இலக்கு 40 ஆயிரம்; எட்டுவது 60 ஆயிரம்...! உதயநிதியை வியக்க வைத்த செந்தில்பாலாஜி
Recommended Video
சென்னை: திமுக இளைஞரணியில் கரூர் மாவட்டத்தில் இருந்து 60 ஆயிரம் இளைஞர்களை புதிதாக இணைப்பேன் என அந்த அணியின் செயலாளர் உதயநிதியிடம் மாவட்டச் செயலாளர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.
கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை ஒன்றியம் ஜெகதாபி, வேலாயுதம்பாளையத்தில் திமுக இளைஞரணி சார்பாக தூர்வாரப்பட்டுள்ள குளத்தை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார் உதயநிதி. இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி குளத்தை வேகமாக தூர்வாரியதற்காக மாவட்டச் செயலாளர் செந்தில்பாலாஜியையும், இளைஞரணி நிர்வாகிகளையும் பாராட்டினார்.

இதைத்தொடர்ந்து திமுக இளைஞரணியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு முகாமை பார்வையிட்ட அவர் அது குறித்து கேட்டறிந்தார். அப்போது பேசிய செந்தில்பாலாஜி, கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளதால் தொகுதிக்கு 10 ஆயிரம் வீதம் 40 ஆயிரம் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என தலைமை இலக்கு நிர்ணயித்துள்ளது. இப்போது சொல்கிறேன் கரூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் இளைஞர்களை திமுக இளைஞரணியில் இணைப்பேன் என உதயநிதியிடம் உறுதியளித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத உதயநிதி வியந்துபோனார்.
அதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தி மொழி விவகாரத்தில் திமுக பின்வாங்கவில்லை என்றும், திமுகவின் போராட்ட அறிவிப்பை அடுத்து அமித்ஷா தான் பின்வாங்கினார் எனவும் கூறினார். மேலும், இது திமுகவுக்கு கிடைத்த வெற்றிதான் என்றும், இனி வரும் காலத்தில் இந்தியை திணிக்க முயற்சித்தால் திமுக இளைஞரணி போராட தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications