EXCLUSIVE அதிமுகவில் பிரச்சினையில்ல நடப்பது ‘ஆபரேசன்’! கிளைமாக்ஸ பாருங்க! சொல்வது ‘டாக்டர்’ பரமசிவம்
சென்னை : அதிமுகவில் தற்போது நடப்பது பிரச்சனை இல்லை எனவும் அதிமுகவில் உடைந்த பாகங்களை சரி செய்யும் அறுவைச் சிகிச்சை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிமுக பூரண குணமடையும் என அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் விபிபி பரமசிவம் கூறியுள்ளார்.
Recommended Video

அதிமுகவை பொருத்தவரை நிலைமை சற்று தீவிரமாகவே இருக்கிறது என்று கூறலாம். அந்த அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
அதிமுக பொதுக்குழு செயற்குழு எடுத்த முடிவுகள் செல்லாது என நீதிமன்றத்தில் ஓ .பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்த நிலையில் அவர் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கடும் பின்னடைவை சந்தித்தாலும் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து ஒன்றிய செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னாள் நிர்வாகிகள் என பலரும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவில் என்னதான் நடக்கிறது என்பது குறித்து அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான மருத்துவர் விபிபி பரமசிவம் ஒன் இந்தியா தமிழிடம் பல பிரத்தியேக தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

விபிபி பரமசிவம்
இது தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,"மருத்துவர் என்ற முறையில் அதிமுகவில் தற்போது அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. எப்படி ஒரு விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றுவோமோ அதேபோல அதிமுகவை நிச்சயம் காப்பாற்றுவோம். அவ்வாறு சிகிச்சை அளிக்கும் போது எலும்புகள் உடையும், ரத்தம் வீணாகும். ஆனாலும் அதையெல்லாம் தாண்டி மீண்டும் உடல் எப்படி புது பொலிவு பெற்று மீண்டெழுந்து வருகிறதோ, அதேபோல அதிமுக நிச்சயம் மீண்டெழும் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவராக செயல்பட்டு அதிமுகவை நிச்சயம் மீட்டெடுப்பார்.

அணிகளுக்கு என்ன காரணம்?
அதிமுகவில் தற்போது பல்வேறு அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள் அதற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு," அதிகார ஆசை தான் காரணம். சசிகலாவும் டிடிவி தினகரனும் அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என நினைத்தார்கள். அவர்களை தொண்டர்களே கட்சியை விட்டு தற்போது விலக்கி வைத்துள்ளனர். அதேபோல ஓ.,பன்னீர்செல்வம் அதிகார ஆசை காரணமாக தொண்டர்களின் எண்ணங்களுக்கு மாறாக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே அவர் தற்போது தொண்டர்களாலே ஓரம் கட்டப்பட்டுள்ளார். இனிவரும் காலங்களில் தொண்டர்கள் எண்ணத்துக்கு மாறாக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கும் இதே தான். ஏனென்றால் தொண்டர்களுக்கான கட்சி அதிமுக. தொண்டர்கள் எடுப்பதுதான் முடிவு. தொண்டர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டதால் தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் ஒற்றை தலைமையாக அதிமுகவின் பொதுச்செயலாளராக வரவேண்டும் என அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓபிஎஸ்ஐ அதிமுகவில் இருந்து ஒதுக்க என்ன காரணம்? என்ற கேள்விக்கு "சுயநலம் ஒன்றே காரணம் அதிமுகவை பொறுத்தவரை சுயநலவாதிகளுக்கு இங்கு இடம் இல்லை. தானும் தன் மகனும் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டார். குறிப்பாக அதிமுகவில் திமுக எதிர்ப்பு என்ற பிரதான கோரிக்கையில் இருந்து அவர் விலகி விட்டார். அவர் வெளிப்படையாக முதல்வரை பாராட்டுவது அவரது மகன் திமுக தலைவரை சந்திப்பது என திமுகவுடன் இணக்கமாக செயல்பட்டது தொண்டர்களுக்கே பிடிக்கவில்லை. மேலும் மக்களவைத் தேர்தலில் மகனை மட்டும் வெற்றி பெற வைத்தால் போதும் என்ற நோக்கிலேயே ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டார். இதன் காரணமாகவே அவர் தற்போது கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு இருக்கிறார். இது அதிமுகவினர் எடுத்த முடிவு அல்ல அவராகவே தானாக எடுத்துக் கொண்ட முடிவு. இதற்கு அவர் மட்டுமே முழு பொறுப்பு. யாரையும் குற்றம் சொல்ல முடியாது. குற்றம் சொல்லும் தகுதியையும் அவர் இழந்து விட்டார்."

கிளைமேக்ஸ் தான் என்ன?
ஏற்கனவே இரு பொதுக்குழுவை பார்த்துவிட்டாகிவிட்டது. மீண்டும் ஒரு பொதுக்குழு என்றால் எப்படி? அதிமுகவில் கிளைமாக்ஸ் தான் என்ன? என்ற கேள்விக்கு "ஏற்கனவே பொதுக்குழுவில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டதோ. அதே முடிவுகள் தான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு நடத்தப்படும் பொதுக்குழுவிலும் எடுக்கப்படும் .அது அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்து கட்சிக்கு துரோகம் செய்தவர்களை கட்சியை விட்டு விரட்டுவது தான். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நிச்சயமாக அதிமுகவில் நடக்கும் தற்போதைய நிகழ்வில் நல்ல கிளைமாக்ஸ் இருக்கும். அது எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதும், கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்கள் மீண்டும் நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று உலா வருவதும் தான்" என்றார்.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications