திமுகவுக்கு தாவிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.. எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே ஷாக்!
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாதேஸ்வரன், இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ திமுகவில் இணைந்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. இதற்கிடையே, மாற்றுக் கட்சிகளில் இருந்து கட்சி தாவும் நிகழ்வுகளும் அதிகமாக நடந்து வருகின்றன. அந்தவகையில், ஆளும் திமுகவுக்கு அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் தாவி வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் அதிமுகவிலிருந்து விலகி முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சேலம் ஆத்தூர் தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக மாவட்ட செயலாளர் சிவலிங்கம் எம்.பி முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாதேஸ்வரன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த மாதேஸ்வரன், 2011 முதல் 2016 வரை ஆத்தூர் தொகுதி சட்டசபை உறுப்பினராகச் செயல்பட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்து அக்கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்த அவர், தற்போது அந்தக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ மாதேஸ்வரனுடன் அவரது ஆதரவாளர்களும் தங்களை இன்று திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். இது சேலம் மாவட்ட அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாதேஸ்வரன் கட்சி மாறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம்











Click it and Unblock the Notifications