சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

25 பேர்.. திருநாவுக்கரசும், ஸ்டாலினும்.. டெல்லி பறந்த போன்.. பாஜக சீக்ரெட்டை உடைத்த திருச்சி சூர்யா

பாஜகவின் திருச்சி சூர்யா, அண்ணாமலை, முருகன் பற்றி கருத்து கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜகவின் அடுத்தக்கட்ட பிளான்கள் என்னென்ன என்பது குறித்து, வெளிப்படையாகவே திருச்சி சூர்யா நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

திருச்சி சூர்யா ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அப்போது, தமிழகத்தில் நிலவும் பரபரப்பான சம்பவங்கள் மற்றும் திமுக அரசு செயல்பாடுகள் குறித்த கேள்விகளை முன்வைத்தோம்.

அவைகளுக்கு திருச்சி சூர்யா நீண்ட விளக்கத்தை சற்று காட்டமாகவே தெரிவித்துள்ளார்.. அப்போது ஒரு பிரதான கேள்வியையும் கூடுதலாக கேட்டோம்.

SC-யோ, பள்ளரோ, பறையரோ.. ஆ. ராசா குலத்தொழிலையா பார்க்கிறார்.. பேசக்கூடாதுங்க.. சீறிய திருச்சி சூர்யாSC-யோ, பள்ளரோ, பறையரோ.. ஆ. ராசா குலத்தொழிலையா பார்க்கிறார்.. பேசக்கூடாதுங்க.. சீறிய திருச்சி சூர்யா

 பக்கா பிளான்

பக்கா பிளான்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அதிருப்திகள் கட்சிக்குள் எழுந்துள்ளதா? எதற்காக எல்.முருகனுக்கு கூடுதல் கட்சி பொறுப்பு தரப்பட்டுள்ளது? கடந்த 2019ம் ஆண்டு எம்பி தேர்தலின்போது, காங்கிரஸின் மாநில தலைவர் பொறுப்பை, திருநாவுக்கரசிடம் இருந்து பறித்து, கேஎஸ் அழகிரியிடம் தந்தார்கள்.. அந்தவகையில், எம்பி தேர்தல் வருவதால் முருகனுக்கு கூடுதல் பொறுப்பு என்றால், அண்ணாமலையின் செயல்பாடுகளில் மேலிடத்துக்கு நம்பிக்கை இல்லை என்றுதானே அர்த்தம்? என்ற கேள்வியை முன்வைத்தோம்.

 எம்ஜிஆர்

எம்ஜிஆர்

அதற்கு பாஜக சூர்யா நம்மிடம் தந்த விளக்கம் இதுதான்: "அண்ணாமலை மீது அப்படி எந்த அதிருப்தியும் யாருக்கும் இல்லை.. எங்கள் கட்சியில் கருத்து சுதந்திரம் நிறைய இருக்கு.. அவரது கட்சி செயல்பாடு சரியில்லை என்று எங்கள் கட்சியில் யாராவது பொதுவெளியில் சொன்னார்களா? மூத்த தலைவர்கள், அல்லது அங்கீகரிக்கப்பட்ட பதவியில் இருப்பவர்கள் ஏதாவது கருத்து சொன்னார்களா? எல். முருகனை இங்கே அழைத்து வந்ததற்கு காரணமே தேர்தல் வரப்போகிறது.. அதனால் அழைத்து வந்துள்ளனர்.. அதுவும் நிரந்தரமில்லை.. இங்கே பாஜக வலிமைப்படுத்தி கொள்ள கடினமான சூழல் இருப்பதால், முருகனை அழைத்து வந்துள்ளனர்.. ஆனால், 2026வரை அண்ணாமலை தான் தலைவர்..

திருநாவுக்கரசு

திருநாவுக்கரசு

திருநாவுக்கரசை அன்று பதவியில் இருந்து எடுத்ததற்கு காரணம், தேர்தல் நோக்கம் அல்ல.. அவருக்கும் ஸ்டாலினுக்கும் பொருத்தம் சரியில்லை.. அப்போதெல்லாம் பொழுதுபோகாமல் அனைத்து கட்சி கூட்டத்தை ஸ்டாலின் நடத்தி கொண்டிருந்தார்.. அந்த வகையில் 3 மீட்டிங்கும் தொடர்ச்சியாக நடத்தினார் ஸ்டாலின்.. அந்த 3 மீட்டிங்குக்கும் லேட்டாக வந்தார் திருநாவுக்கரசு.. இதை கவனித்த ஸ்டாலின், "ஏன் எப்ப பார்த்தாலும் லேட்டாக வர்றீங்க.. தலைவரான நானே சீக்கிரம் வந்துட்டேனே" என்று கேட்டார்.. இந்த சம்பவம் நடந்தபோது நான் அங்கேதான் இருந்தேன்.. உடனே திருநாவுக்கரசு, "நீங்கள் கலைஞர் ஸ்டைல் அரசியல்வாதி, நான் எம்ஜிஆர் ஸ்டைல் அரசியல்வாதி"' என்று பதில் சொன்னார்..

 எரிச்சலில் ஸ்டாலின்

எரிச்சலில் ஸ்டாலின்

இந்த பதில் ஸ்டாலினுக்கு எரிச்சலை தந்துவிட்டது.. அதனால் உடனே ராகுலுக்கு போனை போட்டு, உங்கள் மாநில தலைவரை உடனே மாற்றினால் மட்டும்தான், தொகுதி உடன்பாடு, தொகுதி பங்கீடு பேசப்படும் என்று திமுக தரப்பில் அப்போது பிரஷர் தரப்பட்டது.. அதற்கு பிறகுதான் ராகுல், திருநாவுக்கரசை கூப்பிட்டு, பதவியை ராஜினாமா செய்ய சொன்னார்.. அதற்கு ஒப்புக்கொண்ட திருநாவுக்கரசும், "சரி பதவியை ராஜினாமா செய்கிறேன், எனக்கு தேர்தலில் போட்டியிட திருச்சி தொகுதியை மட்டும் ஒதுக்கி தாருங்கள்" என்று கேட்டார்.. அப்படித்தான் திருச்சி அன்று அவருக்கு கிடைத்தது..

 இதென்ன திமுகவா?

இதென்ன திமுகவா?

ஒருபதவியை விட்டுத்தர சொல்லி கேட்டு, அதற்கு பிறகு கேஎஸ் அழகிரி அந்த பதவிக்கு கொண்டு வரப்பட்டார்.. ஆனால், பாஜகவில் அப்படி இல்லை.. ஒருவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றால், நீக்கிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.. எதுவாக இருந்தாலும் 3 வருடம்தான் பதவி.. திமுகவில்தான் 50 வயது வரையெல்லாம் இளைஞர் அணி செயலாளராக இருக்க முடியும்.. இல்லாத செயல்தலைவர் பதவியை உருவாக்கி கொண்டு டம்மியாக உட்கார முடியும்.. இப்படி ஜனநாயகம் இல்லாத கட்சி பாஜக கிடையாது.. செயல்பாடு சரியில்லை என்றால்,, யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம்..

 ஸ்ட்ராங் பதவி

ஸ்ட்ராங் பதவி

ஒரு இணை அமைச்சர் பதவி என்பது முதலமைச்சருக்கு இணையான பதவி.. ஒரு தாக்கம் தமிழகத்தில் இப்போது தேவை.. டெல்லியை சார்ந்த, இலாகாவை சார்ந்த விஷயங்களை மட்டுமே பார்க்காமல், தேர்தல் சமயத்தில் களப்பணியில் இறங்க வேண்டும், தொண்டர்களை சந்திக்க வேண்டும், சட்டசபை தேர்தலுக்கு இவையெல்லாம் உதவியாக இருக்கும், கட்சிக்கு பலம் சேர்க்கும் என்பதாலேயே முருகன் களமிறக்கப்பட்டுள்ளார்.. அதனால், ஒருவரின் பதவியை காலி செய்ய, இன்னொருவரை கொண்டுவரும் அதிமுக அரசியல் இது கிடையாது..

 சீக்ரெட் பிளான்

சீக்ரெட் பிளான்

அண்ணாமலை தலைமையில் 2024 தேர்தலில் 25 எம்பிக்களை நாங்கள் வென்றெடுப்போம்.. இந்த வெற்றியின் காரணமாக, இன்னொரு 3 வருஷம் அண்ணாமலைக்கு மாநில பொறுப்பு சிபாரிசு செய்யப்படும்.. பிறகு உடனே சட்டசபை தேர்தல் வரும்.. அப்போது, 100 சதவீதம் பாஜக வெற்றி பெறும், அப்போது அண்ணாமலைதான் முதலமைச்சர்.. அதுவரை அண்ணாமலை மட்டுமே மாநில தலைவராக இங்கு இருப்பார்.. அதுவரை வேற யார் வந்தாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.. நீங்க வேணும்னா பார்த்துட்டே இருங்க" என்றார்.

ஓபிஎஸ் செக்?

ஓபிஎஸ் செக்?

இதனிடையே இன்னொரு தகவலும் ஓடிக் கொண்டிருக்கிறது.. எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி தருவதற்காகவே, தொண்டர்கள் கையெழுத்துடன் கூடிய பிரமாணப் பத்திரத்தை, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய, ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாம்.. இதற்காக, மாவட்ட வாரியாக, தொண்டர்களிடம் கையெழுத்து வாங்கும் பணியும் மும்முரமாகி வருகிறதாம்.. இதுவரை 75 சதவீதத்திற்கும் மேல் தொண்டர்களிடம் கையெழுத்து வாங்கிவிட்ட நிலையில், அதை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யவும் தீர்மானித்து உள்ளதாக கூறப்படுகிறது.. ஓபிஎஸ்ஸின் இந்த முயற்சி எந்த அளவுக்கு அவருக்கு கைகொடுக்க போகிறது என்று தெரியவில்லை.

English summary
Do you know why L Murugan has been assigned additional responsibility and we will win 25 seats, says Trichy Surya
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X