தமிழ்நாடு முழுவதும் ஏசி பேருந்துகள் சாத்தியமா? சட்டசபையில் டேட்டாவோடு வந்த எடப்பாடி பழனிசாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டு முழுவதும் அத்தனை பேருந்துகளும் சாத்தியமா என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி புள்ளி விவரங்களோடு பேசி இருக்கிறார். 4 ஆண்டுகளில் 20 ஆயிரம் பேருந்துகள் வாங்குவது இயலாத காரியம் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதற்கேற்ப திட்டமிட்டு புதிய பேருந்துகளை வாங்குங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காலை நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் மற்றும் எஃப் சிஆர்ஏ சட்டத்திருத்த மசோதாவிற்கும் எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெற்று ஒருமனதாக நிறைவேறியது. இதன்பின் பட்ஜெட் மீதான விவாதம் மீண்டும் தொடங்கியது. இதில் எடப்பாடி பழனிசாமி பிற்பகலுக்கு பின் கலந்து கொண்டார்.

Edappadi Palaniswami

அதில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அரசுப் போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் 16,500 புதிய பேருந்துகள் வாங்கி இயக்கினோம். ஆனால் இன்றைய சூழலில் பல பேருந்துகள் பழுதாகி நிற்கும் நிலையே உள்ளது என்று பேசினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் தமிழன் பார்த்திபன், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற போதே, கிராமங்களை நகரத்துடன் இணைக்க வேண்டும்.

அதேபோல் நான் பயணம் செய்யும் வகையில் தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை பேருந்துகளையும் ஏசி பேருந்துகளாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார் என்று தெரிவித்தார். இதன்பின் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பேசுகையில், கேட்பதற்கு இனிமையாக உள்ளது. இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனென்றால் அவர் புதிதாக போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கிறார்.

நான் முதல்வராக இருந்துள்ளேன். ஏசி பேருந்துகளை இயக்க வேண்டுமென்றால், அதற்காக நிதி ஆதாரம் தேவை.. ஆயிரம் பேருந்துகளை தான் மின்சார பேருந்துகளாக, ஏசி பேருந்துகளாகவும் மாற்ற முடிவு செய்துள்ளீர்கள். அதிமுக ஆட்சியில் சுமர் 16,500 புதிய பேருந்துகளும், திமுக ஆட்சியில் சுமார் 7 ஆயிரம் புதிய பேருந்துகளும் வாங்கப்பட்டன. ஆனால் பழைய பேருந்துகள் இன்னும் இயக்கப்பட்டு வருகின்றன.

ஒரு பேருந்தின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் தான். 7 லட்சம் கிமீ தான் இயக்க முடியும். திமுக ஆட்சியில் ஆயுட்காலத்தை 7 ஆண்டுகளாக உயர்த்தினார்கள். அதேபோல் 12 லட்சமாக மாற்றினார்கள். அப்படியான பேருந்துகள் தான் இப்போது இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் 5 ஆண்டுகளானாலும் அனைத்து பேருந்துகளையும் மாற்றி அமைக்கவே முடியாது.

திமுக ஆட்சியின் போது ஒவ்வொரு மானியக் கோரிக்கையின் போதும் 5 ஆயிரம் பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டது. ஆனால் ஆட்சியின் முடிவில் 7 ஆயிரம் பேருந்துகள் தான் வாங்க முடிந்தது. 20 ஆயிரம் பேருந்துகளை ஏசி பேருந்துகளாக மாற்ற முடியாஅது என்பதை உறுதியாக கூறுகிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் தமிழன் பார்த்திபன், அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம் என்றார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஏசி பேருந்துகள் தேவையில்லை.. சாதாரண பேருந்துகளை மாற்றினாலே மக்கள் பாராட்டுவார்கள். நடப்பாண்டில் ஆயிரம் பேருந்துகள் வாங்குவதாக கூறியுள்ளீர்கள். இந்த ஆண்டு முடிந்துவிட்டது. இன்னும் 4 ஆண்டுகள் மட்டுமே இருக்கிறது. 4 ஆண்டில் எத்தனை பேருந்து வாங்குவீர்கள்? அது இயலாத காரியம் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+