அறிவாலய கழிவறையில் முத்து.. துரை வைகோவுக்கு வல்லம் பஷீர் தந்த பதிலடி.. "அதை" மறந்துட்டீங்களா?
சென்னை: "திமுக ஓட்டுக்கு பணம் தந்தது என்கிறார்களே, அறிவாலய கழிவில் மதிமுக கழித்த முத்துவையும் நாம் இங்கு சொல்ல வேண்டும்தானே? தேர்தல் களத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்வாக்கு மிக்க வேட்பாளர் ஓட்டுக்கு ரூ. 500 கொடுக்கத் திட்டமிட்டதால், ஸ்டாலினிடம் சென்று தேர்தல் செலவுக்கு நிதி உதவி கேட்டவர் துரை வைகோ.. அரசியல் ரீதியாக ஒரு கைப்பிள்ளை போல செயல்படுபவர் வைகோ மகனுக்கு, திமுகவை இழித்து பேச அருகதையே கிடையாது என்று காட்டமாக விமர்சித்துள்ளார் திராவிட வெற்றி கழகத்தின் முதன்மைச் செயலாளர் வல்லம் பஷீர்..
தமிழ் நிறம் சேனலுக்கு பேட்டி தந்துள்ள வல்லம் பஷீர், "சமீபத்தில் அமைச்சர் கே.என். நேரு, "மதிமுகவை திமுகவிலேயே இணைத்துவிடலாம் என்று துரை வைகோ கூறினார்" எனக் குறிப்பிட்டது முற்றிலும் உண்மையான ஒன்று. அதை யாராலும் மறுக்க முடியாது.

துரை வைகோ - திருச்சி தொகுதி
விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டால் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தினால், துரை வைகோ திருச்சி தொகுதியைக் குறிவைத்து காய்களை நகர்த்தினார். "எனக்கு இந்த ஒரு வாய்ப்பை மட்டும் உருவாக்கிக் கொடுங்கள், என் தந்தை காலத்திற்குப் பிறகு கட்சியை திமுகவிடம் ஒப்படைத்து விடுகிறேன்" என்று துரை வைகோ திமுக தலைமைக்கு வாக்குறுதி அளித்தார்.
துரை வைகோவிற்காக திருச்சி தொகுதியை ஒதுக்குமாறு திமுக கொடுத்த அழுத்தமே, திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே உருவான முதல் பிணக்கிற்கு முதன்மை சான்றாக அமைந்தது. ராகுல் காந்தி நேரடியாக மு.க.ஸ்டாலினிடம் பேசி திருநாவுக்கரசருக்கு அந்த தொகுதியைக் கேட்டார்.
துரை வைகோ கட்சியை இணைப்பதாகக் சொன்னபோது, மு.க.ஸ்டாலின் அதை மறுத்து, "உங்கள் தந்தை கஷ்டப்பட்டு நடத்திய கட்சி இது, தனிப்பட்ட முறையில் முடிவெடுக்கக் கூடாது" என்று கடிந்துகொண்டார்.
அறிவாலய கழிவறையில் முத்து
இன்று துரை வைகோ "அறிவாலய கழிவறையில் முத்து குளிப்பவர்கள்" என்று திமுகவினரை விமர்சிக்கிறார். ஆனால் அதே அறிவாலயத்தின் கழிவறையில் தாங்கள் குளித்து விட முடியாதா என்று அப்பாவும், பிள்ளையும் காத்திருந்ததை மறந்து விட்டார்களா?
வைகோவிற்கு நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்பது வாழ்நாள் கனவாகவே ஆசை இருந்தது. நாடாளுமன்றம் போனால், பல பணிகளை செய்வேன் என்று கட்சிக்ககாரர்களிடமெல்லாம் சொன்னார்.. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் அன்புமணி ராமதாஸ் போன்ற நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி பெற்றபோதும், விருதுநகர் தொகுதியில் 2 முறை போட்டியிட்ட வைகோவால் வெற்றி பெற முடியவில்லை.. இதுதான் வைகோவின் அரசியல் செல்வாக்கு.
ஆனால், 2019 தேர்தலில் வைகோ நாடாளுமன்றம் செல்ல விரும்பியதை உணர்ந்த ஸ்டாலின், திருச்சியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் வைகோவின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, "நீங்கள் தேர்தலில் போட்டியிட்டு சிரமப்பட வேண்டாம், தேர்தல் பிரச்சாரங்களில் மட்டும் ஈடுபடுங்கள், உங்களை நான் மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று தாயுள்ளத்தோடு உறுதியளித்து அனுப்பி வைத்தவரை பார்த்து இன்று இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள்.
திமுக பேச அருகதை கிடையாது
திமுக ஓட்டுக்கு பணம் தந்தது என்கிறார்களே, அறிவாலய கழிவில் இவர் கழித்த முத்துவையும் நாம் இங்கு சொல்ல வேண்டும்தானே? தேர்தல் களத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்வாக்கு மிக்க வேட்பாளர் ஓட்டுக்கு ரூ. 500 கொடுக்கத் திட்டமிட்டதால், துரை வைகோவும் ஸ்டாலினிடம் சென்று தேர்தல் செலவுக்கு நிதி உதவி கேட்டார்..
"நான் போட்டியிடும் முதல் தேர்தலும் கடைசி தேர்தலும் இதுதான், இதில் தோற்றுவிட்டால் அந்தத் தோல்வியைத் தாங்கும் மனநிலை எனக்கு இல்லை, நான் தற்கொலை செய்து கொள்வேன்" என்று ஸ்டாலினிடம் சொல்லி துரை வைகோ உதவி கேட்டார். அரசியல் ரீதியாக ஒரு கைப்பிள்ளை போல செயல்படுபவர் வைகோ மகன் துரை வைகோதான்.. திமுகவை இழித்து பேச வைகோ மகனுக்கு அருகதையே கிடையாது..


Click it and Unblock the Notifications
