சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காரில் வருவது முதல்வர்.. காரை தொட்டு கும்பிட போவது யார்னு பாத்தீங்களா.. வைரல் போட்டோ.. இது உண்மையா?

முதல்வர் காரை தொட்டு கும்பிட போனாரா அமைச்சர் சம்பத் சந்தேகம் கேள்வி எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு போட்டோ வைரலாகி வருகிறது. காரணம் ரொம்ப சிம்பிள்.. அமைச்சர் ஒருவர் முதல்வர் காரைத் தொட்டுக் கும்பிடுகிறார் என்று கூறி அந்த போட்டோவை சிலர் வைரலாக்கி வருகின்றனர்.

கடலூர் தொகுதியை சேர்ந்தவர் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்.. இவரது சகோதரர் எம்.சி. தாமோதரனும் முன்னாள் அமைச்சராக இருந்தவர்.. எம்சி சம்பத்தை பொறுத்தவரை அமைதியானவர்.. ஆர்ப்பாட்டமில்லாதவர்.

ஆனால் தன்னுடைய துறையில் தீவிரமான கவனத்தை செலுத்தி வருபவர்.. சில அமைச்சர்கள் பேட்டிகளில் தங்களை முதன்மைப்படுத்துவார்கள்.. சிலர் சர்ச்சை பேச்சுக்களை பேசி பரபரப்பை கிளப்புவார்கள்.. ஆனால், செயல்பாடுகள் மூலம் தனது ஆளுமையை நிரூபிப்பவர் எம்சி சம்பத்..

 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திடீர் சந்திப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திடீர் சந்திப்பு

உண்மையா?

உண்மையா?

இந்நிலையில், இவரது ஒரு போட்டோ ஒன்று கடந்த 10 நாட்களாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. அது உண்மையா.. பொய்யா என்று தெரியவில்லை.. ஒரே குழப்பமாக இருக்கிறது.. வாங்க அதை அலசிப் பார்ப்போம்.

முதல்வர்

முதல்வர்

இது கடலூரில் நடந்த சம்பவம். அதாவது ஆகஸ்ட் 27ம் தேதி கடலூர் சென்றிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவரது காருக்கு வெளியே அருகே நின்றிருந்த அமைச்சர் எம்.சி.சம்பத் கீழே குணிவது போலவும், காரைத் தொட்டுக் கும்பிடப் போவது போலவும் ஒரு போட்டோ வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. காருக்குள் கும்பிட்டபடி முதல்வர் அமர்ந்திருக்கிறார்.

கேள்வி

கேள்வி

இது உண்மையா என்று தெரியவில்லை. முதல்வர் காரைத் தொட்டுக் கும்பிட எத்தனித்தாரா அமைச்சர் என்று தெரியவில்லை. அவர் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்கிறார்கள். காரணம், முதல்வர் அருகே நிற்கும் அவர் நேரடியாகவே அவரை கும்பிட்டு விடலாமே.. காரை எதற்கு கும்பிட வேண்டும் என்றுதான் பலரும் சொல்கிறார்கள். ஆனால் முதல்வர் காரை தொட்டுக் கும்பிடத்தான் போனார் என்று கூறி சிலர் இதை பகிர்ந்து வருகின்றனர்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா பாணியில் முதல்வர் பழனிச்சாமியும் மாறி வருகிறாரா என்ற கேள்விகள் எழ வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு புகைப்படத்தை உலா விட்டுள்ளார்கள் என்றும் சிலர் சந்தேகம் கிளப்பியுள்ளனர். ஆனால் அப்படியெல்லாம் இல்லை.. அது வேறு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். தவறாக கருத்து பரப்பி வருகிறார்கள் என்று எம்.சி. சம்பத் தரப்பில் விளக்கம் தருகிறார்கள்.

English summary
Edapadi Palanisamy: Minister MC Sambaths controversy photo goes viral
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X