'வசூல்ராஜா ஓபிஎஸ்' உலக கோடீஸ்வரர் பட்டியலில் அவர் இருக்கிறார்! போட்டு தாக்கிய ஜெயக்குமார்! உண்மையா?
சென்னை : வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் போல வசூல்ராஜா ஓபிஎஸ் எனவும், உலக கோடீஸ்வரர் வரிசையில் இருப்பது போல ஓ.பன்னீர்செல்வம் பணம் வைத்திருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளருமான ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சமீப காலமாக ஓபிஎஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் நேற்று மதுரை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், திருமங்கலம் தொகுதி அதிமுக நிர்வாகிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் அருகே உள்ள ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டிற்கு வந்து அவருக்கு மாலை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

அமைச்சர்கள் ராஜினாமா
அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம்," அதிமுக தலைமை கழகம் எடப்பாடி பழனிச்சாமியின் அப்பா விட்டு சொத்தா? என் வீட்டில் நான் திருடுவேனா? தலைமை கழகம் எனது வீடு, பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போது 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம் என அறிவுறுத்தினேன். ராஜினாமா செய்துவிட்டு தொகுதியில் கட்சி வேலை பார்க்க வலியுறுத்தினேன், நான் பேச ஆரம்பித்தால் அவ்வளவு விஷயம் இருக்கிறது என பேசினார்.

வடிகட்டிய பொய்
இந்நிலையில் ஓபிஎஸ் சொல்வதெல்லாம் வடிகட்டிய பொய் எனவும், உலக கோடீஸ்வரர் வரிசையில் இருப்பது போல ஓ.பன்னீர்செல்வம் பணம் வைத்திருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளருமான ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," ஓ.பன்னீர்செல்வம் வகித்த அனைத்து பதவிகளுமே பணம் அதிகமாக புழக்கம் இருக்கும் பதவிகள் எனவும் வீட்டுவசதி, கருவூலம், நிதி என அனைத்து துறைகளுமே கேட்டு வாங்கிக் கொண்டவர் தான் ஓபிஎஸ்.

ஜெயக்குமார்
உலக கோடீஸ்வரர் வரிசையில் இருப்பது போல ஓ.பன்னீர்செல்வம் பணம் வைத்திருக்கிறார். வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் போல வசூல்ராஜா ஓபிஎஸ். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நான் உட்பட 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம் என பேசியதாக ஓ.பன்னீர்செல்வம் கூறுவது கடைந்தெடுத்த பொய். ஒருவேளை அப்படி சொல்லி இருந்தால் நான் தான் முதல் ஆளாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பேன்.

அதிமுக அலுவலகம்
அதிமுக அலுவலகம் தன் வீடு போல எனக் கூறும் ஓபிஎஸ் பொதுக்குழு நடைபெறும் நேரத்தில் அங்கு சென்றது ஏன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயிருக்கிறது. காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரை குறித்து முழுமையான அறிக்கை வெளிவந்த பிறகு என்னுடைய கருத்துக்களை தெரிவிக்கிறேன்" என மிகக் கடுமையாக விமர்சித்தார்.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications