தேமுதிகவிற்கு திறக்கும் கதவு.. கைவிட மனமில்லாத அதிமுக! சட்டமன்ற தேர்தலில் பிரேமலதாவின் பிளான் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுகவிற்கு அடுத்த 2026 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலின் போது ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ள நிலையில், கூட்டணி தொடர்பாக வரும் ஜனவரியில்தான் அறிவிப்போம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதனால், வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்பதை உறுதி செய்யாமல் கூட்டணி மாறவும் செய்யலாம் என்பதை சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களவை தேர்தல் விவகாரத்தில் அதிமுக - தேமுதிக இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி காலியாக உள்ள 6 ராஜ்யசா சீட்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடத்திற்கு 34 எம்பிக்கள் வாக்களிக்க முடியும். இதன்படி பார்த்தால் திமுகவிற்கு 4 இடங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

door-opens-for-dmdk-but-aiadmk-still-reluctant-to-let-go-whats-premalathas-plan-for-elections

திமுக வேட்பாளர்கள்

மீதம் உள்ள 2 இடங்களில் அதிமுகவிற்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கியது. மீதம் உள்ள 3 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. திமுக தரப்பில் பி.வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் வேட்பாள்ர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிட உள்ளார். மற்றொரு பக்கம் அதிமுகவில் ராஜ்யசாபா சார்பில் போட்டியிட போவது யார் என்பதில் கடும் இழுபறி ஏற்பட்டது.

அதிமுக வேட்பாளர்கள்

லோக்சபா தேர்தலின் போது தங்களுக்கு 5 மக்களவை சீட்கள், ஒரு ராஜ்யசபா சீட் என அதிமுக ஒப்பந்தம் போட்டதாகவும், இந்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டியது அதிமுகவின் கடமை எனவும் தேமுதிக கூறி வந்தது. இந்நிலையில் அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ தனபால் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏவும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை ஆகியோர் அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேமுதிகவுக்கு இப்போது சீட் ஒதுக்கப்படவில்லை.

தேமுதிக வாக்கு சதவீதம்

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க தொடரும் எனவும் 2026-ல் நடைபெறவுள்ள ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலின்போது தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக வழங்கும் என்று அதிமுக அறிவித்துள்ளது. இதையடுத்து பேட்டி அளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரும் ஜனவரி மாதம்தான் யாருடன் கூட்டணி என்பதை அறிவித்து இருக்கிறார்.

இதனால், வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்பதை உறுதி செய்யாமல் கூட்டணி மாறவும் செய்யலாம் என்பதை சூசகமாக குறிப்பிட்டுள்ளார். தேமுதிகவை பொறுத்தவரை கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. 5 தொகுதிகள் அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதில் அனைத்து இடங்களிலும் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி தோல்வி அடைந்தது. தேமுதிக - 2.59 சதவீத வாக்குகள் பெற்றது.

தேமுதிகவை இழுக்க திமுக, அதிமுக போட்டி?

வரும் தேர்தலில் திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் அதிமுக - பாஜக கூட்டணி, கூட்டனியில் மேலும் பல கட்சிகளை இணைத்து வலுவாக்க வியூகம் வகுத்து வருகிறது. இதனால் தேமுதிகவை கைகழுவ அதிமுகவிற்கும் எண்ணம் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால்தான், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் சீட் உண்டு என அறிவித்துள்ளது அதிமுக.

அதேவேளையில், திமுக பொதுக்குழுவில் விஜயகாந்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிரேமலதா கூறியுள்ளார். பிரமேலதாவின் இந்த பேட்டியும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. திமுகவும் தனது கூட்டணியை மேலும் வலுப்படுத்த மேலும் சில கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு இழுக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில், தற்போதைய தேமுதிகவின் நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும்?

எனவே தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க இரு கட்சிகளும் விருப்பம் காட்டும் சூழலே உள்ளதே என்பது அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது. தேமுகவிற்கு அடுத்த 2026 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலின் போது ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ள நிலையில், கூட்டணி தொடர்பாக வரும் ஜனவரியில்தான் அறிவிப்போம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதனால், வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்பதை உறுதி செய்யாமல் கூட்டணி மாறவும் செய்யலாம் என்பதை சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+