சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திராவிடம் என்பது வாழ்க்கை முறை.. அண்ணா வழியில் அண்ணன் ஸ்டாலின்.. நெகிழ்ந்து வீடியோ வெளியிட்ட கனிமொழி

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் முப்பெரும் விழாவையொட்டி, ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி, திராவிடம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்று தெரிவித்துள்ளார். திராவிடம் குறித்து பல்வேறு வாத விவாதங்கள் நடைபெறும் சூழலில், கனிமொழி இந்த தலைப்பில் வீடியோ வெளியிட்டுள்ளது கவனிக்கத் தக்கதாக உள்ளது.

எல்லோருக்கும் சுயமரியாதை வழங்க வேண்டும் என்பதுதான், திராவிடம் என்று, தனது வீடியோவில் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

கையில் 3 வயது குழந்தை.. திடீரென இளம்பெண் செய்த பகீர்.. அரண்டு போன தர்மபுரி கலெக்டர் ஆபிஸ்! கையில் 3 வயது குழந்தை.. திடீரென இளம்பெண் செய்த பகீர்.. அரண்டு போன தர்மபுரி கலெக்டர் ஆபிஸ்!

கனிமொழி வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் ஒரு, வயரால் பின்னப்பட்ட, நாற்காலியில் அமர்ந்திருக்க, அருகேயுள்ள சோஃபா ஒன்றில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிறு வயது புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.

மாநில சுயாட்சி

மாநில சுயாட்சி

அந்த புகைப்படத்தை பார்த்து இரு கைகளையும் குவித்தபடியே பேச ஆரம்பிக்கிறார் கனிமொழி.. "முப்பெரும் விழா நமது அத்தனை பேருக்கும் முக்கியமான நாள். 10 வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு திமுக ஆட்சி, நல்லாட்சி உருவாகியுள்ளது. தந்தை பெரியார் கனவாக இருந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை இந்த ஆட்சி செயல்படுத்தியுள்ளது. அறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சி, கொள்கைகளை, நிலை நிறுத்தும் ஆட்சியாக, சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் தீர்மானமாகட்டும், மாநிலத்தை, மாநிலத்தில் உள்ள ஆட்சிதான் வழி நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது.

அண்ணன் ஸ்டாலின்

அண்ணன் ஸ்டாலின்

தலைவர் கருணாநிதி போல எல்லோரையும் இணைத்து, எல்லோருக்கும் வாய்ப்பு, உரிமை தரக் கூடிய ஆட்சியாக அண்ணன் ஸ்டாலின் நடத்திக் கொண்டுள்ளார். திராவிடம் என்பது, நமக்குள் எந்த பாகுபாடும் இல்லை, எல்லோருக்கும் சுய மரியாதை இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துள்ளது. இதை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

வாழ்க்கை முறை

திராவிடம் என்பது நமது உணர்வு, இயக்கம் என்பதை தாண்டி, வாழ்க்கை முறையாக உள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் விதைத்துவிட்டு போன விருட்சம் நம்மை இன்று பாதுகாத்துக் கொண்டுள்ளது. அவர்கள் கனவுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். யாருக்கெல்லாம் உரிமை மறுக்கப்படுகிறதோ, அவர்கள் ஒன்றிணைந்து தமிழ்நாட்டை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு பாதை.. திராவிடம்." இவ்வாறு கனிமொழி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம்
    திமுக முப்பெரும் விழா

    திமுக முப்பெரும் விழா

    தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15, தி.மு.கழகம் தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளையும் இணைத்துக் கொண்டாடப்படுவதுதான் கருணாநிதியால் முன்னெடுக்கப்பட்ட முப்பெரும் விழா. இதையொட்டி திமுக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    DMK MP Kanimozhi posted a video on Twitter on the occasion of the DMK's Mupperum vizha 2021 function. Kanimozhi says that Dravidianism is a way of life.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X