Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆவின் நெய் 115 ரூபாய் உயர்வு.. இனி பணக்காரர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும்.. எடப்பாடி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : 9 மாதங்களில் நெய் விலையை ரூ. 115 உயர்த்தி ஆவின் பொருட்களை இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது திமுக அரசு என விமர்சித்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

ஆவின் நெய் விலை நேற்று கிலோவுக்கு ரூ. 50 உயர்த்தப்பட்ட நிலையில், இன்று முதல் வெண்ணெய் விலை 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆவின் பொருட்களின் விலையை தமிழக அரசு கடுமையாக உயர்த்தியுள்ளதற்கு எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஆவின் விலை உயர்வு

ஆவின் விலை உயர்வு

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பொருட்களின் விலை அவ்வப்போது உயர்ந்து வருகிறது. ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐஸ் கிரீம், தயிர், நெய், ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் உள்ளிட்டவற்றின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் பொதுமக்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், நேற்று முதல் ஒரு லிட்டர் ஆவின் நெய்யின் விலை 580 ரூபாயில் இருந்து 630 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

வெண்ணை விலையும் உயர்வு

வெண்ணை விலையும் உயர்வு

ஆவினில் நெய்யைத் தொடர்ந்து வெண்ணெய் விலையையும் ஆவின் நிர்வாகம் அதிகரித்துள்ளது. உப்பு கலக்காத அரை கிலோ வெண்ணெய்யின் விலை ரூபாய் 250 இல் இருந்து 260 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 100 கிராம் வெண்ணெய்யின் விலை 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. உப்பு கலந்த வெண்ணெய் 100 கிராம் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாகவும், 500 கிராம் 255 ரூபாயிலிருந்து 265 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.

பொதுமக்கள் அதிர்ச்சி

பொதுமக்கள் அதிர்ச்சி

ஆவின் பால் விலை அதிகரித்ததோடு, அடுத்தடுத்து, ஆவின் நெய், வெண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது சாமானியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வைக் கண்டித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த விலை உயர்வைக் கண்டித்துள்ளார்.

எடப்பாடி கடும் கண்டனம்

எடப்பாடி கடும் கண்டனம்

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆவின் நெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு எனது கடுமையான கண்டனங்கள். கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு கிடைத்த ஆவின் நெய் தற்போது ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.630-க்கு விற்கப்படுகிறது. இன்று வெண்ணை விலையையும் கிலோவிற்கு ரூ. 20 உயர்த்தியுள்ளனர்.

இனி பணக்காரர்கள் மட்டுமே

இனி பணக்காரர்கள் மட்டுமே

எளியோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆவின் பொருட்களை எட்டாகனியாக்கி இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த விடியா அரசு. எளிய மக்கள் தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பால் மற்றும் பால் பொருட்கள் மூலம்தான் பெற்று வருகின்றனர். தற்போது அதுகூட அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+