ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவன், மகன் சஞ்சய் சம்பத்- யார் காங். வேட்பாளர்?
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அல்லது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடக் கூடும் என கூறப்படுகிறது. மேலும் மறைந்த திருமகன் ஈவெராவின் மனைவி பூர்ணிமாவை காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா. அத்தேர்தலில் திருமகன் ஈவெரா, 67,300 வாக்குகள் பெற்றார். தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியின் யுவராஜாவைவிட 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் திருமகன் ஈவெரா.

இந்நிலையில் திருமகன் ஈவெரா திடீரென உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பிப்ரவரி 27-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஈரோடு(கிழக்கு) சட்டமன்றத் தேர்தல் 2021
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசியலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில், அதிமுகவே போட்டியிடும் என தமாகா தலைவர் ஜிகே வாசன் அறிவித்துள்ளார். ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டதால் அத்தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே திமுக ஒதுக்கி உள்ளது. அதேபோல் ஏற்கனவே போட்டியிட்ட தமாகா இத்தொகுதியில் போட்டியிட விரும்பியது. ஆனால் சென்னையில் ஜிகே வாசனை அதிமுக தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். இதனைத் தொடர்ந்து இன்று ஜிகே வாசன் வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகதான் போட்டியிடும் என அறிவித்தார். இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக இன்று முடிவு ஒன்றை அறிவிக்க உள்ளது.

தற்போதைய நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக- காங்கிரஸ் இடையே போட்டி உறுதியாகி உள்ளது. அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கம் வேட்பாளராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி வேபாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அவரது மற்றொரு மகன் சஞ்சய் சம்பத், மறைந்த திருமகன் ஈவெராவின் மனைவி பூர்ணிமா ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அனுதாப ஓட்டுகள் கிடைக்கும் என்பதால் காங்கிரஸ் வெல்லும் என்பதும் எதிர்பார்ப்பு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications