திமுகவுக்குள் ஓட்டை.. ‘தாவிய’ தலைகளுக்கு வாய்ப்பு.. சொன்னபடி சீட் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
சென்னை: அண்மையில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவுக்கு தாவிய 2 தலைகளுக்கு லோக்சபா சீட் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. திமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் விலகியவர்களுக்கு உறுதி அளித்தபடி சீட் கொடுத்துள்ளது அதிமுக.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் அணிகள் வேகமெடுத்துள்ளன. மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட உள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 16 வேட்பாளர்களின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த பட்டியலை இன்று வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி. மொத்தம் 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடவுள்ளது. 7 இடங்களில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.

திமுகவில் இருந்து தாவிய தலைகளுக்கு சீட்: திமுகவில் இருந்து விலகி சமீபத்தில் அதிமுகவில் இணைந்த நசரேத் பசிலியானுக்கு கன்னியாகுமரியில் சீட் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. மேலும், சிம்லா முத்துச்சோழன் கடந்த மார்ச் 7ஆம் தேதி தான் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவருக்கு உடனடியாக நெல்லை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நசரேத் பசிலியான்: அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் நசரேத் பசிலியான். குமரி மாவட்டம் கடியபட்டணம் மீனவர் கிராமத்தில் பிறந்த நசரேத் பசிலியான் தற்போது நாகர்கோவில் கீழராமன்புதூரில் வசித்து வருகிறார். கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்தவர். எம்.ஏ வரலாறு மற்றும் சமூக செயல்பாடுகள் பிரிவில் பி எச் டி பட்டம் பெற்றவர் பசிலியான். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், அரபி, ஜெர்மன் என 6 மொழிகள் தெரிந்தவர். துபாயில் மருத்துவ நிறுவனம் நடத்தி வருகிறார்.
நீண்டகால அரசியல் அனுபவம் மிக்கவர். 38 ஆண்டுகள் திமுகவில் பணியாற்றியுள்ளார். திமுக மீனவர் அணியின் மாநில துணை செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தவர். இந்நிலையில், திடீரென கடந்த நவம்பர் மாதம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இணைந்த வேகத்திலேயே அவருக்கு அ.தி.மு.க மாநில மீனவரணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
ஒவ்வொரு தேர்தல்களிலும் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு மனுதாக்கல் செய்யும் பசிலியானுக்கு சீட் கிடைக்காமல் ஏமாற்றமடைவது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனால் தான் அவர் திமுகவில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. இங்கு வந்தால் சீட் என தளவாய் சுந்தரம் உறுதி அளித்துதான் அதிமுகவுக்கு நசரேத் பசிலியானை அழைத்து வந்ததாக கூறப்பட்டது. உறுதி அளித்தபடி அதிமுக தற்போது அவரை கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக களம் இறக்கி உள்ளது.
சிம்லா முத்துச்சோழன்: திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன். கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாகக் கொண்ட இவர், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். இவர். ஆர்சி கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்தவர். இவரது தாத்தா, புனித அந்தோணியார் என்ற திரைப்படத்தை தயாரித்து, அதன்மூலம் போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றவர்.
முதல்வர் ஜெயலலிதா படித்த சர்ச்பார்க் கான்வென்டில் படித்த சிம்லா, பிபிஏ., எல்எல்பி., முடித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். சிம்லா முத்துச்சோழன், வடசென்னை பகுதி வழக்கறிஞர் அணியில் அமைப்பாளராக இருந்தார். பின்னர் மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளராக பொறுப்பு வகித்தார். அப்போது தான், 2016 சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் களமிறக்கப்பட்டார் சிம்லா முத்துச்சோழன்.
அந்த தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். எனினும், ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டதால், சிம்லா முத்துச்சோழன் தமிழகம் முழுவதும் அறியப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பின் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக தலைமை, மருது கணேஷுக்கு திமுக வாய்ப்பளித்தது. இவர் டிடிவி தினகரனிடம் டெபாசிட் இழந்தார்.
அடுத்தடுத்த தேர்தல்களில் சிம்லா முத்து சோழனுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், மார்ச் மாத தொடக்கத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார் சிம்லா முத்துச்சோழன். "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு எனக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால், உறுதியளித்தபடி நடந்துகொள்ளவில்லை.
திமுகவில் எனது வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அதிமுகவில் சேர்வது என்ற முடிவை எடுத்தேன். மிகவும் மனமுடைந்த நிலையில் தான் இந்த முடிவை எடுத்தேன்." என்று தெரிவித்திருந்தார் சிம்லா முத்துச்சோழன். இந்த நிலையில் கட்சியில் இணைந்த 2 வாரங்களிலேயே அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சிம்லா முத்துசோழன். லோக்சபா தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட சிம்லா முத்துசோழனுக்கு அதிமுக வாய்ப்பு அளித்துள்ளது.

அதிமுக வேட்பாளர்களின் முழு பட்டியல்
01 தென் சென்னை - ஜெயவர்தன்
02 வட சென்னை - ராயபுரம் மனோ
03 காஞ்சிபுரம் - ராஜசேகர்
04 அரக்கோணம் - விஜயன்
05 கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
06 விழுப்புரம் - பாக்கியராஜ்
07 சேலம் - விக்னேஷ்
08 நாமக்கல் - தமிழ் மணி
09 ஈரோடு - அஷோக்
10 கரூர் - தங்கவேல்
11 சிதம்பரம் - சந்திரகாசன்
12 மதுரை - சரவணன்
13 தேனி - நாராயணசாமி
14 நாகை - சுர்ஜித் சங்கர்
15 ஆரணி - கஜேந்திரன்
16 ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
17 ஸ்ரீ பெரும்புதூர் - பிரேம் குமார்
18 வேலூர் - பசுபதி
19 திருவண்ணாமலை - கலியபெருமாள்
20 தருமபுரி - அசோகன்
21 பெரம்பலூர் - சந்திரமோகன்
22 கள்ளக்குறிச்சி - குமரகுரு
23 திருநெல்வேலி - சிம்லா முத்துசோழன்
24 தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
25 சிவகங்கை - சேவியர் தாஸ்
26 திருப்பூர் - அருணாசலம்
27 கோயம்புத்தூர் - சிங்கை ராமச்சந்திரன்
28 நீலகிரி - லோகேஷ்
29 மயிலாடுதுறை - பாபு
30 பொள்ளாச்சி - கார்த்திக் அப்புசாமி
31 திருச்சி - கருப்பையா
32 கன்னியாகுமரி - பசிலியான் நசரேத்
33 புதுச்சேரி - தமிழ்வேந்தன்
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் பட்டியல்
புதிய தமிழகம் - தென்காசி - கிருஷ்ணசாமி
எஸ்டிபிஐ - திண்டுக்கல் - நெல்லை முபாரக்
தேமுதிக
திருவள்ளூர் (தனி)
மத்திய சென்னை
கடலூர்
விருதுநகர்
தஞ்சாவூர்
-
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications