ஹைடெக் முறையில் திமுக இளைஞரணியில் உறுப்பினர் சேர்க்கை...!
Recommended Video
சென்னை: திமுக இளைஞரணி சார்பாக தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் இன்று காலை தொடங்கின.
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், அந்த அணியின் மூலம் திமுகவை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குளம் குட்டைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொண்டு வருவதுடன், ரத்ததானம் உள்ளிட்ட சமுக நலப்பணிகளிலும் அக்கறை காட்டத் தொடங்கியுள்ளார்.

இரண்டு மாத காலத்திற்குள் புதிதாக 30 லட்சம் இளைஞர்களை திமுக இளைஞரணியில் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்துள்ள உதயநிதி ஸ்டாலின், அதற்கான நடவடிக்கைகளில் முழு வீச்சில் இறங்கியிருக்கிறார். மேலும், ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தில் உள்ள நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் அப்படியே இளைஞரணிக்குள் கொண்டு வருகிறார். இதனால் மாவட்டச் செயலாளர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற முகாமிற்கு தானே நேரடியாக சென்றதோடு மட்டுமல்லாமல், அங்கு அமர்ந்து புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டார். படிவங்கள் மூலம் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணி ஒரு புறம் நடக்க, இணையதளம் மூலமும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள திமுக இளைஞரணி இணையதள பக்கத்திற்கு சென்றால், எளிமையான முறையில் உறுப்பினராக முடியும்.
இன்றைய இளைஞர்கள் நேரடியாக முகாமிற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்துதர தயக்கம் காட்டுவதை அறிந்து, உணர்ந்து புதிய உறுப்பினர்கள் சேர்ப்பில் தொழில்நுட்பத்தையும் புகுத்தியுள்ளார் உதயநிதி.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
நாடு முழுக்க கேஸ்.. அந்த ஒரு பேச்சுக்காக விடாது துரத்தும் கேஸ்.. உதயநிதி பிரமாண பத்திர சீக்ரெட்! -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!











Click it and Unblock the Notifications