ILTS தலைவரான முதல் ஆசியர் “பிறந்து 5 நாளே ஆன குழந்தை” உயிரை காப்பாற்றியவர் - யார் இந்த முகமது ரேலா?
சென்னை: சர்வதேச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் முகமது ரேலா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மருத்துவர்களே இதுவரை ஐ.எல்.டி.எஸ் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த நிலையில், ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் முதல்முறையாக ஐ.எல்.டி.எஸ் தலைவராகியுள்ளார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் கணைய அறுவை சிகிச்சை தொடர்பாக 500-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார் மருத்துவர் முகமது ரேலா.

முகமது ரேலா
மருத்துவர் முகமது ரேலா, மயிலாடுதுறைக்கு அருகே உள்ள கிளியனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டமும், எம்.எஸ் பட்டமும் பெற்றவர். லண்டன் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் எஃப்.ஆர்.சி.எஸ். பட்டமும் பெற்றுள்ளார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ரேலா, லண்டனில் பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்துள்ளார். உலகப் புகழ்பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பெயர்போன ரேலா மருத்துவமனையின் தலைவரான முகமது ரேலா, தனது 28 ஆண்டுகால மருத்துவ சேவையில் 4000-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக 600க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள உலகின் ஒரே மருத்துவர் என்ற சாதனைக்கும் உரியவர் முகமது ரேலா.

கின்னஸ் சாதனை
1997ஆம் ஆண்டு பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளார். அந்த சாதனைக்காக 2000ஆம் ஆண்டு கின்னஸ் சாதனையாளர் பட்டியலில் மருத்துவர் ரேலாவின் பெயர் இடம்பெற்றது. இவரால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்ட அந்தப் பெண் குழந்தை தற்போது ஒரு வழக்கறிஞராக உள்ளார்.

ஐ.எல்.டி.எஸ் தலைவர்
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் உலக அளவில் புகழ்பெற்ற மருத்துவ நிபுணராகத் திகழும் முகமது ரேலா சர்வதேச கல்லீரல் மாற்று சிகிச்சை சங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மருத்துவர்களே இதுவரை ஐ.எல்.டி.எஸ் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளனர். ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் இச்சங்கத்தின் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.

உலகம் முழுவதும்
சர்வதேச கல்லீரல் மாற்று சிகிச்சை சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்துப் பேசியுள்ள மருத்துவர் முகமது ரேலா, "இந்தப் பொறுப்பை பெருமையாக கருதுகிறேன். இதன் மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றங்களை ஒருங்கிணைத்து, ஆலோசனைகளைப் பரிமாறிக்கொள்ளவும், கல்லீரல் மாற்று சிகிச்சை பற்றிய ஆலோசனைகளை உலகம் முழுவதும் பரப்புவதையும் நான் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளேன்" எனக் கூறியுள்ளார்.

கனிமொழி வாழ்த்து
முகமது ரேலா சர்வதேச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி கனிமொழி, "சர்வதேச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை (ILTS) அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் முகமது ரேலா அவர்களுக்கு எனது வாழ்த்துகள். ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் இந்த அமைப்பின் தலைவராவது இதுவே முதல்முறை என்பது பெருமைக்குரியது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications