Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினிகாந்த் இங்கு இல்லை..மழையில் காத்திருக்காதீர்கள்.. ரசிகர்களுக்கு லதா ரஜினிகாந்த் வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம்; ரஜினிகாந்த் இங்கு இல்லை என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற போயஸ் தோட்டத்தில் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். ரஜினி இங்கு இல்லை என்று கேட்டு ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு இன்று 72 வது பிறந்தநாள். கண்டக்டராக பணியை தொடங்கிய ரஜினிகாந்த் சினிமாவில் வில்லனாக அறிமுகமாக இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார்.

தமிழ் திரையுலகத்தில் எட்டாத உயரத்தை தொட்டுள்ள அவரின் பிறந்தநாளை ரசிகர்கள் பல இடங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ரஜினிகாந்த் பிறந்தநாள்

ரஜினிகாந்த் பிறந்தநாள்

ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் அவர் நடித்த படங்களை கொண்டு இரவு 12 மணிக்கு சிறப்பு தொகுப்புகள் திரையிடப்பட்டன. அங்கு ரசிகர்கள் பலூன் கட்டியும் தோரணங்கள் கட்டியும் உற்சாகமாக கொண்டாடினர். அப்போது திரையரங்குக்கு வந்த ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ரசிகர்கள் மத்தியில் கேக் கொண்டாடினார்.

லதா ரஜினிகாந்த்

லதா ரஜினிகாந்த்

இதைத்தொடரந்து பாபா 2 திரைப்படம் திரையரங்களில் திரையிடப்பட்டது. அப்போது அரங்கம் முழுவதும் அவரது ரசிகர்கள் செல்போனில் டாரச் அடித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.

போயஸ்கார்டன் வீடு

போயஸ்கார்டன் வீடு

ஆண்டுதோறும் ரஜினிகாந்த் தனது பிறந்த நாள் அன்று தனது வீடு முன்பு கூடியிருக்கும் ரசிகர்களை சந்திப்பார்.
வாழ்த்து கூற காத்திருக்கும் தனது அன்பான ரசிகர்களைப் பார்த்து கையை அசைத்து வாழ்த்துக்களை பெற்றுக்கொள்வார். இந்த வருடம் வழக்கம் போல போயஸ்கார்டன் வீடு முன்பு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் ரஜினிகாந்தை சந்திக்க முடியவில்லை. காரணம் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் வெளிநாடு சென்றுள்ளாராம்.

லதா ரஜினிகாந்த் வேண்டுகோள்

லதா ரஜினிகாந்த் வேண்டுகோள்

மழையில் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினிகாந்த் ஊரில் இல்லை என்றும், ரசிகர்கள் யாரும் வீட்டின் முன் காத்திருக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயிலர்

ஜெயிலர்

ரஜினி பிறந்தநாளில் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் அவர் வீட்டில் இல்லாதது தெரியாமல் ஏராளமானோர் கூடியிருக்கின்றனர். இந்த ஆண்டு தலைவரை சந்திக்க முடியவில்லையே என்ற ஏமாற்றத்துடன் பலரும் திரும்பி சென்றனர். இதனிடையே ரசிகர்களுக்கு முக்கிய விருந்தாக ரஜினி தற்போது நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+