4 பாயிண்ட்.. அப்படியே ‘உல்ட்டா’.. ப்ளேட்டை திருப்பிப் போட்ட ஓபிஎஸ்.. பளீச்னு சொன்ன கேசிபி! அதேதானா?
சென்னை : சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முன்வைக்கும் வாதங்கள் எல்லாம் நான் முன்பே சொன்ன பாயிண்டுகள் தான், என்னை கட்சியை விட்டு நீக்கும்போது ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ளாத வாதங்களை இன்று அவரே உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார் எனச் சாடி இருக்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி.
அதிமுக கட்சி விதிகளை மீறிச் செயல்படுகிறார் எனக் கூறி ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் இணைந்து அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியை சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை விட்டு நீக்கினர். அப்போது முதல் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் விமர்சித்து கருத்துகளைக் கூறி வருகிறார் கேசி பழனிசாமி.
இந்நிலையில், தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு முன்வைத்துள்ள வாதங்கள், ஓபிஎஸ்ஸின் முந்தைய நிலைப்பாட்டுக்கு எதிரானவை என விமர்சித்திருக்கிறார் கேசி பழனிச்சாமி.

சுப்ரீம் கோர்ட்
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிது. ஜனவரி 4ஆம் தேதியில் இருந்து வழக்கின் விசாரணை தீவிரமடைந்த நிலையில், முதல் நாளன்று முக்கிய வாதங்கள் வைக்கப்பட்டன. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

எடப்பாடி ஒரே ஆளுக்காக
அடுத்தடுத்த நாட்களில் வைரமுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர். எடப்பாடி பழனிசாமி என்ற தனி நபருக்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக வைரமுத்து சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதிட்டார். பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு மட்டுமே உண்டு, கட்சியில் விளக்க நோட்டீஸ் கொடுக்காமல் ஒருங்கிணைப்பாளரை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு இல்லை என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

ஓபிஎஸ் தரப்பு வாதம்
மேலும், ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர். அந்தப் பதவிக்கு தேர்தல் நடத்தப்படாது என்று ஏற்கெனவே அதிமுக விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர், அந்த விதியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செயல்பட்டுள்ளனர் என்று ஓபிஎஸ் தரப்பு வாதிடப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி வழக்கறிஞர் ரஞ்சித் குமார் தனது வாதங்களை முன்வைத்தார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் வாதம் நிறைவடைந்த நிலையில், வழக்கு விசாரணை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முரண்பாடான வாதம் - பாயிண்ட் 1
இந்நிலையில், அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸால் நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி இணைய ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "ஓபிஎஸ் தரப்பு, ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவுகளுக்கு முரணான வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் வைத்துள்ளது. கட்சியில் இருந்து ஒருவரை நீக்குவதற்கு முன்பு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவேண்டும், ஆனால், ஓபிஎஸ்ஸை நீக்குவதற்கு முன்பு நோட்டீஸ் கொடுக்கவில்லை என்று வாதத்தை முன்வைத்துள்ளனர். ஆனால், என்னை கட்சியை விட்டு நீக்கும்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்துதான் கையெழுத்திட்டனர். ஆனால், எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் தரவில்லை.

பாயிண்ட் 2
பொதுக்குழுவுக்கு அதிகாரமே இல்லை என்று இப்போது வாதம் வைக்கிறார் ஓபிஎஸ். அவர் சொல்லும் பாயிண்ட் உண்மைதான். இப்போது இப்படி சொல்லும் பன்னீர்செல்வம், 2017ல் விதிகளைத் திருத்தியபோதே, பொதுக்குழுவுக்கு அதிகாரத்தைக் கொடுக்கக்கூடாது, அடிப்படைத் தொண்டர்களே தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் ஆட்சேபனை மனு தாக்கல் செய்தேன். அதற்கு பழிவாங்கத்தான் என்னை கட்சியை விட்டு நீக்கினார்கள். தொண்டர்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடாது என்று சொன்னதற்காக என்னை கைது செய்தார்கள்.

பாயிண்ட் 3
டெல்லி உயர் நீதிமன்றத்தில் எம்ஜிஆர் வகுத்த விதிப்படி, தொண்டர்களால் தான் தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நான் ஒரு வழக்கு போட்டிருந்தேன். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் என்னுடைய வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்டு தான் தொண்டர்களால் தான் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தில் தற்போது இந்த பாயிண்ட்டை வாசித்துக்காட்டி உள்ளது ஓபிஎஸ் தரப்பு. இதே விதியை சுட்டிக்காட்டி தேர்தலை நடத்தவேண்டும் என்று நான் கேட்டபோது, பொதுக்குழுவுக்கு சர்வ அதிகாரம் உள்ளது, தொண்டர்களால் தலைமையை தேர்ந்தெடுக்க சாத்தியமில்லை என்று ஓபிஎஸ் ஈபிஎஸ்ஸோடு சேர்ந்து அப்போது தாக்கல் செய்தார்.

முன்னுக்குப் பின் முரண்
அப்போது அப்படி சொன்ன ஓபிஎஸ், இப்போது முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். இன்று தனக்கு ஒரு பாதிப்பு வந்தபிறகு என்னுடைய நிலைப்பாட்டை ஆதரிக்கிறார் ஓபிஎஸ். ஜூலை 11 பொதுக்குழுவில் கட்சி விதியில் திருத்தங்களை கொண்டு வந்து, பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட 10 மா.செக்கள் முன்மொழியவும் வழிமொழியவும் வேண்டும் என்ற விதியைக் கொண்டு வந்தபோதே நான் இவ்வளவு விதிகளை சொல்வதற்கு பேசாமல் எடப்பாடி பழனிசாமி மட்டுமே நிற்கலாம் என்றே விதியை மாற்றிவிடலாம் என்று சொன்னேன். எடப்பாடி பழனிசாமி எனும் தனி மனிதனுக்காக கட்சியின் அடித்தளமே மாற்றப்படுகிறது என்று சொன்னேன்.

பாயிண்ட் 4
இன்றைக்கு ஓபிஎஸ் தரப்பு அதே வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் வைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளுமே, ஓபிஎஸ்- ஈபிஎஸ் எனும் இரு தனி மனிதர்களை விட அதிமுக தொண்டர்கள் முக்கியம், அவர்களின் நிலையை பாதுகாக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதிமுக தொடர்பான எல்லா வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஐகோர்ட் தனி நீதிபதி பார்வைக்கு அனுப்பி ஒரு முடிவெடுத்தால் அடிப்படைத் தொண்டர்களால் தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முடிவே சட்ட ரீதியாக அமையும். அப்படி ஒரு முடிவு வந்தால், ஜெயலலிதா மறைந்தபோது யாரெல்லாம் உறுப்பினர்களாக இருந்தார்களோ அவர்களைக் கொண்டு, ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக வைத்து தேர்தல் நடத்தினால் தான் தீர்வு வரும், அதுதான் அதிமுகவுக்கு பலம் சேர்ப்பதாக அமையும்." எனத் தெரிவித்திருக்கிறார்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications