இவ்வளவு மாற்றங்களை செய்தும்.. அங்கே மட்டும் கை வைக்காத ஸ்டாலின்! அப்படியே நெகிழ்ந்து போன அமைச்சர்கள்
சென்னை: முதல்வர் ஸ்டாலினையும் சேர்த்து இன்று 11 அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இவ்வளவு மாற்றங்களை செய்தும் கூட அமைச்சரவையில் முக்கியமான மாற்றம் ஒன்றை செய்யவில்லை.
ஒன்றரை வருடத்திற்கு பின் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனது மட்டுமின்றி மட்டுமின்றி பல சீனியர் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டு உள்ளன. மூத்த அமைச்சர்கள் சிலருக்கு கூடுதலாக இலாக்காக்கள் கொடுக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 19 மாதங்கள் ஆகிறது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இன்று தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். இன்று இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் இன்று அளிக்கப்படுகிறது. இதோடு பல இலாக்கா மாற்றங்கள் நடந்துள்ளன.

அமைச்சரவை மாற்றம்
மொத்தம் முதல்வர் ஸ்டாலினையும் சேர்த்து இன்று 11 அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலினின் சிறப்பு செயல்திட்ட செயலாக்க துறை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின் போக.. 10 அமைச்சர்களுக்கு இலாக்கா மாற்றப்பட்டு உள்ளது. ஐ பெரியசாமி, ராஜகண்ணப்பன், முத்துசாமி, பெரியகருப்பன், சேகர் பாபு, ராமசந்திரன், காந்தி, பிடிஆர், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றப்பட்டு உள்ளன.

முதல்வர் ஸ்டாலின்
கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யானாதன், சுற்றுசூழல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு அமலாக்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பெரியகருப்பன்
அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் சேகர் பாபுவிடம் கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மாற்றம்
அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் ஆர். காந்திக்கு கைத்தறி, ஜவுளித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னதாக பல்வேறு அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படலாம் என்று தகவல்கள் வந்தன. அமைச்சர்கள் 2-3 பேரின் பதவிகள் மொத்தமாக பறிக்கப்படலாம். சில புதிய அமைச்சர்கள் உள்ளே வரலாம் என்றெல்லாம் செய்திகள் பரவின.

இரண்டு விதமான ரிப்போர்ட்கள்
இப்படி அமைச்சரவையை மாற்ற இரண்டு விதமான ரிப்போர்ட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு ரிப்போர்ட் அமைச்சர்கள் தங்கள் துறையை பற்றி கொடுக்கும் ரிப்போர்ட். தங்களுக்கு கீழ் உள்ள இலக்காக்களில் அமைச்சர்கள் எடுக்கும் முடிவுகள், செயல்பாடுகள் பற்றி அமைச்சர்களே கொடுக்கும் ரிப்போர்ட். இதை அவ்வப்போது அமைச்சர்கள் கொடுப்பார்கள். இரண்டாவது ரிப்போர்ட் அமைச்சர்கள் பற்றி உளவுத்துறை கொடுக்கும் மாதாந்திர ரிப்போர்ட். அமைச்சர்களின் செயல்பாடு பற்றி உளவுத்துறை கொடுக்கும் மார்க். இதை எல்லாம் அடிப்படையாக வைத்து, அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

11 அமைச்சர்கள்
முதல்வர் ஸ்டாலினையும் சேர்த்து இன்று 11 அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இவ்வளவு மாற்றங்களை செய்தும் கூட அமைச்சரவையில் முக்கியமான மாற்றம் ஒன்றை செய்யவில்லை. அதாவது ஒரு அமைச்சரை கூட முதல்வர் ஸ்டாலின் நீக்கவில்லை. சில மூத்த அமைச்சர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியில் இருந்தார். 2-3 அமைச்சர்களின் தனிப்பட்ட செயல்பாடுகள் மீது முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் கூட எந்த அமைச்சரையும் முதல்வர் ஸ்டாலின் நீக்கவில்லை. இதனால் எங்கே பதவி போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த அமைச்சர்கள் அசுவாசம் அடைந்துள்ளனர்.
-
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications