விபச்சாரத்தில் சிக்கிய நடிகை.. ஸ்கெட்ச் போட்டு மாறுவேடத்தில் ஓட்டலுக்குள் போலீஸ்.. நடந்தது என்ன?
சென்னை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பணகுடி போலீசார் அந்த விடுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்..
அப்போது கேரளா மற்றும் கரூர் பகுதிகளைச் சேர்ந்த 2 இளம்பெண்கள் அங்கு சிக்கிவிட்டார்கள். ஆனால், போலீசார் வருவதை அறிந்ததும் அங்கிருந்த 2 இளைஞர்கள் எகிறி தப்பியோடிவிட்டனர்..

இதையடுத்து, அந்த 2 இளம்பெண்களையும் போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பணகுடி அண்ணாநகரைச் சேர்ந்த விவேக் ஆனந்த் (44) என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய 2 இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்..
மும்பை ஓட்டலில் போலீஸ்
இதேபோல மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலும் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் கும்பல் குறித்த புகார் போலீசாருக்குக் கிடைத்தது. இதில் ஹிந்தி சீரியல்கள், வெப் தொடர்கள் மற்றும் போட்டோஷூட்களில் சான்ஸ் தேடும் பெண்களைக் குறிவைத்து ஒரு கும்பல் செயல்படுவதாக கூறப்பட்டது.
இந்த விஷயத்தில் எக்ஸோடஸ் ரோடு இந்தியா ஃபவுண்டேஷன் (Exodus Road India Foundation) என்ற தன்னார்வ அமைப்பு போலீசாருக்கு உதவியுள்ளது. அந்த அமைப்பு கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காஷிமீரா போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.. சம்பந்தப்பட்டவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால் எல்லாமே கைநழுவிப் போய்விடும் என்பதால், போலீசார் சாதாரண கஸ்டமர்கள் போலவே ஓட்டலுக்குள் செல்ல முடிவு செய்தனர்..
கடந்த அக்டோபர் 8-ம் தேதி மாலை சுமார் 6 மணிக்கு, மிரா-பயந்தர் சாலையில் உள்ள நைவெத்யா லாட்ஜிங் அண்ட் போர்டிங் ஓட்டலுக்கு போலீசார் சென்றனர். முதலில் கஸ்டமர்கள் போல சென்று அங்கே என்ன நடக்கிறது என்பதை கண்காணித்தனர்.. அதில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.. அதற்குள் மற்ற போலீசாரும் அங்கு விரைந்ததையடுத்து, உடனடியாக சோதனை ஆரம்பமானது.
பிரபல இந்தி டிவி சீரியல் நடிகை
அப்போதுதான், பிரபல இந்தி டிவி சீரியல்களில் நடிக்கும் 35 வயது நடிகை ஒருவர் அங்கிருப்பதை கண்டு அதிர்ந்தனர்.. அத்துடன், அந்த நடிகையை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக பணம் பெற்றதாக சொல்லப்படும் பெண்ணும் போலீசாரிடம் வசமாக சிக்கினார்..
அந்த பெண்ணின் பெயர் தபசும் என்ற சோனியா உமர் குரேஷி... 39 வயதாகிறதாம்.. சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தை சேர்ந்த இவர், மும்பையின் ஜோகேஸ்வரி பகுதியில் வசித்து வருவதாக தெரிகிறது.. |
தபசும், ரமேஷ் குமார் என்ற ஆண் நண்பர்களுடன் சேர்ந்து வாட்ஸ்அப் மூலம் பெண்களின் போட்டோக்களை கஸ்டமர்களுக்கு அனுப்பி, பணத்துக்கு அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.. அப்படித்தான் நடிகையையும் இந்த விவகாரத்தில் சிக்க வைத்துள்ளது அம்பலமானது.. இந்த விவகாரத்தில் பணம் உள்ளிட்ட ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்..
நடிகையை மீட்ட போலீஸ்
இதனிடையே, விபச்சாரத்திலிருந்து மீட்கப்பட்ட நடிகையை, மும்பையின் காந்திவலியில் உள்ள ரெஸ்க்யூ ஃபவுண்டேஷனில் பாதுகாப்பாகத் தங்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இந்த வழக்கில் தபசும் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 143-வது பிரிவு மற்றும் ஒழுக்கக்கேடான வர்த்தகத் தடுப்புச் சட்டத்தின் 4, 5-வது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவாக இருக்கும் ரமேஷ் குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.. இந்த விவகாரத்தில் இன்னும் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதைக் கண்டறியவும் விசாரணை நடந்து வருகிறது..!!


Click it and Unblock the Notifications
