2 டிரெஸ்சும் பார்த்தா ஒரே மாதிரி இருக்கா? கார் விபத்து பற்றி கேள்வி எழுப்பிய நபர்.. குஷ்பு விளாசல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக சேர்ந்த நடிகை குஷ்புவின் கார் விபத்து குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்களுக்கு குஷ்பு காட்டமாக பதில் அளித்துள்ளார்.

இன்று வெற்றி வேல் யாத்திரைக்காக கடலூர் சென்ற பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புவின் கார் மதுராந்தகம் அருகே விபத்துக்கு உள்ளானது. மதுராந்தகம் அருகே கார் சென்று கொண்டு இருந்த போது, கண்டெய்னர் லாரி காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

காரின் அருகே வேகமாக சென்ற கண்டெய்னர் லாரி காரை உரசி சென்று உள்ளது. இதில் காரின் ஒரு கதவு மோசமாக சேதம் அடைந்தது. பின்பக்கத்தில் இருந்த கதவு மோசமாக சேதம் அடைந்துள்ளது.

சேதம்

சேதம்

இந்த காரில் பயணித்த குஷ்புவிற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. காரில் சென்ற குஷ்புவிற்கு சின்ன காயம் கூட ஏற்படவில்லை. ''முருகன் அருளில் காயம் எதுவும் ஏற்படவில்லை. கார் விபத்துக்கு உள்ளானாலும் பிரச்சனை இல்லை. நான் தொடர்ந்து வெற்றிவேல் யாத்திரையில் கலந்து கொள்வேன்'' என்று குஷ்பு டிவிட் செய்து இருந்தார் .

விபத்து

விபத்து

இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த விபத்தில் சதி இருக்கலாம் என்று பாஜக தலைவர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இதனால் லாரி ஓட்டுநர் குறித்தும், விபத்து நடந்தது எப்படி என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நலம் விசாரித்தனர்

இந்த நிலையில் திரை உலகினர், அரசியல் தலைவர்கள் பலர் குஷ்புவை நலம் விசாரித்து வருகிறார்கள். அதே சமயம் இந்த விபத்து எல்லாம் சும்மா.. வேண்டுமென்றே பிரபலத்திற்காக இப்படி செய்கிறார்கள் என்றும் சில நெட்டிசன்கள் டிவிட் செய்து வருகிறார்கள். அதில் ஒருவர்.. குஷ்பு காரின் முன் பக்கம் அமர்ந்து ஒரு போட்டோ, பின்பக்கம் அமர்ந்து ஒரு போட்டோ எடுத்து உள்ளார்.. இதெல்லாம் நாடகம் என்று டிவிட் செய்து இருந்தார்.

கோபம்

கோபம்

காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் குஷ்பு இருப்பது போல புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார். இந்த டிவிட்டை பார்த்து கோபம் அடைந்த குஷ்பு, இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், முட்டாள்கள் எப்போதும் முட்டாள்களாகவே இருப்பார்கள். நீங்கள் படித்தது எல்லாம் வீண். புகைப்படத்தில் இருக்கும் இரண்டு உடைகளும் ஒரே மாதிரியா இருக்கிறது? என்று கேட்டுள்ளார்.

கேள்வி

கேள்வி

மேலும், இரண்டு இருக்கையிலும் இருக்கும் நபர்களின் உடைகள் ஒரே மாதிரியா இருக்கிறதா? உங்களுடைய முட்டாள்தனமான குணத்திற்கு வாழ்த்துக்கள், என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்து குறித்த சந்தேகம் எழுப்பிய பிறருக்கும் குஷ்பு இதேபோல் பதில் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+