போலி விளம்பரம் மூலம் மோசடி! கல்வியை விளம்பரமாக்குவது நல்லதில்லை! ட்விட்டரில் சூடான நடிகர் சூரி..!
சென்னை : தனது அறக்கட்டளையின் பெயரில் பொறியியல் மற்றும் கலை கல்லூரியில் சேரும் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச உதவித்தொகை வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் விளம்பரம் போலியானது எனவும் பொதுமக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் என நடிகர் சூரி கூறியுள்ளார்
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'அசுரன்' படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் படத்திற்கு "விடுதலை" என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் 4வது கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமமான சிறுமலையில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் சூரி பங்கேற்று மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

போலி விளம்பரம்
இந்நிலையில் தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து கல்லூரியில் மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதனால் பல கல்லூரி நிறுவனங்கள் தங்களது மாணவர் சேர்க்கை குறித்த விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் LM கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் நடிகர் சூரியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சூரி
அதில், 2022 - 23ம் ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்றும் இது முற்றிலும் இலவசம் என விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இலவச கல்வி உதவித் தொகையும் வழங்கப்படும் என்றும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விளம்பரம் போலியானது எனவும் பொதுமக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் என நடிகர் சூரி கூறியுள்ளார்.

தொடர்பு இல்லை
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,"இந்த விளம்பரத்துக்கும், எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த திரைப்படம் நான் சென்ற ஒரு நிகழ்வில் எடுக்கப்பட்டது. அதை வைத்து இப்படி ஒரு விளம்பரத்தை உருவாக்கியுள்ளனர். விளம்பரம் செய்த நபர்களை அழைத்து இப்படி தவறான விளம்பரம் தர வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறோம்.

சட்டப்படி நடவடிக்கை
மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நங்கள் செய்யும் கல்வி உதவிகள் தனிப்பட்ட முறையில் செய்து வருகிறோம், இந்த நிகழ்வுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கல்வி உதவியின் பெயரால் இப்படி தவறான விளம்பரம் தந்து புனிதமான கல்வியை விளம்பரம் ஆக்குவது இந்த சமுதாயத்திற்கு என்றுமே நல்லதில்லை" என பதிவிட்டுள்ளார்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications