சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொங்குவிலிருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்.. எடப்பாடி பழனிச்சாமி செம அப்செட்.. தென் மண்டலம் ஹேப்பி!

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கொங்கு மண்டலத்தில் இருந்து ஒரு குரல் ஓங்கி ஒலித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் நேற்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடந்தது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக நிர்வாகிகளிடையே இருவேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில் இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இந்த நிலையில் அதிமுகவின் தலைமை வலிமையாக இல்லை என்றும் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் ராமநாதபுரம் முன்னாள் எம்பி அன்வர் ராஜா வலியுறுத்தியுள்ளார்.

தலையை காணோம், கையை காணோம்னு எங்களை கேட்க கூடாது.. 'சவுக்கை' மிரட்டிய காடுவெட்டி குரு மகன் கனலரசன் தலையை காணோம், கையை காணோம்னு எங்களை கேட்க கூடாது.. 'சவுக்கை' மிரட்டிய காடுவெட்டி குரு மகன் கனலரசன்

கோபம்

கோபம்

இவரது கருத்துக்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடும் கோபமடைந்த அன்வர் ராஜாவை அடிக்க பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அது போல் அதிமுகவை வழிகாட்டு குழுதான் வழி நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

செங்கோட்டையன் வாதம்

செங்கோட்டையன் வாதம்

செங்கோட்டையனின் இந்த வாதம் பெரும் விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது கொங்கு மண்டலத்திலிருந்து முதல் எதிர்ப்புக் குரலாகவே செங்கோட்டையனின் கருத்து பார்க்கப்படுகிறது. வழிகாட்டு குழு விவகாரம் ஓபிஎஸ் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் ஒரு விஷயமாகும். ஆனால் வழிகாட்டு குழுவை நீக்க வேண்டும் என்றும் அதற்கு அதிகாரங்கள் கொடுக்கக் கூடாது என்பதும் எடப்பாடி பழனிச்சாமியின் வாதமாகும்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

கொங்கு மண்டலத்தினரின் பலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பதை கடந்த தேர்தல் வெற்றியில் அனைவரும் அறிந்தனர். அது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்ற விவாதம் எழுந்த போதும் தென் மண்டலத்தினர் ஓபிஎஸ் பக்கமும் கொங்கு மண்டலத்தினர் எடப்பாடி பழனிச்சாமி பக்கமும் இருந்தனர். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொங்கு மண்டலத்தினரின் ஏகோபித்த ஆதரவுடன் எடப்பாடி எதிர்க்கட்சித் தலைவரானார்.

நிர்வாகிகள் நியமனம்

நிர்வாகிகள் நியமனம்

கூட்டணி, நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர்கள் தேர்வு, கட்சியினருடன் ஒற்று போதல் உள்ளிட்ட விவகாரங்களில் எடப்பாடி பழனிச்சாமி மீது தென் மண்டலத்தினர் அதிருப்தியிலும் கடும் எதிர்ப்பிலும் இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடிக்கு அதே மண்டலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து அவருக்கு நேரடியாக இல்லாவிட்டாலும் அவரது கருத்துக்கு மாற்றாக செங்கோட்டையன் தெரிவித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கொங்கு மண்டல நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

English summary
Former CM Edappadi Palanisamy faces first oppose from Kongu Belt in AIADMK meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X