ஓபிஎஸ்ஸை சமாளிச்சிடலாம்.. ‘அந்த கண்ணுக்குத் தெரியாத எதிரி’ - ஆதரவாளர்களுக்கு எடப்பாடி போட்ட ஆர்டர்!
சென்னை : அதிமுக பொதுக்குழு நடத்துவதற்கு ஓபிஎஸ் கொடுக்கும் சிக்கல்களை திறம்படச் சமாளித்தாலும், கண்ணுக்குத் தெரியாத எதிரியின் பிரச்சனையால் கவலையில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை சென்னை வானகரத்தில் வரும் ஜூலை 11ஆம் தேதி நடத்துவதற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு.
நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் ஓபிஎஸ் ஏற்படுத்தியுள்ள தடைகளை வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் ஈபிஎஸ், கொரோனாவால் சிக்கல் வந்துவிடக்கூடாது என்றுதான் அதிக கவலையில் உள்ளாராம்.

அதே இடத்தில் பொதுக்குழு
ஜூலை 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு, ஜூன் 23ல் பொதுக்குழு நடந்த அதே மண்டபத்தில் தேதி இல்லாததால் தர மறுக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அந்த மண்டபத்தை எடப்பாடி பழனிசாமியே செண்டிமெண்டாக மறுத்ததாக கூறப்படுகிறது. ஈசிஆர், ஓஎம்ஆர் சாலை பகுதிகளில் பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடம் தேடினர். ஈசிஆரில் விஜிபிக்கு சொந்தமான காலி இடத்தில் பொதுக்குழுவை நடத்த சில நாட்களுக்கு முன் முடிவு செய்து, அங்கு சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. பின்னர் அந்த பணிகளும் நிறுத்தப்பட்டன. கோவையில் நடத்தலாம் என்றும் பேச்சு அடிபட்டது. பின்னர், அந்த முடிவையும் கைவிட்டனர்.

ஏற்பாடுகள் தீவிரம்
மீண்டும் சென்னையை அடுத்த வாகனரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்திலேயே பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அங்கு பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை முன்னின்று நடத்தும் பொறுப்பும் முந்தைய பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளைச் செய்த மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்
ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு ஏற்பாடுகளை கவனித்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும்போது மேடையில் ஏறி மாலை அணிவிக்கப்போனதால் எடப்பாடி கடுப்பாகி திட்டினார். பின்னர் மீண்டும் ஒருமுறையும் பன்னீர் ரோஜா மாலையோடு போன பெஞ்சமினிடம் கடுகடுத்தார் எடப்பாடி. இதனால், பெஞ்சமின் வேதனையடைந்த நிலையில், அவரை தனியாக அழைத்து ஓபிஎஸ் இருக்கும்போது எனக்கு பெரிய மாலை அணிவிப்பது அவரை அசிங்கப்படுத்துவது போல இருக்கும் என்பதால் தான் கோபப்பட்டுவிட்டேன், தவறாக நினைத்துக்கொள்ளக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெஞ்சமின் சமாதானமாகி இதோ அடுத்த பொதுக்குழுவிற்கான வேலைகளிலும் தீவிரமாக இறங்கிவிட்டார்.

கண்ணுக்கு தெரியாத எதிரி
நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் மாறி மாறி நாடி வரும் ஓ.பன்னீர்செல்வத்தின் கடுமையான எதிர்ப்புகளைக் கூட, கட்சியில் தனக்கு இருக்கும் ஆதரவையும், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவையும் வைத்து சமாளித்துவிடலாம். ஆனால், இந்த கொரோனா பரவல் பிரச்சனையை என்ன செய்வது என்றே தெரியவில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் ஈபிஎஸ் கூறி வருகிறாராம். இதனால், பொதுக்குழு நடத்துவதில் சிக்கல் வந்துவிடக்கூடாது என்றும் கூறி வருகிறாராம்.

நெருக்கமானவர்களுக்கு பாதிப்பு
எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது. அவரது உதவியாளர்கள், அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ச்சியாக ஆலோசனைகளில் ஈடுபட்ட வந்த எடப்பாடி பழனிசாமி, வரிசையாக தனக்கு நெருக்கமான பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார். தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட அவர், ஒரு நாள் முழுக்க தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்றும் உத்தரவு போட்டார். பின்னர், தனக்கு அறிகுறி ஏதும் இல்லை என்பது உறுதியான பின்னரே அவர் கட்சியினரோடு சகஜமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

அதிகரிக்கும் தொற்று
கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் எடப்பாடி பழனிசாமி கவலையடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. நாள்தோறும் வரும் கொரோனா பாதிப்பு நிலவரத்தையும், சென்னை நிலவரத்தையும் தனது ஆதரவாளர்களிடம் கேட்டு வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி. தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம், திரும்பவும் கொரோனா அதிகமாக பரவி வருது, ஒரே நேரத்துல எல்லாரும் மாட்டிக்கிட்டா ஒண்ணும் பண்ண முடியாது, எல்லோருமே கவனமா இருங்க என அறிவுறுத்தி வருகிறாராம்.

கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதன் காரணமாக பொதுக்குழு நடத்துவதில் சிக்கல் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுக்குழு நிகழ்விற்கு சமூக இடைவெளியை பின்பற்றி 3 ஆயிரம் இருக்கைகள் போடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காகவே, உள்ளரங்கத்தில் பொதுக்குழு நடத்தாமல் விசாலமான இட வசதிக்காக திறந்தவெளியில் பந்தல் அமைத்து பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பாதிப்பு வரக்கூடாது
திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்துவதற்கு காவல்துறையில் அனுமதி வாங்கியாகிவிட்டது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு விசாரணைக்கு வரும், உரிமையியல் நீதிமன்றத்தில் பொதுக்குழுவுக்கு தடை கோரி கூடுதல் மனுவையும் ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்துள்ளனர். ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என்றாலும் கூட பொதுக்குழுவை சிறப்பாக நடத்தி முடிக்க, கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கவேண்டும், நெருக்கமான யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் கவனமாக இருக்குமாறு அனைவருக்கும் அறிவுறுத்தி உள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.
-
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
அதிமுக கதை குளோஸ்.. விஜய் வீட்டு கதவை தட்டும் எடப்பாடி பழனிசாமி.. பங்கப்படுத்திய பன்னீர்செல்வம்












Click it and Unblock the Notifications