திமுக நடத்திய சட்டப்போராட்டம்.. வடக்கிலிருந்து தெற்கு வரை ஸ்டாலினுக்கு நீளும் வாழ்த்து!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு கிடைத்துள்ளது என முதல்வர் ஸ்டாலினை டாக்டர் மகேந்திரன் பாராட்டியுள்ளார்.
Recommended Video
மருத்துவ படிப்பில் OBC-க்கு 27% இட ஒதுக்கீடு.. Twitter-ல் Stalin-க்கு நன்றி சொல்லும் வட இந்தியர்கள்!
இதுகுறித்து டாக்டர் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், திமுக நடத்திய சட்டப்போராட்டத்தின் விளைவாக மருத்துவப் படிப்பில் OBC மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு-அன்று தமிழ்நாட்டிற்கான சமூக நீதி காத்தார் கலைஞர்.
இன்று ஒட்டுமொத்த இந்தியாவிற்கே சமூக நீதிக்கு அரணாய் நின்றிருக்கிறார் தலைவர் @mkstalin என வடக்கில் இருந்து தெற்கு வரை வாழ்த்து நீள்கிறது.

ஓபிசி இடஒதுக்கீடு
ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக மேற்கொண்ட தொடர் முயற்சிகள் பின்வருமாறு:
- 26.07.2019- ஓபிசி இடஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் பி வில்சன் எம்பி பேச்சு
- 1.11.2019- ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தனுக்கு கடிதம்
- 21.11.2019- ஓபிசி இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
- 22.11.2019- எம்பிபிஎஸ் ஓபிசி இடஒதுக்கீடு: மோடி வெள்ளை அறிக்கை வெளியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

எம்பி வில்சன் பேச்சு
- 6.12.2019- ஓபிசி இடஒதுக்கீடு பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் பி வில்சன் எம்பி பேச்சு
- 9.12.2019- ஓபிசி இடஒதுக்கீடு பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்பி பேச்சு
- 6.1.2020- ஓபிசி இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பான கடிதத்துடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தனை திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி வில்சன் நேரில் சந்திப்பு
- 15.5.2020- ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு சரியான பதில் அளிக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை.

சமூக நீதி இல்லை
- 27.5.2020- மருத்துவப் படிப்பில் சமூகநீதி பின்பற்றப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டி திமுக தலைவர் கண்டனம்.
- 28.5.2020- அகில இந்திய மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என உச்சநீதிமன்றத்தை நாடியது திமுக.
- 31.08.2019- மருத்துவப் படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீட்டை உள்நோக்கத்துடன் மறுத்துவரும் மத்திய அரசைக் கண்டித்து காணொலியில் நசைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கண்டனம் தீர்மானம் நிறைவேற்றம்.
- 12.06.2020- ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் திமுக வழக்கறிஞர் பி வில்சன் உச்சநீதிமன்றத்தில் தனது வாதத்தை எடுத்து வைத்தார். இதில் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

ஹைகோர்ட்டில் திமுக வழக்கு
- 11.6.2020- சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு
- 19.6.2020- மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி மாணவர்களுக்கு 97 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- 19.6.2020- இது முதல்கட்ட வெற்றியே. ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு பெற திமுக தொடர்ந்து போராடும்- தலைவர் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications