கிளாஸில் பாடம் நடத்திய LKG டீச்சர்! தரதரனு மாடிக்கு இழுத்து சென்ற காதலன்.. பள்ளியை உலுக்கிய 4 சத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில், எல்கேஜி வகுப்பில் பாடம் குழந்தைகளுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார் 26 வயது நிஷாத் பாத்திமா.. அப்போது திடீரென அவரது காதலன் அங்கே வந்துள்ளார்.. அடுத்த சில நிமிடங்களில், பிஞ்சு குழந்தைகள் கண்ணெதிரே நடந்த இந்த கொடூர சம்பவம், உத்தர பிரதேச மாநிலத்தையே உலுக்கிப் போட்டு விட்டது.. என்ன நடந்தது?

லகிம்பூர் கேரி ஹிடயத் நகர் பகுதியில் உள்ளது Children's Academy என்ற பள்ளி.. இங்கு கடந்த ஒரு வருடமாக ஆசிரியையாக வேலை பார்த்து வருபவர் பாத்திமா. இதே பகுதியைச் சேர்ந்த 28 வயது முகமது சவுத்துக்கும் பாத்திமாவுக்கும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் இருந்து வந்துள்ளது.. ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், பாத்திமா அந்த உறவை முறித்து கொண்டுள்ளார்.. அத்துடன் சவுத்திடம் பேசுவதையும் நிறுத்தியுள்ளார்.

LKG Class teacher Lakhimpur Kheri

பாத்திமா டீச்சர்

ஆனால் சவுத் விடவில்லை. பாத்திமாவை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும், தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும் தெரிகிறது. இதனால் பாத்திமாவின் சகோதரர் ஷதாப் அக்தர் போலீசில் புகார் தந்துவிட்டார்.. இதனால் இரு குடும்பத்தினரிடமும் மேலும் தகராறு வெடித்தது.. பிறகு போலீசார் தலையிட்டு, இரு தரப்பையும் சமாதானப்படுத்தி, பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

இந்நிலையில், நேற்றைய தினம் காலை சுமார் 11.30 மணிக்கு சவுத் பள்ளிக்குள் வந்தார்.. ஒரு பையில் 2 நாட்டுத் துப்பாக்கிகளை மறைத்து வைத்துக்கொண்டு வந்திருக்கிறார்..

கையை பிடித்து இழுத்து சென்று

வகுப்பறையிலிருந்த பாத்திமாவிடம் சென்று, "தனியாக கொஞ்ச நேரம் பேச வேண்டும்" என்று கூறியுள்ளார். பாத்திமாவின் கையைப் பிடித்த சவுத், அவரை மாடிக்கும் இழுத்து சென்றிருக்கிறார். பிஞ்சுக் குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு ஆசிரியையை மாடிக்கு இழுத்து சென்றாராம்.

மேல்தளத்தில் Senior KG கிளாஸ் ரூம்கள் உள்ளன.. அங்கே பாத்திமாவை நிற்க வைத்து, மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளார் சவுத்.. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியும் உள்ளார்.. Senior KG வகுப்பறைக்கு வெளியே உள்ள நடைபாதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது..

இதற்கு பாத்திமா மறுக்கவும், உடனே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, பாத்திமாவின் தலையில் சுட்டுள்ளார்.. இதனால் பாத்திமா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து விழுந்து இறந்தார்.. பிறகு அடுத்த நொடியே சவுத்தும் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.. அவரும் அதே இடத்தில் பிணமானார்..

பள்ளி மாணவர்கள் முன்னிலையிலேயே

பள்ளி மாணவர்கள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.. இதனால் மாணவர்கள் பலர் சிதறியடித்து ஓடினார்கள்.. 4 முறை துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.. இந்த சம்பவம் நடந்தபோது பள்ளியில் வகுப்புகளும் நடந்து கொண்டிருந்தன.. துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் பரவியதுமே மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வெளியே பதற்றத்துடன் திரண்டு விட்டார்கள்..

எனினும், துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று பள்ளி வளாகத்தை பாதுகாப்புக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் நடந்த வழித்தடமும் சுற்றி வளைக்கப்பட்டது. பள்ளியில் இருந்த மாணவர்களை போலீசார் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றனர்.

போஸ்ட் மார்ட்டம்

இதையடுத்து, பாத்திமாவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் சவுத் பெற்றோர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையும் நடக்கிறது.. தடயவியல் நிபுணர்கள் பள்ளிக்கு வந்து சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். பாத்திமா மற்றும் சவுத் ஆகிய இருவரின் உடல்களும் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், பிஞ்சுக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குள் 2 துப்பாக்கிகளுடன் சவுத் எப்படி நுழைந்தார்? பள்ளி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+