எந்த ஆட்சி நடந்தாலும் எஸ்வி சேகர் தர்பார்தான்.. எடப்பாடி, ஸ்டாலின் வரிசையில் தவெக அமைச்சர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகரின் கோரிக்கையை ஏற்று, ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் ஆட்டிசம் பாதித்த மகளுக்கு உடனடி மருத்துவ சிகிச்சைக்கு தவெக அரசின் அமைச்சர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். முந்தைய அதிமுக, திமுக ஆட்சி காலங்களிலும் அதிகார மையத்திற்கு மிக நெருக்கமாக இருந்தார் எஸ்.வி.சேகர்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது, எஸ்.வி.சேகர் வாங்கிய ஆவின் பால் பாக்கெட் கெட்டுப்போன நிலையில் உடனடியாக அவரது வீட்டுக்கு புதிய பால் பாக்கெட்டுகளை கொடுத்தது ஆவின். கடந்த திமுக ஆட்சியில், எஸ்.வி.சேகரின் அப்பா வெங்கட்ராமன் பெயரை தெருவிற்குச் சூட்டியிருந்தார் அன்றைய முதல்வர் ஸ்டாலின்.

From AIADMK and DMK to TVK SVe Sekar s Appeal Continues to Receive Swift Government Response

தெருவுக்கு எஸ்.வி.சேகர் அப்பா பெயர்

நடிகர் எஸ்.வி.சேகரின் நாடகப்பிரியா குழுவின் 50-வது ஆண்டு விழாவில் அன்றைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய எஸ்.வி.சேகர், "நான் முதல்வரிடம் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டது. எனது தந்தையாரின் நினைவை போற்றும் வகையில் நான் வசிக்கும் மந்தைவெளியில் உள்ள ஐந்தாவது டிரஸ்ட் கிராஸ் தெருவுக்கு அவரது பெயரை வைக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

அதே மேடையில் பேசிய மு.க.ஸ்டாலின், "எஸ்.வி.சேகர் எந்த கட்சியில் இருந்தாலும் சரி. அவர் நம்ம கட்சி. கலைஞரை அழைத்து நாடகம் நடத்தியவர் அவர். இன்று 7,000வது நாடகத்துக்கு கலைஞர் மகனை அழைத்து வந்துள்ளார்.‌ பாசம் என்றால், அரசியல் பாசம் அல்ல, அது கலை பாசம். கலைஞர் எத்தனை பேருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து, அவர்கள் காத்திருந்தாலும், எஸ்.வி.சேகர் வந்து விட்டால், அவரிடம் தான் முதலில் பேசுவார்.

அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, எங்களது மனுக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட, எஸ்.வி.சேகர் மனுக்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார். எஸ்.வி.சேகரின் கோரிக்கையை ஏற்று, அவர் வசிக்கும் தெருவுக்கு அவரது தந்தையார் பெயர் சூட்டப்படும் என உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, எஸ்.வெங்கட்ராமன் தெரு என பெயர் சூட்டப்பட்டது.

பால் பாக்கெட்

அதிமுக ஆட்சி காலத்தில், தனது வீட்டில் வாங்கிய ஆவின் பால் கெட்டுப் போனதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மென்ஷன் செய்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் எஸ்வி சேகர். "காலையில் வாங்கிய ஆவின் பால் 13 பாக்கெட்டுகளில் 9 பாக்கெட்டுகள் பால் குக்கரில் காய்ச்சும் போது திரிந்து விட்டது. வீட்டில் 90 வயது தாயார், 7 வயது 2 வயது குழந்தைகள் உள்ளனர். நான் என்ன செய்வது" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு புகார் செய்ததும், அவருக்கு உடனடியாக பால் பாக்கெட் மாற்றி தரப்பட்டது. எஸ்வி சேகர் பதிவு செய்த 3 மணி நேரத்துக்குள் 9 புதிய double toned பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகத்திலிருந்து ஒரு அதிகாரி வீட்டிற்கே சென்று மாற்றிக் கொடுத்தார். அதனைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தும் பதிவிட்டார் எஸ்வி சேகர்.

தவெக ஆட்சியிலும்

இப்படி எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எஸ்.வி.சேகருக்கு செம கவனிப்பு நடப்பது வழக்கம். அந்தவகையில், தற்போது தவெக ஆட்சியிலும் எஸ்.வி.சேகர் குரலுக்கு மவுசு அதிகம் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. எஸ்.வி.சேகர் வழக்கமாக நடைபயிற்சி செல்லும் தொல்காப்பியர் பூங்காவில், அமைச்சர்கள் வன்னி அரசு, விக்னேஷ் ஆகியோரிடம் அவர் வைத்த கோரிக்கை உடனடியாக நிறைவேறியுள்ளது.

இதுதொடர்பாக எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ள பதிவில், "என் நன்றியும் வாழ்த்துகளும். ஒர் ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டிசம் பாதித்த மகள் (23) உடனடி மருத்துவ சிகிச்சைக்காக என் நண்பர் அமைச்சர் வன்னிஅரசு, அமைச்சர் விக்னேஷ் இருவரையும் காலையில் நடைபயிற்சியில் பார்த்த போது சொன்னேன். இருவரின் உடனடி நடவடிக்கையால் ஸ்டான்லியில் சிகிச்சை ஆரம்பம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+