சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினிடம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பரிந்துரைத்த ஐந்து முக்கிய விஷயங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் அற்ற ஊரடங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இது தொடர்பாக முதல்வர ஆலோசனை நடத்தினார். அப்போது எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஐந்து முககிய விஷயங்களை பரிந்துரைத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி குழு கூட்டம் இன்று காலை நடந்தது. முதலில் மருத்துவக்குழுவினரை சந்தித்து ஊரங்கு தொடர்பாக ஆலோசனை நடத்திய ஸ்டாலின், பின்னர் அனைத்து கட்சி சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களிடம் கலந்து பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்ர் விஜயபாஸ்கர், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், ஜிகே மணி, வேல்முருகன் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஐந்து முக்கிய பரிந்துரைகளை செய்திருக்கிறார். இது தொடர்பாக கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த விஜய பாஸ்கர், அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவரித்தார்.

அத்தியாவசிய பொருட்கள்

அத்தியாவசிய பொருட்கள்

அப்போது அவர் கூறுகையில், ஊரடங்கு என்பது கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு செய்தது போல் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். அப்படி செய்தால் கொரோனா பரவலின் சங்கிலி தொடர்பை நாம் அறுத்தெறிய முடியும். அதேநேரம் முழு ஊரடங்கை அமல்படுத்தும் அதே வேளையில் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டது போல் நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி, டவுன் பஞ்சாயத்துகள் சார்பில குறைந்த விலையில் காய்கறிகள், மளிகை, பால் போன்ற பொருட்களை வழங்கினோம். அதுபோல் ஊரடங்கை அமல்படுத்தலாம என்று வலியுறுத்தினோம்,

ஆரம்ப நிலை அவசியம்

ஆரம்ப நிலை அவசியம்

ஆக்சிஜன் தேவையுடன் கடைசி நேரத்தில் மக்கள் 40 , 50 சதவீத நுரையீரல் பாதிப்புடன் மருத்துவமனைக்கு வரும் நிலை இருக்கிறது. இதை ஆரம்ப நிலையிலேயே நாம் கண்டறிய வேண்டும். ஒருவருடம் ஏற்பட்ட நோய் தொற்று இன்னொருவருக்கு பரவக்கூடாது. கண்டிப்பாக இது முககியம்.இதற்கு அதிமுக அரசு செய்தது போல், காய்ச்சல் முகாம்களை அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக நடத்த வேண்டும்

கவலை தருகிறது

கவலை தருகிறது

ஆர்டிபிசிஆர் சோதனையை இன்னமும் அதிகப்படுத்த வேண்டும். ஏற்கனவே எடுத்த சோதனைகளையும் இப்போது எடுக்கும் சோதனைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் குறைவாக உள்ளது. இப்போது கவலை அளிக்க கூடிய வகையில ஒரு நாள் கொரோனா சோதனையில் 20 சதவீதம் வரை நோயாளிகள் இருக்கிறார்கள் தினமும 3 ஆயிரம் பேரை பாதிக்கப்படுகிறார்கள். 3 நாளில் ஒரு லட்சம் நோயாளிகள் வந்துவிடுவார்கள் என்கிற நிலை உள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

சிடி ஸ்கேன்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். சோதனையில் நெகட்டிவ் என்றாலும் சிடி ஸ்கேனில் நுரையிரல் பாதிப்பு அதிகம் சிலருக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே அவர்களையும் கொரோனா பாதித்தவர்களாக கருதி சிகிச்சை அளிக்க வேண்டும்.

பொதுவான மருந்து

பொதுவான மருந்து

அதிகமான ஸ்டீராய்டு மருந்து கொடுப்பதால் கரும் புஞ்சை தொற்று ஏற்படுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். எனவே நோயாளிகளுக்கு தமிழகம் முழுவதும் அரசு பொதுவான அளவில் மருந்து கொடுக்கும் புரோட்டோகால் முறையை உருவாக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளுடன் வீடியோ கால் மீட்டிங் நடத்தி அவர்களுக்கு சிகிச்சை முறைகுறித்து விளக்க வேண்டும்.

ஆக்சிஜன் பெட் யாருக்கு

ஆக்சிஜன் பெட் யாருக்கு

ஆக்சிஜன் வசதி உள்பட அனைத்து வசதிகளை உள்ளடக்கிய பிரேத்யேக மருத்துவமனைகளை அதிகம் அரசு உருவாக்க வேண்டும். கிண்டி கிங்க்ஸ் மருத்துவனை போல் உருவாக்க வேண்டும். கொரோனாவிற்கு என்று பிரத்யேமாக மாற்றப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையைப் போல் உருவாக்க வேண்டும். ஆக்சிஜன் பெட் வசதி யாருக்கு தேவை என்பதை நிர்ணயம் செய்ய மாவட்டம் தோறும் மருத்துவக்குழுக்களை உருவாக்க வேண்டும். இந்த குழு முதலில் பரிசோதித்து யாருக்கெல்லாம் ஆக்சிஜன் பெட் தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் 92 சதவீதம் ஆக்சிஜன் உள்ளவர், ஆக்சிஜன் பெட்டை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க முடியும். இதன் மூலம் 60 அல்லது 70 சதவீதம் ஆக்சிஜன் பெட் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்" இவ்வாறு கூறினார்.

English summary
Chief Minister MK Stalin has announced a full curfew to control the spread of corona in Tamil Nadu. Earlier, the chief minister convened an all-party meeting and held consultations on the issue. Former AIADMK minister Vijayabaskar, who then took part in the opposition AIADMK, has suggested five important things.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X