சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டபுள் ரோல்".. ஸ்டாலினின் இரட்டை முகம்.. சபாஷ் திமுக.. புட்டு புட்டு வெச்சிட்டாரே வே. மதிமாறன்!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளை வே மதிமாறன் பாராட்டி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு 2 முகங்கள் இருக்கின்றன என்று எழுத்தாளர் மதிமாறன் தெரிவித்துள்ளார்.. அத்துடன் திமுக அரசு குறித்த தன்னுடைய கருத்தையும் விலாவரியாக நம்மிடம் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று ஆர்எஸ்எஸ், பேரணி நடத்துவதாக இருந்தது.. ஆனால், இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கருதி, இந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த விவாதங்கள் சோஷியல் மீடியாவில் வெடித்து வருகின்றன..

திமுக அமைச்சர்கள் பேச்சால் வேதனை.. முதல்வர் கவனத்திற்கு போயுள்ளது.. சொல்வது திருமாவளவன் திமுக அமைச்சர்கள் பேச்சால் வேதனை.. முதல்வர் கவனத்திற்கு போயுள்ளது.. சொல்வது திருமாவளவன்

 ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

இந்நிலையில், எழுத்தாளரும், பெரியாரிஸ்ட்டுமான வே.மதிமாறன், ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அவரிடம் சில கேள்விகளையும், சந்தேகங்களையும் முன்வைத்தோம்.. "பேரணி என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே.. அதற்கு அனுமதி கிடையாது என்று சொல்ல முடியாதுதானே? பாஜக, ஆர்எஸ்எஸ் தரப்பினரை திமுக அரசு மென்மையுடன் அணுகுகிறதா? முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கைகள் சரிதானா? என்றெல்லாம் கேள்விகளை முன்வைத்தோம்.. அதற்கு மதிமாறன் நம்மிடம் தந்த பதில்கள்தான் இவை:

முரண்பாடு

முரண்பாடு

ஆர்எஸ்எஸ் கோர்ட்டுக்கு போவது நியாயமே இல்லை.. ஆர்எஸ்எஸ்-க்காக மட்டுமே போட்ட தடை கிடையாது.. பொதுவாக சட்டரீதியாக பார்த்தால், காந்தி ஜெயந்தி அன்று எந்தவித அசம்பாவித சம்பவமும் நடப்பதற்கான சூழல் உள்ளது.. ஆர்எஸ்எஸ் அன்றைய தினம் சம்பந்தமே இல்லாமல் ஊர்வலம் நடத்த போவதாக சொல்லி உள்ளனர்.. ஆர்எஸ்எஸ் என்றில்லை, யாராக இருந்தாலும் அன்றைய தினம் ஊர்வலம் நடத்தக்கூடாது என்றுதான் அரசு சொல்கிறது.. எனவே அது சரியான வாதம்தான்.

 சுத்த மோசம்

சுத்த மோசம்

கடந்த காலங்களில் ஆர்எஸ்எஸ் மிக மோசமாக இருந்திருக்கிறார்கள்.. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அவர்கள் போராடியதே கிடையாது.. இடஒதுக்கீடு கூடாது என்று சொன்னவர்களே இவர்கள்தான்.. பார்ப்பனர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக, கட்டமைத்ததே இந்த ஆர்எஸ்எஸ்தான்.. மருத்துவக்கல்லூரியில் இடஒதுக்கீடு கூடாது என்று சொன்னதும் இந்த அமைப்புதான்.. அப்படியானால், தமிழகத்தின் சமூக நீதி மண்ணில் எதுக்காக ஊர்வலம் செய்ய வருகிறார்கள்?

 இரு முகம்

இரு முகம்

திமுக சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.. சட்டம் ஒழுங்கை இந்த அரசு சரியாகவே கையாள்கிறது.. அதனால்தான், ஊர்வலத்துக்கு தடை வாங்குகிறார்கள்.. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அடையாளம் உள்ளது.. ஆனால் ஆர்எஸ்எஸ் என்றால், இந்து தீவிரவாதத்தை பேசுகிற கட்சி என்றுதான் அனைவருக்கும் நினைவு வருகிறது.. முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை இரண்டு முகங்கள் அவருக்கு உண்டு.. தமிழக மக்களுக்கு, முக்கியமாக அதிமுக பாஜகவுக்கும் ஸ்டாலின்தான் முதல்வர். அப்படி இருக்கும்போது, முதல்வராக திமுக என்ற கட்சி இங்கு ரோல் செய்ய முடியாது.. அரசியலமைப்பு சட்டம் மூலமாகத்தான், ரோல் செய்யமுடியும்.. அந்த சட்டத்தின்மூலம்தான் அதிமுக, பாஜகவுக்கும் அவர் முதல்வராக இருக்க முடியும்.

 குமரி அனந்தன்

குமரி அனந்தன்

அதேசமயம், திமுகவுக்கு தலைவர் ஸ்டாலின்தான்.. அந்த இடத்தில் அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட முடியாது.. அதனால் ஒரு தலைவராக, அறிக்கைகளை விட்டு தன்னுடைய கட்சியினரை கண்டிக்கிறார்.. அறிவுறுத்துகிறார்.. எனவே, இரண்டு ரோல்களையும் ஸ்டாலின் சரியாகவே செய்கிறார்.. பாஜகவின் பெரிய தலைவர் மோடிதான்.. பிரதமரும் அவரேதான்.. அவருக்கும் 2 முகங்கள் உள்ளன.. ஆனால், பிரதமர் என்ற முகத்தையே, பாஜக தலைவர் என்ற முகமாக வைத்துதான் பேசுகிறார்.. முதல்வர் என்ற முகத்தில் திமுக முகத்தை வைத்து ஸ்டாலின் என்றுமே பேசியதில்லை..

 டபுள் முகம்

டபுள் முகம்

இப்போதுகூட குமரிஅனந்தனுக்கு வீடு தந்திருக்காரே.. சட்டப்படியே அனைத்தையும் அணுகி செய்கிறார் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி? திமுகவிலேயே இன்னும் பல பெரிய தியாகிகள் இருக்கிறார்களே.. அவர்களுக்கு ஒரு கட்சி தலைவராக ஸ்டாலின் வீடு தந்திருக்கலாமே? அப்படி வீடு ஒதுக்கி தந்தால், கட்சி சார்ந்தவர்களுக்கே வீடு தந்துவிட்டார்கள் என்ற விமர்சனம் வந்துவிடக்கூடாது என்பதால்தான், குமரி அனந்தனுக்கு தந்துள்ளார்.. அதனால் இந்த இடத்தில் ஒரு முதல்வராக, சரியாகவே யோசிக்கிறார் ஸ்டாலின்" என்று மதிமாறன் தெரிவித்துள்ளார்.

English summary
Does mk Stalin have 2 faces and DMK government's law and order is working well, praises Ve Madhimaran
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X