எக்சிட் ‘தலை’.. கூட்டணி தொடர எடப்பாடி விதித்த ‘ஒரே’ நிபந்தனை! மிரண்ட மேலிடம்..என்ன இப்படி சொல்றாங்க?
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்படும் பாஜகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை இபிஎஸ் மேற்கொண்டு வரும் நிலையில் கூட்டணி தொடர வேண்டுமானால் 'ஒரு' நிபந்தனை அதனை நிறைவேற்ற வேண்டுமென தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த மூத்த தலைவர்களிடம் எடப்பாடி நேரடியாகவே தெரிவித்ததாக தகவல்கள் உலாவுகின்றன.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்திற்கு எப்போது முடிவு வரும் என அந்த கட்சியினருக்கே தெரியாது போல. அந்த அளவுக்கு முடிவில்லா தொடர்வண்டி பயணம் போல அதிமுக விவகாரம் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு சிக்கலை சந்தித்து வருகிறது.
ஓபிஎஸ் இபிஎஸ் இடையிலான அதிகார மோதலில் பாஜக தலைமை எவ்வளவோ பேசிப் பார்த்தும் விட்டுக் கொடுக்க முடியாது என விடாப்பிடியாக இருக்கிறார் தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி.

எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஒற்றைத் தலைமை முழக்கம் எழுந்ததிலிருந்து பெரும்பாலான தலைமைக் கழக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் என 90 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறது. ஆனாலும் என்ன கரிசனமோ தெரியவில்லை ஆரம்பத்தில் இருந்தே பாஜக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து வருவதாக அவர் தரப்பு நிர்வாகிகள் உறுதியாகச் சொல்கின்றனர். மேலும் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணமாகவும் இருக்கிறது.

மேலிடம் நெருக்கடி
அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சேர்த்து கூட்டணி அமைத்தால் பெருவெற்றி பெறலாம் என்பதால் அதிமுக இணைப்பு சாத்தியமில்லை என்றாலும் அதனை சாதிக்க பாஜக தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். டெல்லி தரப்பும் இதையே தன்னை சந்திக்க வந்த எடப்பாடி பழனிச்சாமி இடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிமுகவில் நீக்கப்பட்டவர்களுக்கு இடம் இல்லை என எடப்பாடி தரப்பு கூறி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அதிமுக தரப்பு நெருக்கடியை சந்தித்து வருகிறது.

ஓபிஎஸ்
அந்த வகையில் தான் சில இடங்களில் வருமான வரித்துறை சோதனை அமலாக்கத்துறை சோதனை மாஜி அமைச்சர்களுக்கு நெருக்கடி என மறைமுக மிரட்டல்கள் வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே குஜராத்துக்கு சென்ற ஓபிஎஸ் அதே வேகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் கூட்டி போட்டி பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார். ஒருபுறம் தேர்தல் ஆணையத்தில் தனக்கு சாதகமான முடிவு வந்திருப்பதாக எடப்பாடி தரப்பு மகிழ்ச்சியில் இருந்த நிலையில் அதே வேகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தையும் பாஜக தலைப்பு ஆதரிப்பதை அவர் விரும்பவில்லை. இதன் காரணமாகவே அவசர அவசரமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார் என்கின்றனர் அவர் தரப்பு ஆதரவாளர்கள்.

எதிர்பார்ப்பு
அதாவது கடந்த காலங்களில் சில இடங்களில் தோல்வியடைவதற்கு சிறுபான்மை வாக்குகள் பறிபோனதும் அதற்கு பாஜக காரணம் என்பதை எடப்பாடி பழனிச்சாமி உணர்ந்திருக்கிறார். இதனால் ஓபிஎஸ் என்ற ஒற்றை காரணத்திற்காக வேறு சில காரணங்களை வைத்து பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிடும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும்சிவி சண்முகம் ஜெயக்குமார் உள்ளிட்டோரின் பேச்சும் அதனை உறுதி செய்யும் வகையிலேயே இருப்பதால் பாஜக எடப்பாடி இடையே சுமுகமான உறவு இல்லை. இதனால் நாளைய கூட்டத்தில் சசிகலா ஓபிஎஸ் பாஜக தொடர்பான விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நிபந்தனை
இந்த நிலையில் சில பாஜக தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி இடம் அதிமுக பாஜக கூட்டணி தொடர வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அவர்களிடம் ஓபிஎஸ் குறித்து வெளிப்படையாக பேசிய எடப்பாடி கட்சியிலிருந்து சென்றவர்கள் குறித்து பேசவே கூடாது என்றதோடு முக்கிய நிபந்தனை ஒன்றை விதித்தாராம். இதனால் பேச்சுவார்த்தை நடத்த வந்த நிர்வாகிகள் எதுவுமே பேசாமல் திரும்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அப்படி என்ன நிபந்தனை வைத்தார் எடப்பாடி என்பதுதான் அதிமுகவினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எது எப்படி எனினும் இரு வாரங்களுக்கு அதிமுக தொடர்பான அதிரடிகள் அடுத்தடுத்து அரங்கேறும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications