சீனியர்களை டம்மியாக்கினாரா எடப்பாடி? பரபரப்பில் ’பாண்டிய’ மண்டலம்! ரர.க்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை ஓரம் கட்டியுள்ள எடப்பாடி பழனிச்சாமி தற்போது தனது காலத்திலிருந்து அதிமுகவில் பயணிக்கும் சீனியர்களை டம்மி செய்யும் வகையில் அவர்களுக்கு பெயர் அளவிலான பொறுப்புகளை கொடுத்துள்ளதாகவும் பல மூத்த முக்கிய முன்னாள் அமைச்சர்கள் புலம்பி வருவதாக அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் பேசி வருகின்றனர்.

அதிமுகவில் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் கட்சி ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி தற்போது கட்சியினை தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார்.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை செல்ல நேர்ந்தது. இதனால் கூவத்தூர் பங்களாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களில் ஒருவரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

சசிகலா சிறையில் இருந்த இடைப்பட்ட காலத்தில் தனக்கு வெளிப்படையாகவே நெருக்கடி கொடுத்த ஓ.பன்னீர் செல்வத்தோடு கரம் கோர்த்ததோடு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவியையும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியையும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கினார். கட்சி ரீதியாக இரண்டாம் இடத்தில் இணை ஒருங்கிணைப்பாளராகவும் அவர் பதவியேற்றுக் கொண்டார். இதனிடையே அப்போது இருந்து இப்போது வரை எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் தனக்கான இடத்தை முழுமையாக நிரப்பிக் கொண்டிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவில் எம்ஜிஆர் காலத்திலிருந்து பயணித்த செங்கோட்டையன், பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பல மூத்த சீனியர் நிர்வாகிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததோடு சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகவும் சட்டமன்றத் தேர்தலில் தோல்விக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி ஏற்றுக்கொண்டார், இலைமறை காயாக இருந்த மோதல் வெடித்ததை அடுத்து பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

சீனியர்கள் டம்மி

சீனியர்கள் டம்மி

அதன் பிறகு எடப்பாடி எடுத்தது எல்லாமே பிரம்மாஸ்திரங்கள் தான் அதிமுகவில் ஜூனியர்களுக்கு குறிப்பிடத்தக்க பதவிகளை வழங்கினார். அந்த வகையில் சிவி சண்முகம் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையில் அடுத்ததாக அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மதுரையில் செல்லு ராஜு, ராஜன் செல்லப்பா என பலர் கோலோச்சி வந்த நிலையில் அவர்களை விட இளையவரான ஆர்பி உதயகுமார் கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சர் பதவியைப் பெற்றதோடு தற்போது எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஜூனியர்களுக்கு பதவி

ஜூனியர்களுக்கு பதவி

தமிழகம் முழுவதும் அறியப்பட்ட நபராகவும் ஆர்பி உதயகுமார் மாறி இருக்கிறார். செல்லூர் ராஜு அனைவருக்கும் தெரிந்த முகம் தான் என்றாலும் கட்சியை பொறுத்தவரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமாரை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதால் அவருக்கு கீழே செயல்பட வேண்டிய நிலை செல்லூர் ராஜூவுக்கு உள்ளது. கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை செங்கோட்டையன் உள்ளிட்ட பல சீனியர்கள் இருந்தாலும் தங்கமணி வேலுமணியின் கட்டுப்பாட்டில் தான் அதிமுக உள்ளது. கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தங்கமணி வேலுமணி எடுக்கும் முடிவுகள் தான் எடப்பாடி எடுக்கும் முடிவு என்ற ரீதியில் உள்ளது.

முக்கியத்துவ பதவிகள்

முக்கியத்துவ பதவிகள்

திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை எம்ஜிஆர் காலத்திலிருந்து மிக மூத்த சீனியர்களில் ஒருவர் திண்டுக்கல் சீனிவாசன். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் அதிமுக பொருளாளராகவும் இருந்தவர் பின்னர் ஓரம் கட்டப்பட்டார். அவரது சிஷ்யரான நத்தம் விஸ்வநாதன் அதிமுகவில் திடீர் விஸ்வரூபம் எடுத்த நிலையில் மீண்டும் அவரும் ஓரங்கட்டப்பட்டார். 2016 சட்டமன்ற தேர்தலில் நத்தம் விஸ்வநாதன் தோல்வியடைய திண்டுக்கல் சீனிவாசன் வெற்றி பெற்று அமைச்சராக்கப்பட்டார். பின்னர் எடப்பாடி தீவிர ஆதரவாளராகவும் அவர் அறியப்பட்ட நிலையில் தற்போது கட்சி ரீதியாக நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் உள்ளார்.

இது தான் திட்டமா?

இது தான் திட்டமா?

அதிமுக துணை பொது செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு இருக்கும் அவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்தாலும் தமிழக அளவில் அதிமுகவின் இரு துணைப் பொதுச் செயலாளர் ஒருவர் என்பதால் அவருக்கு அடுத்த இடத்திலேயே திண்டுக்கல் சீனிவாசன் இருக்கிறார். இது மட்டுமல்லாமல் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிகாரமிக்க நபர்களாக வலம் வந்த ஜெயக்குமார், பொன்னையன், உள்ளிட்ட பலரும் தற்போது மாவட்ட அளவிலான பதவிகளிலேயே நீடிக்கின்றனர் . இதனால் தனக்கு இணையாக இருந்த பல சீனியர்களை எடப்பாடி பழனிச்சாமி ஓரங்கட்டி விட்டு ஜூனியராக இருக்கும் நபர்களுக்கு முக்கிய பதவிகள் அளித்து தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+