போலீஸ் சொல்றதை அப்படியே நம்பாதீங்க.. எச்சரிக்கையாக இருங்க.. கள்ளக்குறிச்சி நீதிபதிக்கு ஹைகோர்ட் அட்வைஸ்
சென்னை: குற்ற வழக்குகளின் போது போலீசார் சொல்வதையும், குற்றவியல் வழக்கறிஞர்கள் சொல்வதையும் அப்படியே நம்பாதீர்கள் என்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிபதிக்கு சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதேபோல் நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தெரிவித்து, தவறாக வழிநடத்திய போலீசாருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி பாலா. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் லட்சுமி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- எஸ் செல்லம்பட்டு பஞ்சாயத்து தலைவி அறிவழகி என்பவரும், அவரது கணவரும், எனது நிலத்தை அபகரிக்கும் எண்ணத்தோடு என்னையும் என் மகனையும் வீடுபுகுந்து தாக்கினார்கள். இதில் நான் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

நீதிபதி நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
அப்போது இது குறித்து போலீசில் புகார் செய்திருந்தேன். ஆனால் சங்கராபுரம் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நான் கடந்த 9 ஆம் தேதி தான் டிஸ்சார்ஜ் ஆனேன். ஆனால் போலீஸ் தரப்பில் கடந்த 3 ஆம் தேதி 'டிஸ்சார்ஜ்' ஆனதாக கூறியதை ஏற்று, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி முன் ஜாமீன் வழங்கிவிட்டார்.
எனவே இந்த வழக்கை உள்ளூர் போலீசார் விசாரித்தார்கள் என்றால் சரியாக இருக்காது. எனவே இந்த வழக்கை வேறு ஒரு புலன்விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டு நீதிபதியை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
ஏன் இவ்வளவு அவசரம்?
இதையடுத்து இந்த வழக்கானது நேற்று நீதிபதி பி.வேல்முருகன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி பி வேல்முருகன், "முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஏன் இவ்வளவு அவசரம்?, போலீஸ் தரப்பில் கூறப்பட்டதை அப்படியே ஏற்று முன்ஜாமீன் வழங்கிவிட்டீர்களா?..
போலீசார் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான மனுவை சரி பார்த்தீர்களா? ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ் சம்மரி' ஆவணத்தை வாங்கி பார்த்தீர்களா?. குற்ற வழக்குகளின் போது போலீசார் சொல்வதையும், குற்றவியல் வழக்கறிஞர்கள் சொல்வதையும் அப்படியே நம்பிவிடாதீங்க.. நாம்தான் (நீதிபதிகள்) எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' என்று கருத்து தெரிவித்தார். பின்னர், இது போன்ற குற்றச்சாட்டு எதிர்காலத்தில் வரக்கூடாது என்று எச்சரித்தார்.
போலீசாருக்கு கடும் கண்டனம்
தொடர்ந்து நீதிமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்து, தவறாக வழிநடத்திய போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ''போலீசாருக்கும், குற்றவியல் வக்கீல்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் வலியும், வேதனையும் தெரியாது. யாருக்கோ வேலை செய்கிறார்கள்.. அவர்களை பற்றி பேசி பேசியே நான் கலைப்பு அடைந்து விட்டேன். குற்றவியல் அரசு வக்கீல், போலீசுக்கு வழக்கறிஞர் கிடையாது. பொதுமக்களின் வழக்கறிஞர்.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகி செல்கிறார் என்றால், மருத்துவமனையில் உள்ள போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உறுதி செய்யமாட்டாரா?'' எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து, மனுதாரர் எப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் என்பது உள்ளிட்ட தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்யும் படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிலைய அதிகாரிக்கு (ஆர்எம்ஓ) உத்தரவிட்டார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications