பிரபல யூடியூபர் புஷ்பாவுக்கு வந்த சபலம்! புத்தி தடுமாறி கணவரை பிரிந்து.. கடைசியில் இப்படியொரு நிலைமை
சென்னை: நாட்டில் குடும்ப வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவாகியுள்ள வழக்குகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குடும்ப வன்முறைகளால் இளம் வயதினரின் விவாகரத்துகளும் பெருகிவிட்டதாக நீதிமன்றங்களும் கவலை தெரிவித்து வருகின்றன.. குடும்ப வன்முறையை களைய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையிலும், போதுமான பலன் இன்னும் கிட்டவில்லை என்றே சொல்லலாம். இதோ இந்த ஹரியானா கொடுமையை பாருங்கள்.
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தை சேர்ந்தவர் புஷ்பா.. திருமணமான புஷ்பா, கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். பிறகு சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை துவங்கி நடத்த துவங்கினார் புஷ்பா.. இந்த யூடியூப் சேனலில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் நல்ல வருமானத்தையும் ஈட்டி வந்தார்.

பிரபல யூடியூபர்கள்
அப்போதுதான், ஹர்சனா கிராமத்தை சேர்ந்த சந்தீப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சந்தீப்பும் சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் வைத்து நடத்தி வருகிறார். இருவருமே யூடியூப் மூலம் பழக்கமானதால், நாளடைவில் அந்த நட்பு, தகாத உறவில் முடிந்தது.
ஒருகட்டத்தில் சந்தீப்புடனேயே ஒன்றாக சேர்ந்து வாழ முடிவுசெய்தார் புஷ்பா. இதற்காக கணவரை விட்டு பிரிந்து, சந்தீப்புடனேயே சென்றுவிட்டார். இருவரும் யூடியூபர்கள் என்பதால், இருவரும் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்தனர். இதனால் பணம் இருவருக்குமே கொட்ட துவங்கியது.
புஷ்பா எடுத்த முடிவு
இந்நிலையில், கடந்த 5ம் தேதி, சந்தீப் வீட்டிலேயே, புஷ்பா தூக்கில் தொங்கிவிட்டார்.. புஷ்பாவின் சடலத்தை கண்டு சந்தீப் கதறி கதறி அழுதார்.. அதற்குள் இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த போலீஸார், புஷ்பாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு புஷ்பா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற விசாரணை ஆரம்பமானது.
ஆனால் எந்த க்ளூவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.. இதற்கு பிறகுதான், புஷ்பாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அதை பார்த்ததுமே போலீசார் ஆடிப்போனார்கள்.. காரணம், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், புஷ்பாவின் கழுத்து நரம்புகள் நெறிபட்டிருப்பதாக தெரியவந்தது. அதாவது புஷ்பா கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
கள்ளக்காதல் ஜோடி
இதையடுத்து போலீசார் சந்தீப்பிடம் விசாரணையை நடத்தினர்... அப்போதுகூட, புஷ்பா, புஷ்பா என்று சந்தீப் அழுது கொண்டேயிருந்தார். சந்தீப்பின் தாரை தாரையான கண்ணீர்தான் போலீசாருக்கு சந்தேகத்தை தந்தது. இறுதியில் தங்கள் பாணி விசாரணையை நடத்தியதுமே, புஷ்பாவை கொன்றது தான் தான் என்று பொசுக்கென்று உண்மையை சொல்லிவிட்டார் சந்தீப்.
அதாவது கணவரை விட்டு பிரிந்து வந்ததுமே, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு புஷ்பா சந்தீப்பை வற்புறுத்தி வந்தாராம்.. ஆனால், புஷ்பாவை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு வந்துள்ளன.
சம்பவத்தன்றும் இப்படித்தான் காதலர்களுக்குள் சண்டை வந்துள்ளது. இதனால் எரிச்சலும், ஆத்திரமுடைந்த சந்தீப், புஷ்பாவின் கழுத்தை நெரித்தே கொன்றுவிட்டாராம். இவ்வளவையும் போலீசாரிடம் வாக்குமூலமாக தந்ததையடுத்து, சந்தீப்பை போலீசார் தற்போது கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். கூடா நட்பு கேடாய் தானே முடியும்?!!!!
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications