Election Exclusive: நேத்து வந்த தேமுதிகவுக்கே.. அறிவாலயத்தில் வார்த்தை விட்ட மதிமுக! கட் அண்ட் ரைட்டாக பேசிய திமுக! பரபர
சென்னை: அமைதியான நதியினிலே சென்று கொண்டிருந்த ஓடம் போல எந்தவித சிக்கலும் இன்றி பயணித்த திமுக கூட்டணியில் அதிருப்தி குறல்கள் எழத் தொடங்கியுள்ளன. திடீரென கூட்டணியில் சேர்ந்த தேமுதிகவுக்கு ஆறு சட்டமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் விசிக உள்ளிட்ட கட்சிகள் கோபத்தில் இருக்கின்றன. குறிப்பாக கடந்து முறை ராஜ்யசபா சீட்டு கேட்டுப்பெற்ற மாதிமுக இந்த முறை ஆறு தொகுதிகளுக்கும் கூடுதலாக ஒரு தொகுதி ராஜ்ய சபா சீட்டு ஒதுக்க வேண்டும் என திமுகவை நெருக்கி வருவதாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரமாக்கி வருகின்றன. இந்த முறை நான்கு கட்சிகள் இடையே நேரடி போட்டி உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் அறிக்கை தயார் செய்தல் போன்ற பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே திமுக, கனிமொழி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து தேர்தல் அறிக்கை தயாரிப்பை தொடங்கியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல்
வழக்கம்போல இந்த தேர்தலிலும் மிகப்பெரிய கூட்டணி பலத்துடன் திமுக தேர்தலை சந்திக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன. மேலும் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களும் உடன் இருக்கின்றனர். மேலும் கூடுதலாக இதுவரை திமுக கூட்டணியில் சேராத பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிக இணைந்துள்ளது.
திமுக கூட்டணி
இந்த நிலையில் பிரேமலதா வரவால் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டு, காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் மற்றும் பிற கூட்டணி கட்சிகளுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த தேர்தலில் திமுக 133 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. அதே போன்ற கணக்கை 2026 தேர்தலிலும் தொடர விரும்புகிறது திமுக.
தொகுதி பங்கீடு
ஆனால், இந்த முறை தேமுதிக மட்டுமல்லாமல், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகள் கூட்டணியில் இடம் பெறும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், ஓபிஎஸ்ஸூம் வரலாம் என தகவல்கள் உலாவுகின்றன. இதனால், திமுக தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை 174-இல் இருந்து 170 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு பகிர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
யாருக்கு எத்தனை சீட்?
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, திமுக 170 தொகுதிகளில் போட்டியிடலாம் என்றும், காங்கிரஸுக்கு 25, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா 6, மக்கள் நீதி மய்யம் 3, தேமுதிக 6 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம், ஓபிஎஸ் 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், கடைசி நேரத்தில் இணையும் கட்சிகளுக்காக 2 அல்லது 3 தொகுதிகளை திமுக ஒதுக்கி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணி அதிருப்தி
இதில் தான் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதலாக தேமுதிக, கமலஹாசன் ஆகியோர் வந்திருப்பதால் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவு தொகுதிகளை கொடுத்தாலும் ஏற்கனவே கூட்டணியில் இருந்த மதிமுக,விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தொகுதிகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், சில கட்சிகள் கோபக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
மதிமுக வைகோ
குறிப்பாக வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் திமுக கூட்டணியில் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் கடந்த முறை வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு ஒதுக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் நடந்த எம்பி தேர்தலில் வைகோவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்படலாம் என்ற தகவலால் அதிருப்தியில் உள்ளது மதிமுக.
ராஜ்சபா எம்பி சீட்
இந்த நிலையில் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மதிமுக குழுவினர் 10 சட்டமன்ற தொகுதிகள் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன் வந்திருக்கும் நிலையில் குறைந்தது 7 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் வைகோவுக்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவி தர வேண்டும் என மதிமுக வலியுறுத்திய நிலையில் திமுக சம்மதிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இருந்து அதிருப்தியோடு வெளியேறி இருக்கின்றனர் மதிமுக தலைகள்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications