நான்கு திருமணம் செய்த சவுமியாவை காதலித்த உடுப்பி தொழிலதிபர்.. கனவிலும் நினைக்காத விந்தை
சென்னை: மூன்று பேரை மணந்து விவாகரத்து செய்த பெண்ணை, திருமணம் செய்த இளம் தொழிலதிபர் திருமணமான 12 நாளில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உடுப்பியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதற்கு நடுவில், அந்த பெண்ணாமல் ஏற்கனவே பாதிக்கப்பட்ட இன்னொரு இளைஞரும் போலீசாரிடம் புகார்களை அடுக்கியுள்ளது அதற்கு மேல் பரபரப்பை தந்து வருகிறது.
உடுப்பி மாவட்டம் நெல்யாடியை சேர்ந்தவர் 30 வயதான தொழிலதிபர் சுதீப், மங்களூரை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சவுமியாவை காதலித்து கடந்த பிப்ரவரி 17-ம் தேதி திருமணம் செய்துகொண்டார்..

சவுமியாவுக்கு இது 4-வது திருமணம்.. ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றவர்.. இவர்களின் திருமணத்திற்கு சுதீப்பின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.. இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது..
உடுப்பி சவுமியா
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சுதீப் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.. இதனால் மனம் உடைந்த அவர், கடந்த மாதம் 22-ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.. உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிறகு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 29-ம் தேதி சுதீப் பரிதாபமாக உயிரிழந்தார்.. சுதீப் உயிரிழந்த செய்தியை அறிந்த பிறகும்கூட, அவருடைய உடலைப் பார்ப்பதற்கு மனைவி சவுமியா வரவில்லையாம்..
நான்காவது கணவர்
இந்த மரணம் குறித்து சுதீப்பின் அப்பா தாமோதர் கார்கலா நகர போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.. அந்தப் புகாரில், தன்னுடைய மகன் இறப்புக்கு மருமகள் சவுமியா தான் முழு காரணம் என்றும், அவர் கொடுத்த தொடர் மன அழுத்தத்தாலேயே சுதீப் தற்கொலை செய்துகொண்டார் என்றும் தெரிவித்துள்ளார்.. இந்தப் புகாரைத் தொடர்ந்து போலீஸார் சவுமியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்..
இதுகுறித்து சவுமியாவிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அப்போது சவுமியா சொல்லும்போது, "நானும் சுதீப்பும் கடந்த 1 வருஷமாக பழகி வந்தோம்.. சுதீப் தான் என்னை விரும்பி திருமணம் செய்து கொண்டார்.. என்னுடைய கடந்த கால வாழ்க்கை குறித்த அனைத்து உண்மைகளையும் சுதீப்பிடம் முன்பே சொல்லிவிட்டேன்..
குழப்பத்துக்கு மேல் குழப்பம்
சுதீப் சம்மதத்துடன்தான் எங்கள் தான் திருமணம் நடந்தது.. திருமணத்திற்குப் பிறகு நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்.. சுதீப்பின் தற்கொலைக்கு அவருடைய வீட்டார் திருமணத்தை ஏற்காதது தான் காரணமாக இருக்கும்.. என் மீது புகார் அளித்தவர்கள் மீது நானும் புகார் அளிக்கப்போகிறேன்" என்று சவுமியா தெரிவித்துள்ளார்.
இந்த குழப்பத்துக்கு இடையே இன்னொரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.. சவுமியாவால் தானும் பாதிக்கப்பட்டதாக முல்கியைச் சேர்ந்த வேணு ஷெட்டி என்பவர் ஒரு அதிரடிப் புகாரை முன்வைத்துள்ளார்..
சவுமியாவின் உண்மை முகம்
சவுமியாவுக்கு 19 வயதிலேயே முதல் திருமணம் நடந்து விவாகரத்து ஆகிவிட்டதாகவும், அவர் பல இளைஞர்களை திட்டமிட்டு ஏமாற்றி வருவதாகவும் வேணு ஷெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.. கடந்த வருஷம் இன்ஸ்டாகிராம் மூலம் சவுமியாவுடன் பழக்கம் ஏற்பட்டு, நிச்சயதார்த்தம் வரை சென்றதாகவும், ஆனால் சவுமியாவின் உண்மை முகம் தெரிந்த பிறகு அந்தத் திருமணத்தை நிறுத்தியதால் தான் உயிர் பிழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்..
சவுமியா மிகவும் மோசமானவர்.. ஆண்களிடம் பணத்தைப் பறிப்பதே அவருடைய நோக்கம் என்றெல்லாம் வேணு பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளார்.. இப்போது போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து கொண்டிருக்கிறார்களாம்..!!
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications