Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவில் திடீர் ஆலோசனை.. இன்றும் ஈபிஎஸ் வீட்டுக்கு போன முக்கிய புள்ளிகள் - சிக்னல் கொடுத்த எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : நேற்று இரவும், இன்று காலையிலும் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களோடும், மூத்த வழக்கறிஞர்கள் உடனும் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதிமுக பொதுக்குழுவை ஜூலை 11ஆம் தேதி நடத்தி, பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்கத் தயாராகி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, நீதிமன்றம் வாயிலாக ஓ.பன்னீர்செல்வம் குடைச்சல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், பொதுக்குழு நடைபெறுவதற்கு இருக்கும் தடைகளை உடைக்கும் வகையில் விரைவாகச் செயல்பட வேண்டும் என சட்ட வல்லுநர்களுக்கும், தனது தரப்பு வழக்கறிஞர்களுக்கும் ஈபிஎஸ் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஈபிஎஸ் ஆலோசனை

ஈபிஎஸ் ஆலோசனை

எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது. அவரது உதவியாளர்கள், அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ச்சியாக தனது ஆதரவாளர்களுடன் வீட்டில் வைத்து ஆலோசனைகளில் ஈடுபட்ட வந்த எடப்பாடி பழனிசாமி, வரிசையாக தனக்கு நெருக்கமான பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார். தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட அவர், தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்றும் உத்தரவு போட்டார். பின்னர், தனக்கு அறிகுறி ஏதும் இல்லை என்பது உறுதியான பின்னரே அவர் கட்சியினரோடு சகஜமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று ஆலோசனை

இன்று ஆலோசனை

இன்று காலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து பேசினார். நேற்று இரவும் அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, காமராஜ், விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் முன்னாள் எம்.எல்.ஏவும் வழக்கறிஞருமான இன்பதுரை உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நேற்று இரவு ஆலோசனை நடத்தினர்.

நேற்று இரவு மீட்டிங்

நேற்று இரவு மீட்டிங்

நேற்று இரவு நடந்த ஆலோசனையின்போது, ஜூலை 11ஆம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்துவதற்கு, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்துள்ள வழக்குகளில் சாதகமான முடிவைப் பெற வேண்டும், அதற்கு ஏற்ற வகையில் சட்ட நடவடிக்கைகளை வேகமாகச் செயல்படுத்த வேண்டும், வழக்குகளை விரைவில் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும், கடைசி நேரத்தில் சிக்கல் ஏதும் வந்துவிடக்கூடாது என தனது ஆதரவாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

 நெருங்கும் பொதுக்குழு

நெருங்கும் பொதுக்குழு

பொதுக்குழு நடைபெறுவதற்கு இன்னும் 9 நாட்களே இருப்பதால், ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன. அதில் எந்தப் பிரச்சனையும் வராது, நாம் பார்க்க வேண்டியதெல்லாம் சட்ட விவகாரங்கள் பற்றித்தான். ஓபிஎஸ் தரப்பினர் என்ன வாதங்களை முன்வைப்பார்கள் என்பதற்கு ஏற்ப நாம் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என ஈபிஎஸ் அறிவுறுத்தி இருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 378 பக்க மனுவின் சாராம்சங்கள் குறித்தும் விரிவாக இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 முற்றும் மோதல்

முற்றும் மோதல்

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே ஒற்றைத் தலைமை கோரிக்கையால் மோதல் எழுந்து அந்த விவகாரம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. அதிமுகவின் ஒற்றைத் தலைமையைக் கைப்பற்ற ஈ.பி.எஸ் தரப்பும், இரட்டைத் தலைமையாகவே இருக்கவேண்டும், தனது இடம் பறிபோகக் கூடாது என ஓ.பி.எஸ்ஸும் முட்டி மோதி வருகின்றனர். ஒருபக்கம், தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என இரு தரப்பினரும் சட்டப்பூர்வமாக அணுகி வருகின்றனர். இன்னொரு புறம், இரு தரப்பினருமே, கட்சிக்குள் தங்களது ஆதரவை அதிகப்படுத்திக் கொள்ளும் நோக்கில் ரகசிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனர்.

ஈபிஎஸ் திட்டங்கள்

ஈபிஎஸ் திட்டங்கள்

ஒ.பன்னீர்செல்வம் தரப்பினரின் திட்டங்கள் ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், பதிலடி கொடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர். ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டி ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமிக்கு முடிசூட்டியே தீருவது என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் உறுதியாக இருந்து வரும் நிலையில், ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய அறிக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது பதில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தில்

தேர்தல் ஆணையத்தில்

தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி சமர்ப்பித்துள்ள அறிக்கையில், அ.தி.மு.கவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு போதுமான ஆதரவு இல்லை, பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என பெரும்பான்மையானோர் தன் பக்கமே உள்ளனர் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு விரிவான விளக்கத்துடன் பதில் அளித்துள்ளார். மேலும், பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்துப் பெற்ற கடிதங்களையும் இணைத்து அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 உச்சநீதிமன்றத்தில்

உச்சநீதிமன்றத்தில்

எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 378 பக்கங்கள் கொண்ட மனுவில், இரண்டு நீதிபதிகள் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அதிமுக உரிமைக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் அதிமுக விவகாரங்களில் முடிவெடுக்கும் உரிமை பொதுக்குழுவின் அதிகாரத்துக்குட்பட்டது என்றும், ஓபிஎஸ்ஸுக்கு வீட்டோ அதிகாரம் தருவது போல் ஐகோர்ட் ஆணை உள்ளது. அதிமுகவின் ஜனநாயக அமைப்பு முறையில் தலையிடுவது போல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு உள்ளது என்கிற வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதால் தங்களுக்கு சாதகமாகவே முடிவு வரும் என ஈபிஎஸ் தரப்பினர் நம்பிக்கையோடு இருந்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+