வாக்காளர் அட்டை இல்லையா.. அடுத்த மாதம் அப்ளை பண்ணுங்க! 4 நாள் சிறப்பு முகாம்! திருத்தமும் செய்யலாம்
சென்னை: நாளை ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடும் தேர்தல் ஆணையம், அடுத்த மாதம் 4 நாட்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவித்து உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், "இந்தியத் தேர்தல் ஆணையம் 01.01.2024-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2024-ஐ அறிவித்து உள்ளது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. சத்ய பிரத சாஹூ, இ.ஆ.ப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டத்தை 25.10.2023 அன்று நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது படிவங்களின் தீர்வு மேற்கொள்ளுதல் மற்றும் அதன் அட்டவணை குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2024 க்கான கீழ்க்கண்ட கால அட்டவணையை அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் - 27.10.2023 (வெள்ளிக்கிழமை)
கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம் - 27.10.2023(வெள்ளிக்கிழமை) முதல் 09.12.2023 (சனிக்கிழமை) வரை
சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள் - 04.11.2023 (சனிக்கிழமை), 05.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 18.11.2023 (சனிக்கிழமை), 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை)
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் - 05.01.2024 (வெள்ளிக்கிழமை)

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வாக்குச் சாவடி நிலை முகவர்களை (BLA) நியமிக்கலாம். அம்முகவர்கள் சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2024 மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு திருத்தங்கள் மற்றும் பிறவற்றை அடையாளம் காண உதவி செய்யலாம். வாக்குச் சாவடி நிலை முகவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பற்றி வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் நிர்ணயிக்கப்பட்ட படிவங்களில் தகவல் வழங்கலாம்.
சிறப்பு சுருக்க முறை திருத்தம். 2024-ன் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அட்டவணை தொடர்பாக விளக்கக் காட்சி (Power Point) அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு, கூட்டத்தின் போது காண்பிக்கப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை மற்றும் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டன." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்! -
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் காரை ‘சுத்து’ போட்ட தேர்தல் பறக்கும் படையினர்.. மதுரை அருகே பரபர -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications