களம் 2ல்.. திமுகவை ஓவர்டேக் செய்த அதிமுக.. கடைசி வரை நீடித்த "மர்மம்".. இப்போ பாருங்க டிவிஸ்டை!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் திமுகவை விட அதிமுக மிகவும் வேகமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.. நேற்று நடந்த சம்பவமே இதற்கு சிறந்த உதாரணம்!
கூட்டணி எல்லாம் வைக்க முடியாது.. கடைசி நேரத்தில் ஏதாவது நடந்துடும்.. தொகுதி பங்கீட்டில் பிரச்சனையாமே.. ஓபிஎஸ் - இபிஎஸ் மோதலாமே.. என்றெல்லாம் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தன. ஆனால் அந்த செய்திகளை எல்லாம் பொய் என்று நிரூபிக்கும் வகையில் நேற்று அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.. இந்தாங்க 171 வேட்பாளர்களின் லிஸ்ட் என்று அதிமுக தனது பட்டியலை வெளியிட்டது. இதன் மூலம் திமுகவை அதிமுக ஓவர் டேக் செய்துள்ளது.

அதிமுக
தேர்தலில் கூட்டணி என்பது மிக முக்கியம்.. அதிலும் தமிழக தேர்தலில் கூட்டணி என்பது மிக மிக முக்கியம். இதை கருத்தில் கொண்டே அதிமுக, திமுக இரண்டும் பெரிய கூட்டணிகளை அமைத்துள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் இரண்டு கட்சியிலும் இழுபறி நீடித்தது. அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக , திமுக கூட்டணியில் காங்கிரசும் பிரச்சனை செய்தது.

கூட்டணி
இதனால் இரண்டு பக்கமும் கடுமையாக இழுபறி நீடித்தது.. கிட்டத்தட்ட அதிமுக , திமுக இரண்டும் ஒரே கட்டத்தில்தான் கூட்டணியை உறுதி செய்தது. 12-18 இடைவெளியில்தான் இரண்டு கட்சியிலும் கூட்டணி அமைக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அதிமுக அசுர வேகம் எடுத்தது. ஆனால் கூட்டணி உறுதியான பின் திமுக பின்தங்கிவிட்டது. நேற்று முதல்நாள் இரவு முழுக்க அதிமுக மீட்டிங் போட்டது.

மீட்டிங்
இரவு முழுக்க நடந்த மீட்டிங்கை தொடர்ந்து நேற்று மாலை கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை கொடுத்துவிட்டு , அதிமுக தனது வேட்பாளர்களையும் அறிவித்தது. ஆனால் திமுக இப்படி செய்யாமல் திணறி வருகிறது. ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே பிரச்சனை இருக்கிறது, மோதல், கருத்து வேறுபாடு என்றெல்லாம் நிறைய செய்திகள் வந்தது. கடைசி வரை இதில் என்ன நடக்க போகிறது என்று ஒரு மர்மம் நீடித்து வந்தது .

மசாலா
ஆனால் நீங்கள் எதிர்பார்க்கும் மசாலா இங்கு கிடைக்காது என்று அதிமுக மீண்டும் ஒன்றாகி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பெரிய எதிர்ப்பு இல்லாமல் அதிமுக இதை சாதித்து உள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் திமுக கேம்பில்தான் டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது. திமுக பக்கம் நிலவரம் அவ்வளவு சுமுகமாக இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கேட்கும் 6 தொகுதிகளை அளிக்காமல் வேறு தொகுதிகளை அளிக்க திமுக நினைக்கிறது.

குழப்பம்
இதனால் திமுக கேம்பில் இன்னும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு தாங்கள் போட்டியிடும் வேட்பாளர்களையும் திமுக அறிவிக்காமல் திணறுகிறது. சில தொகுதிகளை தேர்வு செய்வதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.

இழுபறி
கூட்டணி கட்சிகளிடம் கண்டிப்பு காட்டுவதா, சீட் கேட்கும் நிர்வாகிகளிடம் கண்டிப்பு காட்டுவதா என்று தெரியாத நிலையில் திமுக இருக்கிறது. திமுகவின் தாமதத்திற்கு இதுவே காரணமாக உள்ளது . இதனால் தற்போதைய நிலவரப்படி தேர்தல் களத்தில் திமுகவை அதிமுக ஓவர்டேக் செய்துள்ளது . இன்று இரவுக்குள் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது .
-
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications