எடப்பாடி பழனிச்சாமி கோட்டையான சேலத்தில் கோட்டை விட்ட அதிமுக.. கொடி நாட்டிய திமுக! ஈரோட்டிலும் அபாரம்
சென்னை: சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் இந்த பகுதிகளில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக இருந்த 10 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகள், 23 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய 9வது வார்டு கவுன்சிலர் பதவி, மாவட்டப் பஞ்சாயத்து 10வது வார்டு கவுன்சிலர் பதவி ஆகியவற்றுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 11 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
24 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், 91 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

திமுக வெற்றி
சேலம் மாவட்ட ஊராட்சி 10வது வார்டு உறுப்பினர் மற்றும் பனமரத்துப்பட்டி ஒன்றியம் 9வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த 9ம் தேதி தேர்தல் நடந்தது. தி.மு.க. சார்பில் சண்முகம், அ.தி.மு.க. சார்பில் எம்.ஆர்.முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் பெ.பழனிசாமி, தே.மு.தி.க. சார்பில் சிவலிங்கம், அ.ம.மு.க.சார்பில் மு.மணிகண்டன் உள்பட 11 பேர் களத்தில் போட்டியிட்டனர். தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது. தி.மு.க. வேட்பாளர் சண்முகம், அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர். முருகனை விட 10 ஆயிரத்து 472 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றார்.

பனமரத்துப் பட்டி
பனமரத்துப்பட்டி ஒன்றியம் 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் சுரேஷ்குமார், அ.தி.மு.க. சார்பில் மாணிக்கம் உள்பட 5 பேர் போட்டியிட்டனர். திமுக வேட்பாளர் சுரேஷ்குமார் 2,993 வாக்குகளை பெற்று வென்றார். சுயேச்சை வேட்பாளர் தேவி குமார் 1,222 வாக்குகள், அதிமுக வேட்பாளர் மாணிக்கம் 320 வாக்குகள் பெற்றனர்.

எடப்பாடி ஒன்றியம்
எடப்பாடி ஒன்றிய பகுதியில் தாதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சித்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர், பதவிகளுக்கான இடை தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள், எடப்பாடி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று காலை எண்ணப்பட்டது. தாதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் வளர்மதி வேலு 2004 வாக்குகளைப் பெற்றார், இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளரான அரசி மாதையன் 1912 வாக்குகளைப் பெற்றார். வளர்மதி வேலு 92 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தல் ஏன்
கடந்த முறை நடந்த மாவட்ட ஊராட்சி 10வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த மணி வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் அவர் ஓமலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றதால் அந்த இடம் காலியானது. தற்போது அந்த உறுப்பினர் பதவியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.தி.மு.க வேட்பாளர் சுரேஷ்குமார் 2,993 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மாணிக்கத்திற்கு 320 வாக்குகள் கிடைத்தது.

ஈரோடு
இதேபோல ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருந்த 20 ஊரக, உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடந்த தேர்தலில், 70. 22 சதவீதம் பேர் வாக்களித்த நிலையில், 9 மையங்களில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு எண் 5ல், திமுக வேட்பாளர் ஜெ.சதாசிவமும், ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 4வது வார்டு தேர்தலில் திமுக வேட்பாளர்கள் கே.வி.விவேகானந்தனும், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 10ல், செந்தில்குமாரும் வெற்றி பெற்றனர்.

ஈரோடு அதிமுக வியூகம்
ஈரோடு மாநகர் மாவட்டம் மற்றும் ஈரோடு புறநகர் மாவட்டம் என நிர்வாக வசதிக்காக அதிமுக இரு மாவட்டங்களாக சமீபத்தில் பிரித்தது. ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக கே.வி.ராமலிங்கம் பொறுப்பு வகிக்கிறார். புறநகர் மாவட்ட செயலாளராக கே.சி.கருப்பண்ணன் பொறுப்பு வகித்தார். ஆனால் இதில் புறநகர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, அதிமுக ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் என்ற பெயரில் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதற்கு கேஏ செங்கோட்டையன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் என்ற பெயரில் உருவாகியுள்ள மாவட்டத்திற்கு கேசி கருப்பண்ணன் செயலாளர் பதவியில் தொடர்கிறார். சீனியரான செங்கோட்டையனிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதன் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவை வலுப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் அது இந்த தேர்தலில் நடக்கவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி கோட்டை
சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடிதான், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊராகும். ஆனால் அந்த மாவட்டத்திலும் திமுக வெற்றிக் கொடியை நாட்டியுள்ளது. 6 மாதங்கள் முன்பு வரை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு, இப்போது, செல்வாக்கு குறைந்து விட்டதா, அதிலும் சொந்த மாவட்டத்திலேயே செல்வாக்கு குறைந்து விட்டதா என்ற கேள்விகளை இந்த ரிசல்ட் எழுப்புகிறது.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!











Click it and Unblock the Notifications