பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம்.. அதிமுகவை பின்னுக்கு தள்ள முயற்சி.. திருமாவளவன் குற்றச்சாட்டு!
அதிமுகவை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக பாஜக வர முயற்சிப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக விவகாரத்தில் பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக முடிவு எடுத்ததாக தெரியவில்லை என்று கூறியுள்ள திருமாவளவன், அதிமுகவை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக வர பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே அதிமுகவின் உட்கட்சி மோதல் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இதனிடையே ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக இரு தரப்பும் பாஜகவின் ஆதரவை கோரிய நிலையில், தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க கால தாமதம் செய்து வருகிறது. இதனிடையே பாஜக நிலைப்பாடு எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்விக்கு, அதிமுக இன்னும் 2 நாட்கள் காத்திருக்கட்டும் என்று நாராயணன் திருப்பதி பதில் அளித்திருந்தார்.

வேட்பாளர் அறிவிப்பு
ஆனால் அடுத்த நாளிலேயே அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் பாஜகவின் நிலைப்பாட்டிற்காக அதிமுக காத்திருக்கவில்லை என்று பார்க்கப்பட்டது. இதனிடையே இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் ஆணையம் பதில்
அதில் ஓபிஎஸ் மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையிலுள்ளதால், கடந்த ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு விதிமாற்றங்களை கருத்தில் கொள்வதில்லை. ஜூலையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு முடிவுகளையும் அங்கீகரிக்கவில்லை என்று கூறியுள்ளது.

இபிஎஸ்-க்கு பின்னடைவு
இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இரட்டை இலை சின்னமும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு புதிய சின்னத்தில் போட்டியிடவே அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்க உள்ள நிலையில், தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைக்க இபிஎஸ் தரப்பு தயாராகி வருகிறது.

திருமாவளவன் கருத்து
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் பதில் மனு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், அதிமுக விவகாரத்தில் பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக முடிவு எடுத்ததாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக வர பாஜக முயற்சிப்பதாக விமர்சித்துள்ளார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications