சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதீத உதிரப்போக்கா.. சிறிது சிறிதாக மாதவிடாயா.. எல்லாத்துக்கும் வைத்தியம் இருக்கு.. டாக்டர் கவுதமன்

Google Oneindia Tamil News

சென்னை: மாதவிடாயின் போது அதிக உதிரப்போக்கு ஏற்படுவதையும் குறைந்த உதிரப்போக்கு ஏற்படுவதையும் தடுக்க மாதுளை தோல் கசாயத்தை குடிக்குமாறு அறிவுறுத்துகிறார் ஸ்ரீவர்மா ஆயுர்வேத மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் கவுதமன்.

Recommended Video

    பீரியட்ஸ் பிரச்சனைகளுக்கு மாதுளை தோல் கசாயம்.. டாக்டர் கவுதமன் கூறும் மருந்து - வீடியோ

    இதுகுறித்து டாக்டர் கவுதமன் கூறுகையில், இந்த வீடியோவில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்த போக்கை நிறுத்துவதற்கான கசாயத்தை பார்ப்போம். மாதவிலக்கில் இருவகையான பிரச்சினைகள் உள்ளன.

    முதல் வகை சில பெண்களுக்கு 3 அல்லது 4 மாதமானாலும் மாதவிடாய் ஏற்படாமலேயே இருக்கும். அதன் பிறகு மாதவிலக்கு ஒரு மாதம் , 40 நாள், 2 மாதம் என சிறிது சிறிதாக உதிரப்போக்கு இருந்து வரும்.

    இரு வகை பிரச்சினை

    இரு வகை பிரச்சினை

    இரண்டாவது வகை என்னவெனில் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும்போது அதிக ரத்தபோக்கு இருந்து கொண்டே இருக்கும். மெனோபாஸ் எனப்படும் வயது வரும் போது பெண்கள் பாதிப்புக்குள்ளாவர். இந்த இரு பிரச்சினைகளுமே நாம் அன்றாடம் பார்க்கும் பிரச்சினைகளாகவே உள்ளன.

    4 பொருட்கள்

    4 பொருட்கள்

    தேவையான பொருட்கள்

    மாதுளை பழத்தோல்
    அதிமதுரம்
    மருதம்பட்டை
    வெள்ளி லோத்திரம்

    3 கிராம்
    300 மில்லி தண்ணீர்

    300 மில்லி

    300 மில்லி

    ஒவ்வொன்றையும் 3 கிராம் எடுத்து 300 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து அதை 100 மில்லியாக காய்ச்சவும். பின்னர் அதை வடிகட்டி குடித்து வந்தால் பெரும்பாடு என சொல்லக் கூடிய அதீத உதிரப்போக்கை தடுத்து நிறுத்தும். மாதவிலக்கானது முழுமை பெற்றால்தான் அவர்களுடைய உடல்நலம் நன்றாக இருக்கும்.

    சுரப்பி

    சுரப்பி

    அதீத உதிரப்போக்கு இருந்தாலும் பிரச்சினை, உதிரப்போக்கே ஏற்படாவிட்டாலும் பிரச்சினை. அதீத உதிரப்போக்கு இருந்தால் என்ன நடக்கும், நம் உடலில் பலவீனம் ஏற்படும். ரத்தசோகை சம்பந்தப்பட்ட காரணிகள் அதிகமாகும். நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு மாறும். எல்லாவற்றுக்கும் மேல் உடல் எடை அதிகரிக்கும். உதிரப்போக்கு குறையும் போதும் மேற்கண்ட பிரச்சினைகள் ஏற்படும். உடல் எடையும் கூடும்.

    உடல் சோர்வு

    உடல் சோர்வு

    தூக்கமின்மை, உடல் சோர்வு, மனசோர்வு, எதிர்மறை எண்ணங்கள் ஆகியவை ஏற்படும். அது போல் கோடை காலத்தில் சிறுநீர் கழிக்கும் போது சொட்டு சொட்டாக வரும் பிரச்சினை உள்ளிட்டவைக்கு இந்த கசாயத்தை குடிக்கலாம். இதை 48 நாட்களுக்கு குடித்து வர வேண்டும். உடலில் தேவையற்ற வீக்கங்கள், தேவையற்ற தண்ணீரும், கழிவுகளும் வெளியேறும் என்றார்.

    English summary
    Sri Varma hospital HOD Dr Gowthaman says that how to cure high blood flow in menstural cycle.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X