• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ரகசியம்".. திருச்சி சிவா மகன் "சூர்யா"வின் முதல் அசைன்மென்ட் இதுதானாமே.. அப்ப அவ்ளோதானா? சீக்ரெட் மூவ்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவில் இணைந்த திருச்சி சிவாவின் மகன் சூர்யாவுக்கு, முதல் அசைன்மென்ட் தரப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து, சூர்யா பாஜகவில் பிஸியாகிவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன..

திமுகவின் டெல்லி முகம் என்று ஃபேமஸ் ஆனவர் திருச்சி சிவா.. கருணாநிதி காலத்தில் இருந்தே மிக முக்கிய புள்ளியாக கட்சிக்குள் வலம் வருபவர்.. அதேசமயம் திடீர் திடீரென பரபரப்பை அவ்வப்போது ஏற்படுத்தி கொண்டிருப்பவரும்கூட.

இந்நிலையில் இவரது மகன் பாஜகவில் இணைந்தது மிக முக்கிய திருப்பமாக பார்க்கப்பட்டது.. பலருக்கும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

போனால் போகட்டும் போடா! மகனை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத திமுக எம்.பி.திருச்சி சிவா! போனால் போகட்டும் போடா! மகனை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத திமுக எம்.பி.திருச்சி சிவா!

மருமகள்

மருமகள்

அதைவிட முக்கியம், மகனும் மருமகளும், திருச்சி சிவா பற்றி புகார் தந்ததுதான்.. "கொள்கையெல்லாம் மேடையில்தான்... வீட்டில் இல்லை.." என்ற புகார்கள் வெடித்தன.. இதனால் அப்பா - மகன் இடையே சரியான உறவுமுறை இல்லை.. தன் மனைவியுடன் தனியாகத்தான் சூர்யா வசித்துவந்தார்... எனினும் பாஜகவுக்கு இவர் செல்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. உண்மையிலேயே குடும்ப பிரச்சனைதான் காரணமா? அப்படியானால், ஏன் பாஜகவில் சூர்யா சேர வேண்டும் என்று சந்தேகங்கள் எழாமல் இல்லை..

 அன்பில்மகேஷ்

அன்பில்மகேஷ்

திருச்சியை பொறுத்தவரையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் இருவருமே வலுவாக இருப்பதால், திருச்சி சிவா இரண்டாம் கட்ட தலைவராக கருதப்படுவதாக தெரிகிறது.. இதற்கு காரணம், அவர் எப்போதுமே டெல்லி விவகாரத்தை கவனித்து கொள்வதில் முதன்மையாக உள்ளதால், நேரு, அன்பில்மகேஷ் முதன்மைப்படுத்தப்படுவதாக கூறுகிறார்கள். எனவே, வாரிசுகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லை என்பதாலேயே, பாஜக பக்கம் சூர்யா காய் நகர்த்தியதாக தெரிகிறது.

ட்வீட்

ட்வீட்

சூர்யா தங்கள் கட்சிக்கு வந்ததை பாஜகவினர் கொண்டாடி கொண்டிருக்கின்றனர்.. இதற்குதான், தர்மபுரி எம்பி செந்தில்குமார் ட்விட்டரில் "திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜகவிற்கு ஒரு தகவல். உங்கள் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம்" என்று பதிவிட்டு, பாஜகவை மிரள விட்டிருந்தார்.

 அட்ராசிட்டி

அட்ராசிட்டி

இப்போது விஷயம் என்னவென்றால், சூர்யாவுக்கு முதல் அசைன்மென்ட்டை அண்ணாமலை தந்திருக்கிறாராம்.. அது என்னவென்றால், திமுகவில் உள்ள வாரிசு பிரமுகர்களின் அட்ராசிட்டியை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதுதானாம் அது.. இது முதல் அசைன்மென்ட் என்பதால் சூர்யாவும் களமிறங்க ரெடியாகி விட்டாராம்.. இதனால், இத்தனை காலமும் சூர்யாவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் உட்பட பலரும் கதிகலங்கி போயிருப்பதாக கூறப்படுகிறது.

வாரிசுகள்

வாரிசுகள்

அதுவும் இல்லாமல், பாஜகவில் இணைந்தபோது, சூர்யா பேசிய பரபரப்பு பேச்சும் இங்கு நினைவுகூரத்தக்கது.. "கடந்த 15 வருடமாக கட்சிக்காக பணியாற்றியுள்ளேன்... கனிமொழி ஆதரவாளர் என்பதாலேயே நான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறேன்... எனக்கெதிரான என் அப்பாவின் நடவடிக்கைகள் குறித்து தலைமைக்குத் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை" என்று மிகப்பெரிய குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

கனிமொழி

கனிமொழி

இப்போது வாரிசுகளை பற்றின ரகசியங்களை வெளிகொணரும் அசைன்மென்ட்டை சூர்யா கையில் எடுத்திருப்பதாக சொல்லும் நிலையில், இது எந்த அளவுக்கு பாஜகவுக்கு சாதகமான விஷயங்களை பெற்று தரும் என்று தெரியவில்லை.. இதனால் அந்த கட்சிக்கு நேரடி பலன் கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்... எனினும், இந்த முதல் அசைன்மென்ட் குறித்த எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது.. கொள்கையால் ஈர்க்கப்பட்டு, செயல்திறனால் சுண்டியிழுக்கப்பட்டு பாஜகவில் இணைவோர் தமிழகத்தில் மிக மிக குறைவு... அதனால்தான், வடமாநிலங்களை போலவே, மாற்று கட்சிக்காரர்களையும் தன்பக்கம் இழுப்பதில் தமிழக பாஜக ஆர்வம் கொண்ட வருகிறது..

தாமரைகள்

தாமரைகள்

விபி துரைசாமியும், கரு.நாகராஜனும், சூர்யாவின் பாஜக இணைப்பிற்கு பின்னணியில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்து இன்னொரு புள்ளி பாஜக பக்கம் வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.. எம்பி தேர்தலில் 5 தாமரைகளை பெற்றாக வேண்டும் என்று அமித்ஷா சொல்லிவிட்டு போனபிறகு, தமிழக பாஜக படுமும்முரமாகி கொண்டிருக்கிறது.. அடுத்து யாரோ? பார்ப்போம்..!

வாரிசு அரசியல்

வாரிசு அரசியல்

இதில் இன்னொன்றும் சொல்லப்பட்டு வருகிறது.. திடீர் கட்சி தாவலால், சிவாவின் மகனின் செயல்பாடுகளை திமுக தரப்பில், கடுமையாக விமர்சிக்க முடியாத நிலைமையும் உள்ளதாம்.. திமுகவை பகிரங்கமாக சூர்யா குற்றஞ்சாட்டிய போதும், திமுக அதை கண்டுகொள்ளாமல் உள்ளதே உதாரணமாக உள்ளது.. அதேசமயம், கட்சிக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் பெயரை கெடுக்கும் வகையில், தவறான, உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பினால், அதை எதிர்கொள்ளவும், தக்க பதிலடி தரவும் திமுக தயாராக வருகிறதாம்..

English summary
first assignment of trichy sivas son surya and whats tn bjp leader annamalais next plan திருச்சி சிவா மகன் சூர்யாவுக்கு முதல் அசைன்மென்ட் தரப்பட்டுள்ளதாம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X