எங்கிருந்தோ பறந்து வந்து.. பூமியின் வட்டப்பாதையில் சிக்கிய சிறுகோள்.. அடுத்த 4000 வருஷம் துரத்துமாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூமியின் வட்டப்பாதையில் எங்கிருந்தோ பறந்து வந்த சிறுகோள் ஒன்று சிக்கி உள்ளது. அடுத்த 4000 வருடம் இந்த சிறுகோளுடன்தான் நாம் குடும்ப நடத்த போகிறோம்.

பொதுவாக ஒரு கோளின் சுற்றுவட்டப்பாதையில் வேறு கோள்கள் சுற்றாது. ஆனால் இதையும் மீறி சில கோள்களின் சுற்றுவட்டப்பாதையில் ஈர்ப்பு விசை காரணமாக வேறு சிறு கோள்கள் சிக்கும்.

இந்த சிறு கோள்களை trojan asteroid என்று அழைப்பார்கள். அதாவது ஒரு கிரகத்தின் அதே சுற்றுவட்டப்பாதையில் அதற்கு முன்போ, பின்போ சுற்றும். அதாவது ஒரு சூரிய குடும்பத்தில் உள்ள நட்சத்திரம் மற்றும் கோளின் ஈர்ப்பு விசையால் சுற்றுவட்டப்பாதையில் சிக்கி அதில் சுற்றும் சிறுகோள்கள் trojan asteroid என்று அழைக்கப்படும்.

 பூமி

பூமி

இந்த நிலையில்தான் பூமிக்கு புதிய trojan asteroid கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆம் பூமிக்கு ஏற்கனவே ஒரு trojan asteroid உள்ள நிலையில் புதிதாக ஒரு trojan asteroid கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 2010ல் கண்டுபிடிக்கப்பட்ட 2010 TK7 என்ற சிறுகோள் பூமியின் வட்டப்பாதையில் பூமிக்கு முன்பாக L4 point என்ற இடத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அதாவது பூமியில் இருந்து 60 டிகிரியில் பூமியின் வட்டப்பாதையிலேயே சுற்றிக்கொண்டு இருக்கிறது.

புதிய சிறுகோள்

புதிய சிறுகோள்

இந்த நிலையில்தான் புதிதாக தற்போது 2020 XL5 என்ற சிறுகோள் பூமியின் வட்டப்பாதையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2020ல் இது கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட இப்போதுதான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் பூமிக்கு முன்பாக L4 point என்ற இடத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அதாவது பூமியில் இருந்து 60 டிகிரியில் பூமியின் வட்டப்பாதையிலேயே சுற்றிக்கொண்டு இருக்கிறது. அதாவது பூமி இதை துரத்தி செல்வது போல.. trojan asteroidஐ பூமி துரத்திக்கொண்ட சென்று கொண்டு இருக்கும்.

4000 வருடம்

4000 வருடம்

அதுவும் ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல அடுத்த 4000 வருடம் பூமிக்கு முன்பாக பூமியின் வட்டப்பாதையில் இதை சுற்றிக்கொண்டு இருக்கும். 4000 வருடங்களுக்கு பின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி வேறு திசைக்கு இந்த சிறுகோள் செல்லும். இதன் பூமிக்கு அருகில் இருக்கும் நியோ சிறுகோள் ( near-earth asteroid - NEO) என்று அழைப்பார்கள். இது 1.18 கிமீ அகலம் கொண்டது. C-type அல்லது carbonaceous asteroid வகை சிறுகோள் ஆகும் இது.

கார்பன்

கார்பன்

அதாவது முழுக்க முழுக்க கார்பன் மூலம் உருவான சிறுகோள் ஆகும். இது பூமி மீதெல்லாம் மோதாது. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று பூமிக்கு முன் இது சுற்றிக்கொண்டு இருக்கும். செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடையில் இருக்கும் பகுதியை சிறுகோள் பெல்ட் என்று கூறுவார்கள். இங்கு பல சிறு கோள்கள் உள்ளன. இந்த சிறுகோள்கள் சமயங்களில் வியாழன் மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசையால் திசை மாறி வேறு எங்காவது செல்லும்.

பூமி வட்டப்பாதை

பூமி வட்டப்பாதை

அப்படி சிறுகோள் பெல்டில் எதோ ஒரு இடத்தில் இருந்த இந்த சிறுகோள் வியாழனின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பூமியின் வட்டப்பாதையில் இணைந்து உள்ளது. இதற்கு பூமியின், சூரியனின் ஈர்ப்பு விசையும் ஒரு காரணம் ஆகும். ஆனால் பூமிக்கு முன் இரண்டு சிறுகோள்கள் பூமியின் வட்டப்பாதையில் இருந்தாலும் பூமிக்கு பின் L5 point பகுதியில் எந்த சிறுகோளும் இல்லை. எனவே பூமியை எந்த சிறுகோளும் துரத்தவில்லை. பூமிதான் இரண்டு சிறுகோள்களை துரத்துகிறது.

 பல்வேறு கிரகங்கள்

பல்வேறு கிரகங்கள்

ஹவாயில் இருக்கும் Panoramic Survey Telescope and Rapid Response System என்ற தொலைநோக்கிதான் பல நாள் ஆராய்ச்சிக்கு பின் இந்த சிறுகோளை பூமியின் வட்டப்பாதையில் கண்டுபிடித்துள்ளது. பூமி மட்டுமின்றி வேறு கிரகங்களுக்கும் இது போல சிறுகோள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக வீனஸ் கிரகத்திற்கு 1 சிறுகோள், செவ்வாய் கிரகத்திற்கு 4 சிறுகோள், யுரேனஸ் கிரகத்திற்கு 2, நெப்டியூன் கிரகத்திற்கு 28, வியாழன் கிரகத்திற்கு 500,000 trojan உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+