• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அரசல் புரசல்".. கேட்க கூடாததெல்லாம் கேட்டாரு.. சந்தோஷமே போயிடுச்சு.. பிரபல பாடகி விஜயலட்சுமி கண்ணீர்

Google Oneindia Tamil News

சென்னை: பிரபல பின்னணி பாடகி விஜயலட்சுமி, தன் கணவர் செய்த கொடுமைகள் குறித்து மனம்விட்டு பேசியுள்ளார்.. அத்துடன் உருக்கமான சில தகவல்களையும் கூறி ரசிகர்களை கலங்க செய்துள்ளார்.

மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளிவந்த செல்லுலாய்டு என்ற படத்தில் பாடியதன் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் வைக்கம் விஜயலட்சுமி.

விஜயலட்சுமிக்கு பார்வையை பறித்த கடவுள் குயிலை போல குரலை தந்துள்ளார்.. எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜாவின் பாடல்கள்தான் விஜயலட்சுமியின் குரல் வளத்துக்கு மேலும் தீனி போட்டு வளர்த்தன.

 400 மேடைகள்

400 மேடைகள்

விஜயலட்சுமியின் மானசீக குரு கேஜே ஜேசுதாஸ் ஆவார்.. 6வது வயதிலேயே விஜயலட்சுமி தன்னுடைய குருநாதர் ஜேசுதாஸை சந்தித்தார்... சிறு வயதிலேயே தேர்ந்த பாடகர்கள் பாடுவதற்கும் கடினமான தோடி, பைரவி போன்ற அதிசய ராகங்களில் விஜயலட்சுமிக்கு இருந்த ஞானத்தைக் கண்டு ஜேசுதாஸ் அப்போதே வியப்படைந்தாராம்.. சினிமாவுக்குள் நுழைவதற்கு முன், சென்னையில் மட்டும் 400 சபாக்களில் விஜயலட்சுமி பாடியுள்ளார் என்பது பலரும் அறியாத உண்மை..

கண்டிஷன்கள்

கண்டிஷன்கள்

விஜயலட்சுமிக்கு கடந்த 2016ல் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.. ஆனால், அந்த மணமகன் ஏராளமான கண்டிஷன்களை போட்டாராம்.. இதனால் பயந்துபோன விஜயலட்சுமி, அந்த கல்யாணமே வேண்டாம் என்று நிறுத்திவிட்டாராம்.. இதற்கு பிறக, கடந்த 2018ல் அனூப் என்பவருடன் திருமணம் நடந்தது.. இவர் ஒரு இன்டீரியர் டெகரேடரும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டும் ஆவார்.. விஜயலட்சுமியின் திருமணத்தில், பிரபல பின்னணி பாடகர் கேஜே யேசுதாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

 அரசல் புரசல்

அரசல் புரசல்

மகிழ்ச்சியுடன் திருமண வாழ்க்கையை துவக்கினார் விஜயலட்சுமி.. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே தம்பதிக்கு இடையே மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் வந்துவிட்டது.. இதனால், விவாகரத்து செய்துவிடும் அளவிற்கு நிலைமை மாறியது... இவரது விவாகரத்து செய்தி, அரசல் புரசலாக வெளியானதே தவிர, அதற்கான காரணமும் எதுவும் தெரியவில்லை... விஜயலட்சுமியும் அதுகுறித்து எதுவும் பேசவில்லை. இந்த தகவலும் அதற்கு பிறகு அப்படியே அமுங்கிப்போய்விட்டது.

 கண்ணீர் கதை

கண்ணீர் கதை

இந்நிலையில் பிரபல செய்தி டிவி சேனல் நடத்திய "மனிதி வா" என்ற நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி கலந்து கொண்டிருந்தார்... அந்த நிகழ்ச்சியை நடிகை கவுதமி நடத்தி கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் விஜயலட்சுமி, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தார்... அதில் எனக்கு கல்யாணமாகிய பிறகு, வாழ்க்கை மிகவும் கண்ணீர் நிறைந்திருந்ததாகிவிட்டது.. நான் பாடிய பாடல்களை எல்லாம் விமர்சனம் செய்தார் என் கணவர் மேரி அனுப்..

சந்தோஷம்

சந்தோஷம்

எனக்கு பல நிபந்தனைகளை விதித்தார்.. அவர் ஒரு சேடிஸ்ட் போல நடந்து கொண்டார். எப்போதுமே என்னுடைய குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டுவதை முழுநேர பணியாக என் கணவர் வைத்திருந்தார். என்னை மட்டுமே நம்பி இருந்த என் பெற்றோரை என்னிடமிருந்து பிரித்தார். நான் எப்போதுமே பாடல்களுக்கு முன்னுரிமை தருபவள். அதனால் சந்தோஷத்தையும் தொலைத்து விட்டு, பாடல்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நடத்த நான் விரும்பவில்லை.

 பிடுங்கிடணும்

பிடுங்கிடணும்

என்னை என் குடும்பத்தினருடன் இருந்து பிரிக்க முயற்சி செய்தார். வாழ்க்கையில் ஓரளவுக்குத்தான் வலியை தாங்க முடியும். ஒருவருக்கு பல்லில் வலி ஏற்பட்டால் அதனை பொறுத்துக்கொள்ளலாம் ஆனால், அதே வலி அதிகமானால், அந்த பல்லை பிடுங்குவதை தவிர வேறு வழியில்லை. இனி பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க போகிறேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாகவே விஜயலட்சுமியின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம், என்று தமிழ், மலையாள ரசிகர்கள் ஆறுதலும், ஊக்கமும் தந்து கொண்டிருக்கிறார்கள்.

English summary
Famous Play back Singer Vijayalakshmi opes up about her divorce and family issues
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X