போலீஸ் அதிரடி

    தொழிற்சாலைகள்

    தொழிற்சாலைகள்

    அதனால் இதனை எளிதாக நாம் கடந்து போய்விட முடியாது. ஒரு பக்கம் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் வட மாநிலங்களுக்கு இடம் பெயருகிறது, மற்றொரு பக்கம், இங்குவர வேண்டிய முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிடுகிறது.. ஆக கடைசியில் இது வேலை வாய்ப்பின்மையைதான் அதிகப்படுத்தி வருகிறது.

    திமுக-அதிமுக

    திமுக-அதிமுக

    இதனால் தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்த எந்த திட்டத்தையும் சரியாக செயல்படுத்துவதில்லை என்பதே பெரிய குறையாக இருக்கிறது. அது அதிமுக-திமுக இரண்டு கட்சிகளுக்குமே பொருந்தும்! இதுதான் இன்றைய யதார்த்த நிலை!

    பாஜகவிற்கு கஷ்டம்.. காங்கிரஸ் நிலை என்ன தெரியுமா?.. அசத்தல் சர்வே இதோ!

    முதல் சந்தேகம்

    முதல் சந்தேகம்

    ஆனால் ஸ்டாலின் நேற்று பேசும்போது ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறார். இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. முதல்கேள்வி, முதலில் இங்கே ஒரு கோடி இளைஞர்கள் உள்ளனரா? அதுவும் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனரா என்று தெரியவில்லை.

    2-வது கேள்வி

    2-வது கேள்வி

    அடுத்ததாக, சாலை பணிக்கு ஒரு கோடி பேர் வேலைவாய்ப்பில் ஈடுபடுத்தப்படுவார்களா? மற்ற மாநிலங்களிலும் அப்படித்தான் செயல்படுத்தப்படுகின்றன என்பதும் தெரியவில்லை.

    3-வது சந்தேகம்

    3-வது சந்தேகம்

    மூன்றாவதாக, நடக்க இருப்பதோ, நாடாளுமன்ற தேர்தல், இதில் எப்படி கோடி பேருக்கு வேலை வாய்ப்பை தர முடியும். நாடு முழுக்க ஹைவே-யில் ரோடு போட்டால் வேண்டுமானால் இது சாத்தியப்படும். ஆனால் நம்ம ஊருக்கு இது எடுபடுமா?

    4-வது சந்தேகம்

    4-வது சந்தேகம்

    நான்காவதாக, ஒரு கோடி பேரை வேலைக்கு வைத்தால் யார் சம்பளம் தருவது? எவ்வளவு என்று தருவது? தமிழக கஜானா என்னாவது? மாசம் பத்தாயிரம்னே வச்சிக்கிட்டாலும் பட்ஜெட் எங்கோ போய் முட்டி மோதி நிற்குமே? இருப்பதையெல்லாம் ஒரு கோடி பேருக்கு தூக்கி தந்துவிட்டால் மற்ற அரசு பணியாளர்களுக்கு என்னத்தை தருவது? என்பன போன்ற கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன.

    சலசலப்பு

    சலசலப்பு

    எதையாவது சொல்லணுமே என்று திமுக தலைவர் பேசிவிட்டு சென்றாரா? அல்லது இதையெல்லாம் சாத்தியப்படுத்த கையில் ஏதாவது ஐடியா வைத்திருக்கிறாரா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். மொத்தத்தில் ஸ்டாலின் அறிவிப்பு சலசலப்பையும், விவாதத்தையும் எழுப்பி விட்டுள்ளது.

    English summary
    In Erode Meeting, DMK Leader MK Stalin has announced that Roadmakers work for one crore young people in Tamilnadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X