அப்பறம் 2 தொகுதிய விட்டு தர்றது.. கூட்டணி ’தலை’யில் விழுந்த இடி! ஸ்டாலின் கையில் வேற லெவல் ப்ளான்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை இப்போது இருக்கும் கூட்டணியை விட மேலும் சில கட்சிகளை சேர்த்து சந்தித்தால் வெற்றி உறுதி என நினைக்கிறது திமுக தலைமை. இதை அடுத்து கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் கட்சிகளிடம் சில தொகுதிகளை விட்டுக் கொடுக்குமாறு வெளிப்படையாகவே திமுக கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் கடும் கலக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. இந்த முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இதனால் 2026 தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த சூழலில், ஆளும் கட்சியான திமுக வழக்கம்போல பெரிய கூட்டணி உடன் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது.

திமுக கூட்டணி
தற்போது கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளன. மேலும் பல சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களும் கூட்டணியுடன் இணைந்துள்ளனர். அதோடு, தேசிய முன்னேற்றத் திராவிட கழகம் கூட்டணியில் சேர்ந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைப் கிளப்பியது.
தொகுதி பங்கீடு
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக, முதற்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொடங்கியது. அந்த பேச்சுவார்த்தையில், கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்கத் திட்டமிட்டுள்ளதாக திமுக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகள் குறையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. 2021 தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்த முறை 5 தொகுதிகள் கேட்டதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் அரசியல் திட்டம்
ஆனால் திமுக தரப்பு 2 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்ததாக கட்சி தலைவர் காதர் மொகிதீன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், கூட்டணியின் நலனை கருத்தில் கொண்டு இந்த நிலையை அவர்கள் எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக கூட்டணியில் இணைந்திருப்பதால், அதன் பங்கீடு மற்ற கட்சிகளின் இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கூட்டணி கட்சிகளுக்கும் இடங்கள் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கூடுதல் கட்சிகள்
கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் கூடுதல் இடங்களை எதிர்பார்த்து இருந்த நிலையில், திமுக இடங்களை குறைக்கும் திட்டத்தில் இருப்பது சில கட்சிகளில் கவலையை உருவாக்கியுள்ளது. இருப்பினும், மேலும் பல கட்சிகளை இணைத்து கூட்டணி பலத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியல்
இந்த தேர்தலில் கூட்டணி பேச்சுகள் மற்றும் தொகுதி பங்கீடு முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், திமுக எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு இறுதி ஒதுக்கீடு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலை முன்னிட்டு கூட்டணிக்குள் நடைபெறும் இந்த மாற்றங்கள், தமிழக அரசியல் நிலவரத்தை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றன. அதே நேரத்தில் திமுகவின் இந்த திட்டத்தால் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் கலக்கத்தில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications