நான் கிரிக்கெட் வீரர்! பவுலர்களை பார்த்து பயந்தால் வேலைக்கு ஆகுமா! அமமுக வேட்பாளர் சிவபிரசாத் பளிச்!
ஈரோடு கிழக்குத் தொகுதி அமமுக வேட்பாளர் சிவபிரசாத் ஒரு கிரிக்கெட் வீரர்.
சென்னை: தாம் ஒரு கிரிக்கெட் வீரர் என்றும் எவ்வளவு பெரிய பவுலர்களாக இருந்தாலும் தன்னால் அவர்களை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் கூறியிருக்கிறார் ஈரோடு கிழக்கு அமமுக வேட்பாளர் சிவபிரசாத்.
29 வயது இளைஞரான அமமுக வேட்பாளர் சிவபிரசாத் ஈரோடு என்ற பெயரில் மட்டும் தான் ரோடு இருக்கிறதே தவிர ஊரில் ரோடு இல்லை என பஞ்ச் டயலாக்கு எல்லாம் பேசி தெறிக்க விடுகிறார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் எண்ணற்ற தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருப்பதாகவும் அவற்றை எல்லம் மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்குக் கேட்பேன் எனவும் நம்பிக்கை பொங்க கூறுகிறார் சிவ பிரசாத்.

ஈரோடு கிழக்கு
29 வயது இளைஞரான சிவபிரசாத் என்பவரை ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட வைத்து தமிழக அரசியல் களத்தின் கவனம் ஈர்த்திருக்கிறார் டிடிவி தினகரன். இதனிடையே சென்னையில் டிடிவி தினகரனுடன் ஒன்றாக அமர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிவபிரசாத், தாம் ஒரு கிரிக்கெட் ப்ளேயர் என்றும் கிரிக்கெட்டில் எப்படி பவுலர்களை பார்த்து பயமில்லாமல் களமாடுவேனோ அதே போல் தேர்தலையும் துணிச்சலுடன் எதிர்கொள்வேன் என்றார்.

என்ன பெரிய வேட்பாளர்?
தன் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை வைத்தே சீட் வாங்கியிருப்பதாக கூறிய சிவபிரசாத், ஈரோடு என்ற பெயரில் மட்டும் தான் ரோடு இருக்கிறதே தவிர ஊரில் ரோடு இல்லை என பஞ்ச் டயலாக்கு எல்லாம் பேசினார். இதனிடையே உங்களை எதிர்த்து பெரிய வேட்பாளர்கள் நிற்கிறார்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, குறுக்கிட்ட டிடிவி தினகரன், பெரிய வேட்பாளர்னு சொல்றீங்களே எவ்வளவு வெயிட் ஹையிட் என கலாய்த்தார்.

பேச்சு போது
ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒன்றும் தோற்கடிக்க முடியாத வேட்பாளர் கிடையாது என்றும் தேனியில் அவர் போட்டியிட்டு தோற்றுப்போனாரே எனவும் சுட்டிக்காட்டினார். மேலும், ஈவிகேஎஸ் இளங்கோவனை தோற்கடிக்கு அவரது பேச்சு ஒன்றே போதும் என்றும் வேறு யாரும் தேவையில்லை எனவும் தெரிவித்தார். இளங்கோவனின் முந்தைய பேச்சுகள், பேட்டிகள் எல்லாம் இப்போது வலம் வரத் தொடங்கியுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

களம் முக்கியம்
வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் களம் முக்கியம் என்பதை உணர்ந்து களத்தில் வேட்பாளரை இறக்கிவிட்டுள்ளார் டிடிவி தினகரன். அதுவும் ஜெயலலிதா பாணியில் வித்தியாசமான முறையில் வேட்பாளர் தேர்வை நடத்தி திமுக, அதிமுகவை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications