விஜய் தலைமையை ஏற்கப் போறார் எடப்பாடி? அப்போ பாஜக.. கொளுத்தி போடும் டிடிவி தினகரன்
சென்னை: விஜய் வந்தால் பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழற்றிவிடுவார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் விஜய் தலைமையிலான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார் என்றும், விஜய் தலைமையேற்கும் அளவுக்கு அதிமுக பலவீனமாகிவிட்டதா எனவும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தன் கட்சியின் தொண்டர்களை வைத்தே விஜய்யின் டிவிகே கொடியை தன் கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தூக்கிப் பிடிக்க செய்துள்ளார். இதில் இருந்தே தெரிகிறது, விஜய்யின் தலைமையிலான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார் என்று.. அந்த அளவுக்கு அதிமுக பலவீனமாகிவிட்டது..

அப்படி விஜய் தலைமையில் அதிமுக கூட்டணி வைத்தால், பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழற்றிவிடுவார்.. பழனிசாமியை முதல்வர் ஆக்குவதற்காகவா விஜய் கட்சியை ஆரம்பித்தார்.. இல்லை விஜய் வந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவேன் என்று சொல்வாரா? நடக்காத ஒன்றை ஏன் பேசுகிறீர்கள்..
அதிமுக பலவீனமாகிக் கொண்டு இருக்கிறது. பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்று சொன்ன போதில் இருந்தே அந்த கூட்டணி பலவீனமாகி கொண்டு தான் இருக்கிறது. வரும் தேர்தல் முடிவில் பார்த்தீர்கள் என்றால் அதிமுக கூட்டணி வெறும் 15 சதவீதத்துக்கு கீழ் தான் வரும்.. இவ்வாறு அவர் கூறினார்.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி












Click it and Unblock the Notifications