Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்குள்ளும், தமிழகத்தின் மாவட்டத்திற்குள்ளும் இ பதிவு கட்டாயம்... சந்தேகங்களும் விளக்கங்களும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனோ தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. மக்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்க இ-பதிவு முறையை கட்டாயம் ஆக்கி உள்ளது. மாவட்டங்களுக்கு உள்ளேயும், சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கும் இ-பதிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திற்குள் செல்ல என்ன செய்ய வேண்டும், மாவட்டத்திற்கு வெளியே செல்ல என்ன செய்ய வேண்டும், பக்கத்து ஊர்களுக்கு செல்ல இபதிவு அவசியமா என்று மக்களுக்கு இ-பதிவு முறை குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருக்கும்.

குறிப்பாக சென்னையில் இன்று முதல் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இபதிவு அவசியம் ஆக்கப்பட்டுள்ளது இது குறித்தும் சந்தேகங்கள் இருக்கும் அவற்றை கேள்வி பதில்களின் வடிவில் இப்போது பார்ப்போம்.

வடபழனி

வடபழனி

சென்னையில் மயிலாப்பூரில் இருந்து வடபழனி செல்ல இ-பதிவு செய்ய வேண்டுமா?

பதில்: நிச்சயம் இ பதிவு செய்ய வேண்டும். சென்னையில் ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள், வேறு காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பகுதிக்கு, காலை 10மணிக்கு மேல் சென்று வர இ-பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. இ-பதிவு இல்லாதவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இபதிவு தேவையில்லையா

இபதிவு தேவையில்லையா


சென்னைக்குள் எத்தனை மணி வரை எங்கு வேண்டுமானாலும் இ பதிவு இல்லாமல் சென்று வர முடியும்?

பதில்: கொரோனா தொற்று பெரிய அளவில் பரவி வரும் காரணத்தால், சென்னைக்குள் மக்கள் தேவையின்றி சுற்றுவதை தடுக்கவே முழு ஊடங்கும், இ பதிவு முறையும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 6 மணி முதல் காலை 10மணி வரை சென்னையின் எந்த பகுதிக்குள்ளும் இ பதிவு இல்லாமல் சென்று வர முடியும். ஆனால் 10 மணிக்கு மேல் செல்ல இ பதிவு கட்டாயம்.

நான்கு காரணங்கள்

நான்கு காரணங்கள்

என்னென்ன காரணங்களுக்கு இ பதிவு செய்து பயணிக்க தமிழக அரசு அனுமதி தருகிறது?

தனிநபா்கள் இந்த நான்கு வகையான காரணங்கள் இருந்தால் மட்டுமே இ பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கிறது. அதாவது மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த காரியங்கள், திருமணம் ஆகிய காரணங்கள் இருந்தால் மட்டுமே பயணத்தைத் தொடர முடியும் என அறிவித்துள்ளது.

இணைதளம் என்ன

இணைதளம் என்ன

இ பதிவு செய்வது எப்படி?

https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையதளத்திற்கு சென்றால், உங்கள் மொபைல் எண்ணை கேட்கும். அதை கொடுத்துவிட்டு கீழே உள்ள (captcha) எண்ணை பக்கத்து கட்டத்தில் அப்படியே பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னர் send otp என்பதை கிளிக் செய்ய வேண்டும், கிளிக் செய்த உடன், ஒடிபி வரும்,. ஒடிபியை கொடுத்து உள்ளே சென்றால், தனி நபர்/குழு சாலை வழி பயணம் இருசக்கர வாகனம்/ஆட்டோ/கார் (மாவட்டத்திற்குள், மாவட்டங்களுக்கு நடுவில், வெளி மாநிலத்திலிருந்து தமிழ் நாட்டின் உள் நுழைதல்), தனி நபர்/குழு ரயில்/விமானம் வழி தமிழ் நாட்டின் உள் நுழைதல், தொழில் நிறுவனங்கள் என மூன்று ஆப்சன் இருக்கும். இதில் தனிநபர்கள் என்றால், தனி நபர்/குழு சாலை வழி பயணம் என்ற முதல் ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அதில் உங்கள் பெயர், எங்கிருந்து எங்கு வரை செல்கிறீர்கள், வாகன எண், ஆதார் அல்லது ஏதேனும் அடையாள அட்டை போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். மருத்துவம், திருமணம், இறப்பு, முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட நான்கில் ஏதேனும் காரணத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்னர் ஒகே கொடுத்தால் இ பதிவு கிடைத்துவிடும்.

இ பதிவு கட்டாயம்

இ பதிவு கட்டாயம்

இ பதிவு மாவட்டத்திற்குள் செல்ல பதிவு செய்ய வேண்டுமா? அதாவது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்ல பதிவு செய்ய வேண்டுமா?

பதில்: இ பதிவு மாவட்டத்திற்குள் செல்ல கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லவோ அல்லது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வருவதற்கு இ பதிவு கட்டாயம் ஆகும். காலை 10மணிக்கு மேல் மாவட்டத்திற்கு ஒரு காவல்நிலைய சரகத்தில் இருந்து இன்னொரு காவல் நிலைய சரகத்திற்குள் செல்ல கட்டாயம் இ பதிவ செய்ய வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+