சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரான்ஸ் ரசிகர்கள் “சங்கியாம்”.. அர்ஜெண்டினாவை “திராவிடம்” விரும்புமாம் -வே.மதிமாறன் சொல்லும் காரணம்

Google Oneindia Tamil News

சென்னை: கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து மீம்ஸ் போட்டு இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் தொடங்கியது. மிகச்சிறிய நாடான கத்தார், பெரும் பொருட் செலவை கொண்டு இந்த தொடருக்கான ஏற்பாடுகளை செய்ததது.

தகுதிச்சுற்று போட்டிகள் நிறைவடைந்து 32 அணிகள் குரூப் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு சர்வதேச கால்பந்து அணிகள் இதில் விளையாடி வந்தனன. குரூப் ஏவில் கத்தார், ஈகுவடார், செனெகல், நெதர்லாந்து அணிகளும் இடம்பெற்றன.

லிப்ட் கேட்டு வந்த கால்பந்து சூறாவளி! வெறும் 23 வயசு! உலகையே தன் பக்கம் திருப்பிய எம்பாபே! யார் இவர் லிப்ட் கேட்டு வந்த கால்பந்து சூறாவளி! வெறும் 23 வயசு! உலகையே தன் பக்கம் திருப்பிய எம்பாபே! யார் இவர்

 குரூப் சுற்று

குரூப் சுற்று

பி பிரிவில் அமெரிக்கா, வேல்ஸ், இங்கிலாந்து, ஈரான் அணிகளும், சி பிரிவில் அர்ஜெண்டினா, போலந்து, சவூதி அரேபியா, மெக்சிகோ அணிகளும், டி பிரிவில் பிரான்ஸ், துனீசியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் அணிகளிம், இ பிரிவில் ஸ்பெயின், ஜெர்மனி, கோஸ்டா ரிகா, ஜப்பான் அணிகளும் விளையாடின.

 சூப்பர் 16 சுற்று

சூப்பர் 16 சுற்று

குரூப் எஃப் பிரிவில் மொராக்கோ, குரேஷியா, பெல்ஜியம், கனடா ஆகிய அணிகளும், ஜி பிரிவில் பிரேசில், கேமரூன், செர்பியா, சுவிட்சர்லாந்து அணிகளும், எச் பிரிவில் தென் கொரியா, போர்சுகல், கானா, உருகுவே அணிகள் விளையாடினர். இதில் ஒரு குழுவில் இருந்து 2 அணிகள் லிருந்து சூப்பர் 16 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன.

 காலிறுதி சுற்று

காலிறுதி சுற்று

இதில் மொராக்கோ, ஸ்பெயின், போர்சுகல், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், போலந்து, இங்கிலாந்து, செனகல், ஜப்பான், குரேஷியா, பிரேசில், தென் கொரியா, ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன. இதில் அர்ஜெண்டினா, இங்கிலாந்து, மொராக்கோ, குரோஷியா, பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல், நெதர்லாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

 அரையிறுதி சுற்று

அரையிறுதி சுற்று

இதில் அர்ஜெண்டினா, மொராக்கோ, குரோஷியா, பிரான்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி அடைந்தது. இதில் குரோஷியாவை வீழ்த்தி அர்ஜெண்டினா இறுதி சுற்றுக்கு முன்னேறியது. 2 வது அரையிறுதியில் மொராக்கோ அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

 அர்ஜெண்டினா சாம்பியன்

அர்ஜெண்டினா சாம்பியன்

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல் பாதியிலேயே அர்ஜெண்டினா 2 கோல்களை விளாசி ஆதிக்கம் செலுத்தியது. இந்த நிலையில் 2 வது பகுதி நேர ஆட்டத்தில் பிரான்ஸ் 2 கோல்களை விளாசி அசத்தியது. இதனால் சமநிலையில் போட்டி முடிய, ஆட்ட நேரம் அதிகரிக்கப்பட்டது. அதிலும் 2 அணிகளும் தலா ஒரு கோல் விளாசி பெனாலிட்டி கிக் முறைப்படி அர்ஜெண்டினா வெற்றிபெற்றது.

 ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இதனை உலகம் முழுவதும் உள்ள அர்ஜெண்டினா, மெஸ்ஸி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதேபோல், பிரான்ஸ் ரசிகர்கள் தங்கள் வேதனையை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக ஆதரவாளரும் பேச்சாளருமான வே.மதிமாறன் பிரான்ஸ் ரசிகர்களை சங்கிகள் என்று பதிவிட்டு உள்ளது விவாதப் பொருளாகி உள்ளது.

 வே மதிமாறன் கருத்து

வே மதிமாறன் கருத்து

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "திராவிடம் அர்ஜெண்டினா வெற்றிபெறனும்னு விரும்பும். பரம்பரை சங்கிகள் பிரான்ஸ் எப்படியாவது ஜெயிக்கனும்னு வேண்டும். சர்வதேச அரசியல் கண்ணோட்டதிலும் இருக்கிறது திராவிட ஆரிய யுத்தம்." என்று பதிவிட்டு உள்ளார். அடுத்தடுத்த 2 பதிவுகள், "Rafale Watch தோற்றது." என்றும், "உலகப் கோப்பை கால்பந்துப் போட்டியில் கேரளா வென்றது." எனவும் அவர் கூறி உள்ளார்.

English summary
DMK supporter Ve Mathimaran has said that Sanghis will want France to win somehow, and Dravidians want Argentina to win.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X