டோன்ட் கோ பேக் மோடி.. புதிய ஆயுதத்தை கையில் எடுத்த பாஜக.. தேசிய அளவில் டிரெண்ட்.. பதிலுக்கு பதில்!
பிரதமர் மோடி தமிழகத்தை விட்டு செல்ல கூடாது அவர் இங்கேயே இருக்க வேண்டும் என்று கூறி டோன்ட் கோ பேக் மோடி என்ற டேக் #DontGoBackModi டிரெண்டாகி வருகிறது.
Recommended Video
சென்னை: பிரதமர் மோடி தமிழகத்தை விட்டு செல்ல கூடாது அவர் இங்கேயே இருக்க வேண்டும் என்று கூறி டோன்ட் கோ பேக் மோடி என்ற டேக் (#DontGoBackModi) டிரெண்டாகி வருகிறது.
சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தமிழகம் வந்தார். நேற்று மாமல்லபுரம் சென்ற அவர் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இன்று கோவளத்தில் இதேபோல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக கோ பேக் மோடி டேக் தேசிய அளவில் வைரலாக நேற்று டிரெண்டானது.

டிரெண்ட் செய்தனர்
மொத்த்தம் மூன்று மொழியில் மோடிக்கு எதிராக தமிழக மக்கள் பலர் டிரெண்ட் செய்தனர். சீன மொழியிலும் #回到莫迪 என்ற டேக் பிரதமர் மோடிக்கு எதிராக டிரெண்டானது. இது இல்லாமல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்கும் வகையில் #TamilNadu_welcomes_XiJinping என்று டேக் டிவிட்டரில் டிரெண்டானது. தமிழகம் வரும் சீன அதிபருக்கு புரிய வேண்டும் என்பதற்காக தற்போது சீன மொழியிலும் தமிழர்கள் டிரெண்ட் செய்தனர்.

பதில்
இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகத்தை விட்டு செல்ல கூடாது அவர் இங்கேயே இருக்க வேண்டும் என்று கூறி டோன்ட் கோ பேக் மோடி என்ற டேக் (#DontGoBackModi) டிரெண்டாகி வருகிறது. தமிழக பாஜக சார்பாக இந்த டேக் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவினர் பலர் டிவிட் செய்து வருகிறார்கள்.

யார் எல்லாம்
தமிழர்களால் மட்டுமில்லாமல் வடமாநிலங்களில் இருக்கும் பலரும் இதில் டிவிட் செய்து வருகிறார்கள்.இதில் தற்போது 12 ஆயிரம் டிவிட்டுகள் வரைய போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன சொல்கிறார்கள்
கோவளம் பீச்சை பிரதமர் மோடி சுத்தம் செய்தது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இந்த டேக்கின் கீழே பலர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள். வடஇந்தியாவை சேர்ந்த பலர் தமிழகம் கொடுத்து வைத்த மாநிலம் என்று இதில் புகழ்ந்துள்ளனர்.

தேசிய அளவு
தற்போது இந்த டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. வரிசையாக இதில் பலர் டிவிட் செய்து மோடியை பாராட்டி வருகிறார்கள். சீனாவுடன் இந்தியா நெருக்கமாகிவிட்டது என்று பலர் டிவிட் செய்துள்ளனர்.
-
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி












Click it and Unblock the Notifications